இந்தியில் 115 படங்களுக்குமேல் தயாரித்த பாம்பே டாக்கீஸ் ஸ்டுடியோ "மகாநாயகன்' திரைப் படத்தின் மூலமாக தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் தன் கிளையை தொடங்குகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mahanayagan.jpg)
இந்தியில் "ராஸ்ட்ரபுத்திரா', சமஸ்கிருதத்தில் ""அகம்பிரம்மாஸ்மி'' படங்களை இயக்கிய ஆசாத் "மகாநாயகன்' திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடிக்கிறார். அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார்.
""சுதந்திர போராட்டத்தில் புரட்சியை விதைத்தவர்களில் முக்கியமானவர் சந்திரசேகர் ஆசாத். இப்போதைய காலகட்டத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்லும் படமாக "மகாநாயகன்' இருக்கும்'' என கூறுகிறார் இயக்குநர் ஆசாத்.
""வடமொழி சினிமாவுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. எனவேதான் "மகாநாயகன்' திரைப்படத்தை முதலில் தமிழில் வெளியிட முடிவு செய்துள்ளேன். அடுத்து கேரளா, ஆந்திரா மொழிகளில் "மகாநாயகன்' நேரடி படமாக வெளியாகும்.
தமிழ் மொழியில் முதலில் வெளியிட காரணம் எனது பாட்டி மயிலாப்பூரை சேர்ந்தவர். தமிழ்தான் என் பூர்வீகம். எனவேதான் முதலில் தமிழ்நாட்டில் வெளியிட முடிவு செய்துள்ளேன்'' என்கிறார் கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கி இசையமைத்து எடிட்டிங்கும் செய்யும் ஆசாத். தயாரிப்பு: காமினி துபே.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/mahanayagan-t.jpg)