மீபகாலமாக பத்திரிகைகளில் தற்கொலை சம்பந்தப்பட்ட செய்திகள் அதிகமாக வருகின்றன. இதற்குக் காரணமென்ன?

Advertisment

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால், அவர் எப்போதும் குழப்பத்துடனே இருப்பார். 3-ஆம் பாவாதிபதி சரியில்லாமலிருந்தால், அவருக்கு தைரியமே இருக்காது. பிரச்சினைகள் வரும்போது மனதைத் தளரவிட்டுவிடுவார். அந்தச் சமயத்தில் அஷ்டமாதிபதியின் தசை நடந்தால், தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையே வீண் என்றெண்ணி நொந்துகொள்வார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் உண்டாகும்.

ssஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்து, அதை இன்னொரு பாவகிரகம் பார்த்தால், அவர் வாழ்நாள் முழுவதும் பயத்துடனே இருப்பார். எதையும் செய்வதற்கு அவரிடம் துணிச்சலே இருக்காது.

அவருக்கு 2-ஆம் அதிபதியின் தசையில் சனியின் அந்தரம் வரும்போது, நிறைய குழப்பத்துடன் இருப்பார். நாம் ஏன் வாழவேண்டுமென நினைப்பார். ஆனால், அந்த கிரகத்தை குரு பகவான் பார்த்தால், அவர் ஆழமான மனக்கவலையுடன் இருக்கும்போது, தற்கொலைசெய்யும் எண்ணம் தோன்றும்போது நல்ல நண்பர்கள், நல்ல குருநாதர், நல்ல ஆலோசகர்கள் ஆகியோரால் மனமாற்றம் உண்டாகும். மீண்டும் வாழவேண்டுமென்னும் தீர்மானத்திற்கு வருவார்.

Advertisment

கோட்சாரத்தில் குரு பகவான் 3-ஆமிடத்தில் இருக்கும்போது, அவருக்கு அஷ்டமச்சனி அல்லது ஏழரைச்சனி நடந்தால், அவர் வசிக்கும் இடத்திலேயே விரோதிகள் இருப்பார்கள். வீட்டில் அவரை எல்லாரும் தாழ்த்திப் பேசுவார்கள். பணிசெய்யுமிடத்தில் அவரை மட்டம்தட்டிப் பேசுவார்கள். அதனால், அவர் அங்கிருந்து விலகிவிடவும் தீர்மானிப்பார். சிலர் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.

அவர்களுக்குப் பணவசதி குறையும். மனதில் பலவகையான குழப்பங்கள் இருக்கும். இனிமேல் வாழவே கூடாது என்னும் சிந்தனை மனதில் உண்டாகும்.

ஜாதகத்தில் சந்திரன் லக்னாதிபதியாகி 6, 8, 12-ல் இருந்தால், அவர் எப்போதும் குழப்பத்துடனே இருப்பார். அந்த சந்திரன் தேய்பிறைச் சந்திரனாக இருந்தால், அவரின் மனக்குழப்பம் மேலும் அதிகரிக்கும். அவருக்கு 2-ஆம் அதிபதியின் தசையில் சூரியன் அந்தரம் வரும்போது மனதில் அமைதியே இல்லாமலிருப்பார்.

Advertisment

அப்போது அவருக்கு ஜென்மச்சனி வந்தால், அவர் தான் வசிக்கும் வீட்டைவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என நினைப்பார். வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாமா என்ற சிந்தனைகூட உண்டாகும்.

ஒருவருக்கு புதன் லக்னாதிபதியாகி அஸ்தமனமாக இருந்து, சனி பகவான் 6-ல் வக்ரமாக இருந்தால், அவருக்கு அஷ்டமச்சனி நடக்கும்போது, மனதில் பலவிதக் குழப்பங்கள் உண்டாகும். சாதாரண காய்ச்சல் வந்தால்கூட பயப்படுவார். அவருக்கு அஷ்டமாதிபதியின் தசை நடக்கும்போது, ஏதாவது நோய்வந்து நாம் இறந்துவிடுவோமோ என நினைப்பார். "ஏன் வாழவேண்டும்?' என்ற எண்ணமும் உண்டாகும்.

பிள்ளைகளுக்குப் படிக்கும் காலத்தில் ராகு தசை நடந்தால், அந்த ராகு ஜாதகத்தில் 5, 8, 12-ல் இருந்தால், அவர்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். லக்னாதிபதியும் சந்திரனும் பலவீனமாக இருந்தால், ராகு தசை நடக்கும்போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உண்டாகும்.

ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி, 8-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு படிக்கும் காலத்தில் கோபம் அதிகமாக வரும். மற்றவர்களைத் தாக்கிப் பேசுவார்.

அவருக்கு சந்திர தசை அல்லது புதன் தசை நடந்தால் சிக்கல்களில் மாட்டிக்கொள்வார். அதனால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். வீட்டிலிருந்து வெளியேறிவிடலாமா அல்லது தற்கொலை செய்துகொள்ளலாமா என்றெல் லாம் நினைப்பார்.

ஒருவர் வாழுமிடத்தில், வீட்டின் தெற்கு திசையில் கிணறு இருந்தாலும், படுக்கையறையில் தலைக்குமேல் பரண் இருந்தாலும் அவருக்கு மனதில் எப்போதும் பயம் இருக்கும். சிலநேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் காலையில் கண்விழித்தவுடன், உள்ளங்கைகளை விரித்து, அதில் கடவுள் இருப்பதாக நினைத்துப் பார்க்கவேண்டும். காலையில் குளித்து முடித்து சூரிய பகவானை வணங்கவேண்டும். ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரத்தை வாசிக்கவேண்டும்.

தினமும் காலையில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.

உணவில் காரம், புளிப்பு குறைவாக இருக்கவேண்டும்.

தெற்கு அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும். படிக்கும் பிள்ளைகள் எப்போதும் கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

அடர்த்தியான நீலம், கருப்பு நிற ஆடைகள் அணியக்கூடாது. படுக்கையறையில் சிவப்பு, நீலம், பச்சை வண்ணங்களைத் தவிர்க்கவும். வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு, ஆழ்துளைக் கிணறு இருக்கக்கூடாது.லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

செல்: 98401 11534