"மைனா', "சாட்டை', "மொசக் குட்டி', "சவுகார்பேட்டை', "பொட்டு' ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத் தைத் தயாரித்துவருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு "சம்பவம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/event.jpg)
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், "பக்ரீத்' படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குநர் ஏ. வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள்- நடிகை கள் நடித்துவருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் "தளபதி 64' படத்திற்கு "சம்பவம்' என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் பாரி ஜாதம் கூறும்போது, ""நான் "சம்பவம்' என்ற படத்தை இயக்கிவருகிறேன். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்பு களை நடத்திவருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு "சம்பவம்' என்று பெயர் வைத்திருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "சம்பவம்' என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது.
அதனால் விஜய் படம் பற்றிவரும் வதந்திகளை நம்பாதீர்கள்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-12/event-t.jpg)