அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் "திருவாளர் பஞ்சாங்கம்.' இப்படத்தில் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/urvarsi.jpg)
ஒளிப்பதிவு காசி விஷ்வா, இசை ஜேவி மற்றும் நரேஷ், படத்தொகுப்பு நாகராஜ், ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு- இப்படத்தைப் பற்றி இயக்குநர் மலர்விழி நடேசன் கூறுகையில்...
""இப்படத்தில் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் "காதல்' சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் "ஆடுகளம்' நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம். பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
""படித்து பட்டம்பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு சராசரி வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவற்றின்மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான்.
திடீரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தைப் பார்த்து அந்த பிரச்சினையில் இருந்து வெளிவருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாட்கள் பயணம்தான் இப்படம்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/urvarsi-t.jpg)