"சுந்தரபாண்டியன், "தர்மதுரை', "பூஜை', "ஜிகர்தண்டா', "தெறி' இப்போது "பிகில்' போன்ற படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் வில்ல னாகவும் நடித்தவர் சௌந்தர் ராஜா. தனது பிறந்த தினத்தை முன்னிட்டு (11-8) பனை விதைகளை நட்டதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

பனைமரத்தின் பயன்கள் பலருக்குத் தெரியாது. அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வறட்சியையும் தாக்குப்பிடித்து, மற்ற எல்லா வளங்களும் வற்றி வறண்டு போன பிறகும்கூட மனித இனத்தைக் காப்பாற்றி பயன்தரக்கூடியது. அதனைக் காக்கும்விதமாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரிலுள்ள கண்மாய்க் கரை பகுதி களில் நடிகர் சௌந்தர் ராஜா தனது "மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம்' அறக்கட்டளையின் 2-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன் னிட்டு பனை விதைகளை நட்டார்.

Advertisment

ss

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க செயலாளர் வினுபாலு, ரோட்டரி சங்கசெயலாளர் பொன் ரமேஸ், லயன்ஸ் கிளப் பிரேம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளி மாணவர்கள் மற்றும் 58 கிராம கால்வாய் சங்கத்தினர், "மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம்' அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பெண் குழந்தைகள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

""பசுமை ஆர்வலர்கள் உதவியுடன் தமிழகம் முழுவதும் இதேபோல் பனை விதைகளை நட உள்ளோம். ஆர்வத்தோடு செய்யவேண்டும். நான் இந்த பனை விதைகளை நட்டதோடு மட்டுமல்லாமல்; இதனை பராமரிப்பதை சவாலாக எடுத்துள்ளேன். இந்த கண்மாயை சுத்திகரிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்'' என இதயசுத்தியுடன் பேசுகிறார் சௌந்தர் ராஜா.