சென்ற இதழ் தொடர்ச்சி...
சனி + ராகு
கோட்சார சனியும் ராகுவும் ஒரே ராசியில் இணைந்தோ அல்லது கோட்சார சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் ராகு இருந்தாலோ சனி, ராகு இணைவாகும். சனி, ராகு இருக்கும் ராசிகள் குறிப்பிடும் நாடு, நகரங்கள், ஊர்களில் என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை சுருக்கமாக அறிவோம்.
இந்த நாடுகளில் வறட்சி ஏற்பட்டு பஞ்சம், பட்டினி அதிகமாகும். கலவரங்களால் பாதிக் கப்பட்டு மக்கள் நாடு, நகரங்களைவிட்டு அகதிகள்போல் வெளியேறுவார்கள். புயல், மழை, வெள்ளம் போன்ற பலவிதமான இயற்கைச் சீற்றங்களால் உடமைகளை இழந்து, வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வீதிக்கு வந்துவிடுவார்கள். போதைப் பொருள், கள்ளக்கடத்தல், திருட்டு, விபச்சாரம், சூதாட்டம் போன்ற சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் விருத்தியடையும். இதனைச் செய்பவர்களுக்கு அரசாங்கமே ஆதரவு, பாதுகாப்பு தரும். குற்றம் நியாயமாகும். குற்றவாளிகள் நிரபராதிகளாவார்கள். வாகன விபத்துகள் அதிகமாகும்.
சனி + கேது
கோட்சார சனியும் கேதுவும் ஒரே ராசியில் இணைந்திருந்தாலும் அல்லது கோட்சார சனி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் கேது இருந்தாலும் சனி, கேது இணைவாகும். சனி, கேது இருக்கும் ராசி, அதற்குத் திரிகோண ராசிகள் குறிப்பிடும் நாடு, ஊர்களில் என்னவிதமான நிகழ்வுகள் நடக்குமென்பதை தசுருக்கமாக அறிவோம்.
இந்த நாடுகளில் மருந்தில்லா புதிய புதிய நோய்கள் உருவாகும். மருத்துவம் மந்தகதியை அடையும். அந்த நாடுகளுக்குரிய பாரம்பரிய மருத்துவம், இயற்கை மருத்துவம் மக்களைக் காப்பாற்றும். அரசு மக்களைக் காப்பாற்றா மல் கைவிட்டுவிடும்.
தொழில்துறை முடங்கும். அதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கும். வறுமை அதிகமாகும். தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் அரசாங்கத்தால் போடப் படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. உரிமை கேட்டு தொழிலாளர்கள் போராடு வர். அவர்கள்மீது புதுப்புது வழக்குகள் போடப்படும். உள்நாட்டுக் கலவரங்கள் அதிகமாகும். நீதி நிலைகுலையும். தீர்ப்புகள் பணத்தால் திருடப் படும். பொதுவாக பாமர மக்கள் பாதிப்படைவார்கள்.
ராகு நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் கோட்சார சூரியன் சஞ்சாரம் செய்யும்போது அரசியல் தலைவர் ஒருவருக்கு கண்டமோ, மரணமோ ஏற்படும்.
கேது நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் சூரியன் வரும் காலங்களில் அரசியல் கட்சிகளில் பிளவு, கூட்டணிக் கட்சிகளிடையே பிரிவு உண்டாகும்.
கோட்சார நிலையில் சூரிய னும் கேதுவும் 1, 5, 9-ஆவது ராசி களில் சஞ்சாரம் செய்யும் மாதங் களில் அந்த நாடுகளில் வாழும் பிரபலமான ஒருவர் சட்டச் சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்வார். ஆட்சியில் இருக்கும் தலைவர் களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிவினை ஏற்படலாம்.
சித்தர் பெருமக்கள் தங்கள் அனுபவத்தால் அறிந்து கூறிய இந்த உண்மைகளை ஆய்வு செய்து அறிந்துகொள்ள ஆர்வமுடைய அன்பர்கள், கடந்த காலங்களில் கோட்சார நிலையில் குரு, சனி, ராகு, கேது இணைந் திருக்கும்போது நடந்த நிகழ்வுகளை இயற்கைப் பேரிடர்களை, வரலாறுமூலம் ஆய்வுசெய்தால் இந்த உண்மை புரியும்.
குரு, சனி, ராகு, கேது இணைந்து சஞ்சாரம் செய்யும் காலத்தை அறிந்து, மக்கள் பாதிக்காமல் தடுத்துக்கொள்ளலாம்.
சித்தர்கள் சித்தாந்தம் தெளிவைத் தரும். தெளிவாகத் தெரிந் தாலே சித்தாந்தம்.
செல்: 99441 13267