ப் கே. ரவிச்சந்திரன், ஆதம்பாக்கம், சென்னை-88.
எனது நண்பரின் மகள்கள் ஜாதகம் அனுப்பியுள்ளேன் திருமணம், வேலை வாய்ப்பு பற்றிக் கூறவும்.
ஐஸ்வர்யா 5-10-1997-ல் பிறந்தவர். மகர லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். லக்னத் துக்கு நாக தோஷமும், ராசிக்கு செவ்வாய் தோஷமும் உள்ளது. நடப்பு புதன் தசையில் புதன் புக்தி. இதில் திருமணம், பெற்றோர் சொந்தத்தில் அமையும். தனியார் வேலை கிடைக்கும். நாகதோஷ பரிகாரத்துக்கு திருநாகேஸ்வரம் சென்று வணங்கவும். ஸ்ரீவித்யா 9-8-1998-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், லக்னத்துக்கு 8-ல் செவ்வாய்- சற்று கடுமையான தோஷம். ராசிக்கு நாகதோஷம், ஜாதக அமைப்புப்படி, விருப்பத் திருமணம் நடக்கும். நல்ல வேலை கிடைப்பது சிரமம். கிடைத்த வேலையில் முன்னேறிக்கொள்ள வேண்டும். நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி. இதற்குள் திருமணம் நடந்து வேறிடம் செல்வார். இவ்விதம் 8-ஆமிடத்தில் செவ்வாய் உள்ளவர்கள் திருச்சி- திருப்பைஞ்ஞீ- சென்று, கல் வாழை பரிகாரம் செய்யவும்.
ப் சீனிவாசன்.
என் திருமணம், வேலை பற்றிக் கூறவும். தந்தை திடீரென இறந்துவிட்டார். சிரம மாக உள்ளது.
நீங்கள் 4-12-1981-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். தற்போது ஏழரைச்சனி நடக்கிறது. உங்களுக்கு இரண்டு திருமணமாகி, இருவரும் பிரிந்து போய்விட்டார்கள் என எழுதியிருக்கிறீர்கள். உங்கள் 7-ஆம் அதிபதி சுக்கிரன் கேதுவுடன் 3-ஆமிடத்தில் உள்ளார். சனியும் செவ்வாயும் 11-ல் உள்ளனர். 11-ஆம் அதிபதி புதனும், லக் னாதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை. இந்த ஜாதகப்படி நிறைய கல்யாணம் செய்யவில்லை என்றால்தான் ஆச்சர்யம். நடப்பு சனி தசை. இதில் 2024-ஆம் வருடத்துக்குப்பிறகு, உங்கள் தந்தை சார்ந்த கருணை மனுவால், அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய்க்கும் 7-ஆம் அதிபதி சுக்கிரனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் லக்னாதிபதியும், 11-ஆம் அதிபதியும் பரிவர்த்தனை சம்பந்தம் பெறுகின்றன. 2025-க்குள், வேறு ஒரு பெண்ணை மூன்றாவதாக மணம் செய்து கொள்வார். இவ்விதம் கணவன்- மனைவி ஒற்றுமைக் காக ஏங்குவோர், பெரம்பலூர் மாவட்டத்தி லுள்ள நாயகனைப் பிரியாள் எனும் தலம் சென்று வணங்கவேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_62.jpg)
ப் எஸ். லோகநாதன், செங்கல்பட்டு.
என் மகளின் படிப்பு, ஆயுள், உடன் பிறப்பு பற்றிக் கூறவும்.
மகள் கீர்த்திகா 18-2-2022-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். குட்டி சுக்கிர தசை 4 வருடம், 10 மாதம், 20 நாள் நடக்கிறது. லக்னாதிபதி சுக்கிரன் 8-ல் இருந்து தசை நடத்துகிறார். எனவே சுக்கிர தசை முடியும்வரை, குழந்தைக்கு ஏதாவது மருத்துவச் செலவு இருக்கும். குழந்தையின் உடன்பிறப்பு பற்றி, நீங்களும் உங்கள் மனைவியும் முடிவுசெய்து கொள்ளவும். இவ்விதம் குட்டி சுக்கிர தசை நடக்கும் போது, குழந்தையை உறவினர்களிடம் கொடுத்து, தத்துக் குழந்தையாக வாங்கிக் கொள்ளவும். (ஒரு வயது குழந்தைகளுக்கெல்லாம், இப்படி ஜாதகப்ப பலன் பார்க்க வேண்டாம்).
ப் சரவண பாண்டியன், செங்கல்பட்டு.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்போது திருமணமாகும்? இன்னும் ஏழு மாதத்தில் அவர் வெளிநாட்டில் வேலையில் சேரவேண்டும். அதற்குள் திருமணம் நடக்குமா? குடும்பமே கண்ணீருடன் கவலையாக இருக்கிறோம்.
மகன் மணிராஜ் 4-9-1994-ல் பிறந்தவர். கும்ப லக்னம், சிம்ம ராசி, மக நடசத்திரம். சனி பார்வை 7-ஆமிடத்திற்கு உள்ளது. அதனால் திருமணம் தடையாகிறது. நடப்பு சூரிய தசையில் குரு புக்தி 2023, ஆகஸ்ட்வரை அதற்குள் திருமணம் நடந்துவிடும். இவ்விதம் திருமணம் ஆகவில்லையே எனத் தவிப்பவர்கள் திருவாரூர்- திருவீழிமிழலை சென்று மாப்பிள்ளை கோல சிவனையும், அம்பாளையும் மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்குவைத்து மாலை சாற்றி வழிபடவேண்டும்.
ப் பாலதண்டபாணி, வடலுர்.
என் மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?
மகன் விஜய கணபதி 31-3-1990-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்தி ரம். ராசியில் சனி, செவ்வாய், ராகு சேர்க்கை. எனவே நடப்பு குரு தசை, கேது புக்திக்குள், 2023, ஜூலை மாதத்திற்குள், தொழில், வேலை பார்க்குமிடத்தில் அவர் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். இந்த விஷயமாக உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் சண்டை வந்து, பின் சமாதானமாகி திருமணம் செய்துவைப்பீர்கள். மகனின் 7-ஆம் அதிபதி செவ்வாய் ராசியில் உச்சமாக வும், அம்சத்தில் நீசமாகவும் உள்ளது. எனவே திருமணமானவுடன், நீங்கள் சற்று விலகியே இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. இவ்விதம் செவ்வாய் சரியாக அமையாத வர்கள் திருப்புனவாயில் சென்று வழிபடவும்.
ப் எம். கார்த்திக், சேலம்.
என்னுடைய மற்றும் மனைவியின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
நீங்கள் 28-1-1991-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். 5-ஆம் அதிபதி 6-ல் மறைவு. 9-ஆம் அதிபதி சூரியன் சனி மற்றும் ராகுவுடன் உள்ளார். பித்ரு தோஷ ஜாதகம். நடப்பு சனி தசை புதன் புக்தி. மனைவி மோகன சுந்தரி 20-8-2001-ல் பிறந்த வர். விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். இவருக்கும் 5-ஆம் அதிபதி குரு, ராகுவுடன் 8-ல் அமர்ந்துள்ளார். எனவே கர்ப்பப்பை கோளாறு இருக்கும். நடப்பு சந்திர தசையில் கேத புக்தி ஆரம்பம். அடுத்து வரும் சுக்கிர புக்தியில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு வரும். கணவருக்கு விந்தணுக்களின் குறையும், மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறும் இருப்பதால், இவர்கள், இப்போதிருந்து, செயற் கைக் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 2025 கடைசிக்குள் குழந்தை வாய்ப்புண்டு. இராமேஸ்வரம் சென்று, பித்ருதோஷ பரிகார பூஜை செய்யவேண்டும்.
ப் பெயர் வெளியிட விரும்பாத வயதான தம்பதி.
எங்கள் இறுதிக் காலம் பற்றிக் கூறவும்.
கணவன் 21-9-1934-ல் பிறந்தவர். துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ஏழரைச் சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசையில் குருபுக்தி 2023 டிசம்பர் வரை. கவனமாக இருக்கவேண்டும். மனைவி 1-3-1938-ல் மகர லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ஏழரைச் சனி நடக்கிறது. நடப்பு சுக்கிர தசையில் புதன் புக்தி 2024, மார்ச்வரை. அடுத்து கேது புக்தி 2025-ல் மே வரை. இந்த காலகட்டங்களில் கவனம் தேவை. தம்பதிகள் இருவரும் மூன்றாம் சுற்று மாரகச் சனியின் பிடியில் உள்ளனர். இவ்விதம் சனியின் பிடியில் உள்ளவர்கள். நாகப்பட்டி னம், காரையூர் சனீஸ்வர வாசல்சென்று, சங்கர நாராயண சிவனையும், தேவி நாரயணி அம்பாளையும், சனீஸ்வரரையும், கால பைரவரையும் தரிசித்து, விருத்த கங்காவில் நீர்தெளித்து வரலாம்.
ப் பழனிச்சாமி, இராஜபாளையம்.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். திருமணம் எப்போது என்று கூறவும்.
மகன் ப. வைரமுத்து 22-5-1993-ல் பிறந்த வர். மிதுன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் செவ்வாய், மேலும் ராசியில் கேது, 7-ல் ராகு உள்ளது. எனவே நாகதோஷ ஜாதகம். செவ்வாய் தோஷமும் உள்ளது. 5, 7-ன் அதிபதிகள் சம்பந்தம் உள்ளதால், காதல் திருமணம் நடக்கும். இவரின் இனத்தில் சற்று வேறு பிரிவில் திருமணம் நடக்கும். 12-ஆமிடத்தில் நான்கு கிரகக் கூட்டணி இருப்பதால், இவரின் விருப்பப்படி திருமணம்செய்து வைத்துவிடவும். இல்லாவிடில் சற்று சந்நியாகிபோல் வாழநேரிடும். நடப்பு குரு தசையில் குரு புக்தி 2025, ஏப்ரல்வரை. அதற் குள் திருமணம் நடக்கும்.
திருமணம் சீக்கிரமாக நடக்க, சோழ வந்தான் அருகில், திருவேடகம் சென்று வழிபடவும்.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/Q&A-t_3.jpg)