"பாப்டா' நிறுவனம்மூலம் "கொலைகாரன்' படத்தை தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின்மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார்.

Advertisment

அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬

her

"கொலைகாரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல், நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும், பின்னர் மேடையேறி எல்லாரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார் விஜய் ஆண்டனி.

நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர், இருவரும் "கொலைகாரன்' படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றாற்போல் நடனமாடினர்.

"கொலைகாரன்' திரைப்படம் தெலுங்கில் "கில்லர்' எனும் பெயரில் வெளியாகவுள்ளது.

Advertisment