விஜய் நடித்த "மாஸ்டர்' படம் தற்போதைய கொரோனா நிலவரப்படி ஏப்ரல் மாத கடைசியிலோ மே முதல் வாரத்திலோ ரிலீசாகலாம் அதேதேதியில் ஆர்.கே. சுரேஷ், ராம்கி இணைந்து நடித்த "வேட்டைநாய்' படமும் திரைக்குவர இருக்கிறது. இதற்குமுன் விஜய்யின் "சர்க்கார்' படத்துடன் ஆர்.கே. சுரேஷ் நடித்த "பில்லா பாண்டி' படம் மோதியது குறிப்பிடத்தக்கது.
"வேட்டை நாய்' படத்தை இயக்கியிருக்கும் எஸ். ஜெய்சங்கர், ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி "மன்னாரு' படத்தை இயக்கியவர். "வேட்டை நாய்' இவரது இரண்டாவது படம்.
நாயகியாக "கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும்போது, ""படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன்.
ஆனால் அடிப்படையில் நல்லவன்தான். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது.
அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை, தான் யார்? என்று உணர வைக்கிறாள்.
இந்தக்கதையை பின்னணியாக வைத்து அனைத்து அம்சங்களும் கலந்த பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த படமாக "வேட்டைநாய்' உருவாகியிருக்கிறது'' என்கிறார்.