ப் க. பாலகிருஷ்ணன், சுரண்டை.
எனக்கு 68 வயதாகிறது. ஆயுள்பலம் எப்படி, கவிதை, கட்டுரை, கலைத்துறை பயன் தருமா?
30-1-1955-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். ஜாதகத்தில் சனி உச்சம். எனவே, நல்ல ஆயுள் பலமுள்ள ஜாதகம். குரு உச்சமாகி வக்ரம். மேலும் குருவுக்கு உச்ச சனியின் பார்வை. எனவே, உங்கள் ஜாதகத் தில் குரு இரண்டு விதத்திலும் நீசமாகியுள்ளார். மேலும் நடப்பு குரு தசை, குரு புக்தி. இது 2024 வரை உள்ளது. இக்காலத்தில் நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு எதிர்மறையாகவே நடக்கும். எனவே, தற்போது கலைத்துறை அவ்வளவாக சரிவராது. முடிந்தால் செய்தித் துறையில் சற்று முயற்சி செய்யுங்கள். உங்கள் ஜாதகத்தில், கலைத்துறையைக் குறிக்கும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் பலம் குன்றியுள்ளார். இவ்விதம் குரு பலம்குன்றி, குரு தசை நடப் பவர்கள் மதுரை, சோழ வந்தான் அருகே குருவித் துறை சுயம்புமுர்த்தி குருவை வணங்குவது நலம்.
ப் ரா. விஸ்வநாதன், பண்ருட்டி
எனக்கு மூக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. தற்போது நலம். மேலும் பிரச்சினை வருமா? சொந்த மனையில் வீடுகட்ட முடியுமா?
மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். ராசியில் சந்திரன், குரு, சனி உச்சம். இதில் குருவின் உச்சம் பங்கப்படுகிறது. நடப்பு புதன் தசை. அது 3, 6-ஆம் அதிபதி தசை. எனவே அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் வந்துவந்து போகும். புதன் தசையில் சந்திர புக்தி 2023, அக்டோபர் வரை. அதில் மனையில் கண்டிப்பாக வீடுகட்ட இயலும். 6-ஆமிட புதன் தசை நடக்கும் இவர் போன்ற வர்கள், ஸ்ரீதன்வந்திரி பகவானை வழிபடுவது நல்லது.
ப் சாலினி, புதுச்சேரி.
என் தாய் நான்கு வீடுகளில் வேலை செய்து, என்னை பி.எட்., வரை படிக்க வைத்துள்ளார். எனக்கு ஆசிரியர் பணி அல்லது வேறு அரசுப்பணி கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?
ரிஷப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். குரு, சனி பரிவர்த்தனை, குருவின் நீசத்தை பங்கப்படுத்துகிறது. லக்னத்தில் சூரியன் வர்க்கோத்தமம். நடப்பு ஏழரைச்சனி. குரு தசை நடந்துகொண்டுள்ளது. இதில் சூரிய புக்தி 2022, ஆகஸ்ட்வரை. இதில் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. 2024-ல் செவ்வாய் புக்தியில் திருமணம் நடக்கும். தாய்வழியில் வரன் அமைவார். அரசுப்பணி வேண்டுபவர்கள். விழுப்புரம்- பனங்காட் டீஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை வணங்கவேண்டும்.
ப் என். சண்முகம், மணப்பாறை.
என் மகள் பி.எஸ்ஸி முதலாமாண்டு படிக்கிறார். அஞ்சலக வேலைக்கு முயற்சிசெய்கிறார். கிடைக்குமா? தான் என் முனைப்பு அதிகமாக உள்ளது.
எஸ்.எம். இலக்கியா 13-10-2003-ல் பிறந்த வர். கடக லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் உச்சம். 3-ஆம் அதிபதி புதன் உச்சம். இவ்வாறு 3-ஆம் அதிபதி உச்சம்பெற்ற ஜாதகர்கள் வெகு தைரியசாலிகளாக இருப்பர். நடப்பு செவ்வாய் தசை. இதில் 2023, மார்ச்வரை சூரிய புக்தி. இதில் தகவல் தொடர்புத் துறையில் அரசு சார்பு வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. பெற்றோரிடம் அனுசரணை யாக இருப்பார். செவ்வாய், 8-ஆமிடத்தில் இருந்து தசை நடத்துவதால் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து. முருகரையும், அங்காரகனையும் சிவப்பு மலர்களால் வழிபடவேண்டும்.
ப் எம். ராமச்சந்திரன், ஈரோடு.
என் மகள் சண்முகப்பிரியா எம்.எஸ்.சி., பி.எட் முடித்துள்ளாள் அரசுப் பணி எப்போது கிடைக்கும்?
கடக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம், சனி தசையில் சூரிய புக்தியில் கிடைக்கவாய்ப்புண்டு. தவறினால் சந்திர புக்தி முடிவிற்குள் கிடைக்கும்.
ப் வி. கிருஷ்ணன், ஆரணி.
என் மகன் +2 படித்துள்ளான். அடுத்து எந்தத் துறையில் படிக்கலாம்?
விருச்சிக லக்னம். 7-ல் உள்ள செவ்வாய் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் இஞ்ஜினி யரிங் படிக்கலாம்.
ப் கே. ராஜலட்சுமி, செங்கல்பட்டு.
எனக்கு 65 வயது. சர்க்கரை வியாதி யால் கஷ்டப்படுகிறேன். ஆயுட்காலம் எவ்வளவு?
சர்க்கரை வியாதியை உணவுக்கட்டுப் பாட்டால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதிலும் வேதாத்திரி மகரிஷி யோகத்தாலும் குணப்படுத்த முடியும். கடக லக்னத்தில் சனி இருப்பதால், ஆயுள் குற்றம் வராது. 80 வயது கூறலாம். சந்திரனும் சனியும் பரிவர்த்தனை. மகர ராசி. அட்டமாதிபதி சனி ஜென்மத்தில். குரு பார்வையில்லை. பொருளாதாரப் போராட்டம் வாழ்நாள் முழுவதும் இருக்கத்தான் செய்யும். தியானத்தால் மனநிறைவைப் பெறலாம்.
ப் ஆர். சுப்பிரமணியன், கடலூர்.
என் பெண் ஜாதகத்தில் தோஷம் அதிகமாக இருப்பதால், காலம் கடந்து திருமணம் நடக்குமென்று இங்குள்ள ஜோதிடர் கூறிவிட்டார். எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
மகளுக்கு 21 வயது முடிந்து 22 ஆரம்பம். ரிஷப லக்னம். 2-ல் கேது, 7-ல் சந்திரன் நீசம். 8-ல் ராகு. 9-ல் உள்ள சனியை 6-ல் உள்ள செவ்வாய் பார்க்க, சனியும் செவ்வாயைப் பார்ப்பது கடுமையான தோஷம்தான். ஜோதிடர் சொன்னது உண்மைதான். 25 வயது முடிந்தபிறகுதான் திருமணம் செய்ய வேண்டும்.
ப் டி. கதிரவன், திருநின்றவூர்.
நான் இருபது வருடங்களாக மளிகைக் கடை நடத்துகிறேன். தொழிலில் பெரிய முன்னேற்றமில்லை. மாற்றுத் தொழிலாக சித்த வைத்திய மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று நினைக் கிறேன். அது வெற்றியைத் தருமா?
சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். ராகு 2-ல் இருப்பதால் சேமிப்பு இல்லை. ராகுவுக்கு சித்த வைத்தியம், மருந்து வியாபாரம் பொருத்தமானதுதான்; செய்யலாம்.
ப் எஸ். கோமளா, ஆம்பூர்
. என் ஆயுள் எவ்வளவு? சுமங்கலியாகப் போவேனா? எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள்மூலமாக வீடு வாங்குவேனா?
கடக லக்னத்தில் குரு உச்சம். தீர்க்க சுமங்கலி! 45 வயதுதான் ஆகிறது. அதற்குள் ஆயுளைப் பற்றி சந்தேகம் ஏன்? பிள்ளைகள் முயற்சியால் சொந்த வீட்டு யோகம் அமையும்!
ப் எஸ். ராஜசேகர், காஞ்சிபுரம்.
நான் ஜாதகம் கற்று இலவசமாக சேவை செய்யலாமா? மனைவி பேரில் ஏதாவது தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம்?
ரிஷப லக்னம். 2-ல் ராகு இருப்பதால் ஜோதிடம் கற்கலாம். துலா ராசி. ஜென்மச் சனி ராகுவோடு கூடியிருப்பதால் தற்சமயம் சொந்தத் தொழில் செய்வதால் பயனில்லை. முதலீடு செய்யாமல் எந்தத் தொழிலும் செய்யலாம்.
ப் கே. மாதவன், திருவாரூர்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?
14 வருடமாக சொந்தத் தொழில் செய்கி றேன்; விருத்தியில்லை. எங்களுடைய வீட்டின் பக்கத்தில் அம்மன் இருக்கிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைக்குமா? கன்னி லக்னம், லக்னத்தில் ராகு. கும்ப ராசி, அதில் செவ்வாய். தோஷ ஜாதகம் என்பதால் திருமணம் தடை. 36 வயதாகிறது. இது முடியவேண்டும். 37 வயதில் திருமண நடக்கும். மனைவி வந்தபிறகு தொழில் சிறக் கும். அம்மன் இருக்கும் இடத்தை வாங்க நினைக்காதீர்கள்.
ப் ஆர். ரமேஷ், பனையூர்.
எனது சகோதரி ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், கேது இருப்ப தால் இரு திருமணம் என்கிறார்கள். உண்மையா?
சரண்யா ஜாதகத்தில் 2-ஆமிடம், 8-ஆமிடத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் இருப்பதும், 8-ஆமிடத்தை சனி பார்ப்பதும் தோஷம்தான். குரு 12-ல் மறைவு. இப்படிப் பட்ட ஜாதகிக்கு 25 வயதுக்குமேல் திருமணம் நடந்தால் தோஷமில்லை. முன்னதாக நடந்தால் தோஷம்; பாதிக்கும். ப் என். ராஜாராமன், மதுரை. நான் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல் இருந்தது. இனி குடி போக லாமா? அந்த வீட்டில் இருந்தபோது என் மனைவிக்கு உடல்நல தொந்தரவு ஏற்பட்டது. நீங்கள் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 9-ல் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். மனைவிக்கு கடக லக்னம். அதில் குரு (9-க்குடையவர்) உச்சம். குரு பலம் இருப்பதால் எந்த செய் வினையும் உங்களை அணுகாது. யார் எந்த செய்வினை செய்தாலும் அது உங்களை பாதிக்காது. அடுத்து வரும் குரு புக்தியில் சொந்த வீட்டுக்குப் போகலாம். சொந்த வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் செய்துவிட்டு குடியேறலாம்.
செல்: 94449 61845