ப் கந்தசாமி, பழனி.
எனக்கு வேலை சரிவர கிடைக்க வில்லை. அதனால் திருமணமும் ஆக வில்லை. என் ஜாதகத்தைப் பார்த்து எப் போது வேலை கிடைக்கும்- திருமணம் எப்போது நடக்குமென்று கூறவும்.
நீங்கள் 24-4-1984-ல் பிறந்தவர். துலா லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 2-ல் கேது, 8-ல் ராகு. லக்னத்தில் செவ்வாய், சனி சேர்க்கை. ஒரு காதல் தோல்வியுண்டு. நடப்பு சனி தசையில் சனி புக்தி. இதில் வேலை கிடைத்துவிடும். உங்கள் மகர ராசிக்கு ஏழரைச்சனி உள்ளது. அவர் 2023 ஜனவரியில் கும்ப ராசிக்கு மாறுவார். அதன்பிறகு உங்களுக்குத் திருமணமாகும். உங்கள் திரு மணத்திற்குப்பிறகு, வேலையிலும் முன்னேற் றம் ஏற்படும். சற்று கலப்புமணமாக அமையும். இவ்விதம் சனி தசை மற்றும் ஏழரைச் சனியும் நடப்பவர்கள், அரக்கோணத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலை விலுள்ள மங்கம்மாபேட்டை மங்கள சனீஸ் வரரை வழிபடவும். இங்கு சனீஸ்வரர் திருக்கல்யாணக் கோலத்தில் வீற்றிருக்கிறார். இவரை வணங்குவது சிறப்பு.
ப் ஜெயலட்சுமி, கரூர்.
வீடு விற்பதற்கு மிக முயற்சிக்கிறேன். விற்கவே முடியவில்லை. எப்போது விற்கும்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Q&A_43.jpg)
நீங்கள் 18-9-1949-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். நடப்பு சந்திர தசையில் சுக்கிர புக்தி 2023, ஏப்ரல் வரை. இதற்குள் வீடு விற்றுவிடும். இவ்விதம் வீடு விற்கமுடியாமல் அல்லல் படுபவர்கள், உங்கள் லக்னத்தின் 3-ஆம் பாவத்திற்குரிய கிரக அதிபதியையும், பூமி காரனாகிய செவ்வாயையும், வீட்டைக் குறிக்கும் சுக்கிரனையும் வணங்குவது நல்லது. மேற்கண்ட கும்ப லக்ன ஜாதகர், வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்க வேண்டும். மேலும் வீடு விற்றவுடன் காணிக்கை செலுத்துவதாக முருகருக்கும், குலதெய்வத் துக்கும் வேண்டிக்கொள்ளவும்.
ப் கண்ணன் கேசவன், சென்னை-94.
பத்திரிகை நிருபராக இருந்தேன். தற்போது எல்.ஐ.சி. முகவராக இருக்கி றேன். எதிலும் சரியான வருமானமில்லை. அதனால் திருமணமும் செய்துகொள்ள வில்லை. தம்பியுடன் வசிக்கிறேன். வாழ்க்கை எப்போது சீராகும்?
29-8-1955-ல் பிறந்தவர். மீன லக்னம், தனுசு ராசி, உத்திராட நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் சனி, குரு, புதன் ஆகிய மூன்று கிரகங்களும் உச்சம். சனி எனும் உச்சகிரகம், உச்சம்பெற்ற குருவைப் பார்த்து அதனை நீசமாக்கிவிட்டார். உச்சம்பெற்ற புதன், இரு பாவரிடையே மாட்டிக்கொண்டு, பாவ கர்த்தாரி யோகம் பெற்றுவிட்டார். 8-ல் உச்சம்பெற்ற சனி தசை நடந்துகொண்டுள்ளது. அதிலும் 2022, டிசம்பர் மாதத்திலிருந்து சந்திர புக்தி ஆரம்பம். சனி தசை, சந்திர புக்தி நிறைய இழப்புகளைத் தரும். எனவே ஜாதகர் மிக கவனமாக இருக்கவேண்டும். அனேகமாக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லவேண்டிவரும். இதுபோல் சனி, சந்திர தசாபுக்தி நடப்ப வர்கள். திங்கட்கிழமைதோறும் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். மேலும் 19 மிளகைத் துணியில் கட்டி, சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு நெய்தீபமேற்றவேண்டும். இந்த அன்பர் கோவில் செல்ல முடியவில்லை என்றால், தினமும் கோளறு பதிகம் புத்தகம் வாங்கிப் படிக்கவும்.
ப் ஞான சம்பந்தம், அகரம், திருப்பத்தூர்.
என் மகள் நீட் தேர்வை நான்கு முறை எழுதியுள்ளார். இதுவரை சீட் கிடைக்கவில்லை. கிடைக் குமா- கிடைக்காதா என்று கூறுங்கள்.
மகள் திவ்யா 29-1-2000-ல் பிறந்த வர். மகர லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். மருத்துவப் படிப்பு எனும் எம்.பி.பி.எஸ்ஸில் தேர்வாவதற்கு சில கிரகச் சேர்க்கை அவசியம் தேவை. மேலும் ஏதேனும் ஒரு கிரகம் உச்சமடைந்தால், அது மிகச் சிறப்பு. இந்தப் பெண்ணின் லக்னாதிபதி சனி நீசபங்கம். செவ்வாய், சனி பரிவர்த்தனை. இவர் மருத்துவம் சார்ந்த உயர்கல்வி கற்பார். அனேகமாக அறுவை சிகிச்சையில் உதவும் அனஸ்தீஷியா எனும் மயக்க மருந்தியல் போன்ற மருத்துவக் கல்வியைப் படிக்க இயலும். நடப்பு சனி தசையில் சூரிய புக்தி. கல்வியை முன்னிட்டு வேறிடம் நகர்வார். இவரது வேலை மருத்துவம் சம்பந்தமாக இருக்கும். ஆனால் அது எம்.பி.பி.எஸ்ஸாக இருக்குமென்று கூற இயலாது. இவ்விதம் மருத்துவம் சார்ந்த கல்வி, தொழில் விருந்திக்கு ஸ்ரீ ரங்கநாதரை வழிபடவேண்டும். உங்கள் ஊரிலுள்ள சயன பெரு மாளையும் வணங்குவது சிறப்பு. பெற்றோர்கள் எம்.பி.பி.எஸ்தான் படிக்கவேண்டும் என வற்புறுத் தாமல் இருப்பது மிகச்சிறப்பு.
ப் ரெ. மணிமாறன், வலையப்பட்டி.
என் மகன் பொறியியல் பட்டம் பெற்றுள்ளான். அவனுக்கு அரசுப்பணி கிடைக்குமா? வெளிநாடு செல்லும் யோகமுண்டா? மகள் பி.காம் படித்துக்கொண்டுள்ளார். சி.ஏ படிப்பாரா? அரசுப்பணி கிட்டுமா?
மகன் மதிவாணன் 1-11-1999-ல் பிறந்தவர். கும்ப லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். இந்த ஜாதகத்தில் சனி, சூரியன் இரண்டும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளன. நடப்பு சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி 2023, ஆகஸ்ட் வரை, அதன்பிறகு வரும் ராகு புக்தியில் வெளிநாட்டு வாய்ப்பு வரும். இவருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பில்லை. இவர் நிறைய வருடம் வெளிநாட்டில் வேலையில் இருப்பார். இதுபோல் வேலை கிடைத்து நிரந்தரமாகவும், மேன்மேலும் வளம்பெறவும் சக்கரத்தாழ்வாரை தினமும் சுற்றிவந்து வணங்கவும். சுதர்ஸன அஷ்டகம் பாராயணம் செய்வது நல்லது. மகள் ஆரிய பாப்பாத்தி ஜூலை 2002-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். இவருடை யது காலசர்ப்ப யோக ஜாதகம், நடப்பு குரு தசையில் சனி புக்தி. 2023, செப்டம்பருக்குமேல் புதன் புக்தி ஆரம்பம். இதில் வணிகம், கணக்கு சம்பந்தமான கல்விகற்க ஆரம்பிப்பார். ஆனால் ஒரே முயற்சியில் வெற்றிபெற இயலாது. இரண்டு, மூன்று முயற்சி செய்தால்தான் வெற்றிபெறமுடியும். இவருக்கு செவ்வாயும், புதனும் ஒரே நட்சத்திரத்தில் உள்ளனர். எனவே பலமுறைக்குப்பிறகே பாஸ் செய்யமுடியும். இவ்விதம் கணக்கு சம்பந்த பாடத்தில் நல்ல மதிப்பெண்பெற, நாமக்கல்லிலுள்ள நாமகிரித் தாயாரையும், நரசிம்மப் பெருமாளையும் சுவாதி நட்சத்திரம் வரும்போது வணங்கவேண்டும்.
ப் வி.எஸ். கணேசன், வேலூர்.
என் மகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எதிர்காலம் பற்றிக் கூறவும்.
மகன் கார்த்தி 13-5-1993-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். மகர ராசிக்கு ஏழரைச்சனி நடந்துகொண்டிருக்கிறது. இவரின் லக்னாதி பதி புதன் 8-ல் மறைவு, சனியின் பார்வையில் உள்ளார். நடப்பு குரு தசையில் புதன் புக்தி 2023, ஜனவரிவரை. இப்போது திருமணச் சிக்கலில் உள்ளார். இது அடுத்துவரும் கேது புக்தியிலும் தொடரும். 2024-க்குப்பிறகு வரும் குரு தசை. சுக்கிர புக்தியிலும் மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, தொழில், வாழ்க்கை எல்லாம் சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனாலும் சுக்கிரன் உச்சமானதால் சமாளித்துவிடுவார். இவ்விதம் குரு தசை நடக்கும் ஜாதகர்கள் கும்பகோணம்- திருநள்ளாறு சாலையிலுள்ள திருத்தண்டிகை ஆலயம் சென்று வணங்குவது நல்லது. சிவ அபிஷேகத்திற்குரிய திரவப் பொருட்களை இவர் வாங்கிக்கொடுப்பது நல்லது.
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/Q&A-t_1.jpg)