ஜோதிமுருகன், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் படம் "கண்டதை படிக்காதே.' இவர் ராதாமோகன்
சிம்புதேவன், வேலு பிரபாகரன் போன்ற பிரபல இயக்குநர்களிடம் துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் "கபடம்' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
படம் பற்றி ஜோதிமுருகன் கூறுகையில், ""பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பைக் கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும், படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும்.
அதேமாதிரி இந்தப் படமும் ஹாரர், மர்டர், மிஸ்ட்ரி மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துவிடும்'' என்கிறார்.
படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் தமிழில் "பயமறியான்', "கபடம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், "திருப்பாச்சி' புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார், பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/jothimurugan-t.jpg)