சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்னை அலுவலகத்திற்கு ஒரு தாய் தனது இரண்டு மகன்களுடன் நாடியில் பலன் கேட்க வந்தார். பலன் கேட்க வந்த காரணத்தைக் கேட்டேன்.
அந்தத் தாய், "இவர்கள் எனது மகன்கள். இருவரும் எனக்கு இரட்டைக் குழந்தைகளாக ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது மூத்த மகனின் மனைவி, எங்களுடன் பிரச்சினை செய்துவிட்டு மகனையும் அழைத்துக் கொண்டு, தனது தகப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டாள். இளைய மகன் குடும்பம் எங்களுடன் வசித்து வருகிறது.
இந்த இருவருக்கும் பிறந்த நேரம், நட்சத்திரம், லக்னம் என ஜாதகம் ஒன்று போலவே உள்ளது. ஆனால் தொழில், கல்வி, குணம், செயல்கள் என அனைத்தும் ஒன்றுபோல் இல்லாமல் வேறு வேறு விதமாக உள்ளது. ஜாதகம் எழுதியதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டு இருக்குமோ என்ற எண்ணத்தில் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கமுறையில், ஜாதகம் எழுதி வைத்துள் ளேன்'' என்று கூறி இருவருக்குமான நான்கு ஜாதக நோட்டுகளை என் முன்னே வைத்தார்.
"இதுவரை நீங்கள் ஜோதிடர்களைப் பார்த்துப் பலன் கேட்டிருப்பீர்கள். அந்த ஜோதிடர்கள் இந்த நிலைக்கு என்ன காரணம் கூறினார்கள்.''
"நான் நிறைய ஜோதிடர்களைப் பார்த்து விட்டேன். எல்லாரும் கிரகநிலை, தசை, புக்தி, சுக்கிரன் கெட்டுவிட்டது. குரு மறைந்துவிட்டது என்று கிரகங்களுக்கு பலன் கூறினார்களே தவிர, என் மகனின் பிரச்சினை தீர எந்த வழியும் கூறவில்லை. ஆனால் ஒரே ஜாதகத்திற்கு, ஒவ்வொரு ஜோதிடரும் வெவ்வேறு விதமான பலன்களைக் கூறி, பரிகாரங்களையும் கூறினார்கள். அனைத் தையும் செய்து முடித்தோம். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லையே'' என்று கேட்டபோது, பலன் இல்லையென்றால் அது அவரவர் விதி என்று கூறிவிட்டார்கள்.
ஒரு ஜோதிடர் மட்டும், "அம்மா, இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லும் முறை, எந்த வேத முறை கணித ஜோதிடருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏன் என்றால் ஜோதிட நூல்களில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. தங்களிடம் ஜீவநாடியில் பலன் பார்த்தால், அகத்தியர் உங்கள் பிரச்சினை தீர ஏதாவது வழி காட்டுவார்' என்று கூறினார். அவரின் ஆலோசனைப்படிதான் நாடி படிக்க வந்துள்ளேன். அகத்தியர்தான் எங்கள் பிரச்சினை தீர நல்ல வழிகாட்ட வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/twinbabys.jpg)
ஓலையைப் பிரித்தேன், அதில் எழுத்து வடிவாகத் தோன்றிய அகத்தியர், "இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களுக்கு ஜாதகரீதியாக பலன் அறியும் சூட்சும ஜோதிட வழியை, சித்தர்களாகிய நாங்கள் தமிழ் ஜோதிட முறையில் கூறியுள்ளோம். அந்த முறையை இப்போது உனக்குக் கூறுகின்றேன். முதலில் நீ அதைத் தெரிந்துகொள். ஆனால் அவர்களிடம் இந்த ஜோதிட ரகசிய முறைகளை வெளிப்படுத்தாதே, ரகசியமாக வைத்துக்கொள். நாடியில் நான் கூறும் காரணத்தை மட்டும் கூறு' என்று எனக்குக் கட்டளையிட்டார்.
வேத ஜோதிடர்கள், பிறப்பு ஜாதகம் எழுதும்போது, நட்சத்திர பாதத்தைக் கொண்டு ராசியையும், இரண்டு மணி நேரக் கணக்கிணைக் கொண்டு லக்னம் குறித்து, கிரகநிலைளைக் கொண்டு, ஜாதகம் எழுதி தாங்கள் படித்த ஜோதிட நூல்களில் கூறியுள்ள பலன்களை மனப்பாடம் செய்து வைத்து பலன்களைக் கூறுகிறார்கள்.
ஜோதிட தர்மம் என்று ஒரு முறை இருப்பதுபோல், ஜோதிடர்களுக்கென்று தர்ம வழிமுறை உண்டு, ஒரு ஜோதிடன் முதலில் தனது சுய ஜாதகத்தை நன்கு ஆய்வு செய்து, தனது இப்பிறவி விதியை தன் வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமை பலன்களை அறிந்து, தெளிவு பற்று, அதன் பின்பு மற்றவர்களுக்கு சுய அனுபவம்மூலம் பலன் கூறவேண்டும். கலியுகத்தில் இந்த ஜோதிட தர்மம். ஜோதிடர்கள் தர்மம் இவை இரண்டும் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்றார் அகத்தியர்.
அகத்தியர் கூறிய ஜோதிட சூட்சுமங்களில், ஒன்றைப் பற்றி மட்டும் இப்போது அறிவோம். ஒரே ஜாதக அமைப்புடன் பிறக்கும் இரட்டைக் குழந்தை களின் வாழ்க்கை ஒன்றுபோல் அமையாது. இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்து, 8 நிமிடம், 34 வினாடிகள் சென்ற பிறகே இரண்டாவது குழந்தை பிறக்கும். ஒவ்வொரு 8 நிமிடம்- 34 வினாடிகளுக்கு ஒருமுறை கிரகநிலைகள் மாறி, மாறி அமையும். அதனால் பலன்களும் மாறிவிடும். இரு குழந்தைகளின் வாழ்க்கை நிலையும் மாறும் என்பதைப் புரிந்துகொள்.
இந்த பூமியில் பிறக்கும் அனைத்து மனிதர்களுக்கும், லக்னம், ராசி, நட்சத்திரம் ஒன்றுபோல் அமைந்து இருந்தாலும், இந்த பிறப்பு நேரத்தில் ஆதிக்கம் கொண்ட கிரகங்களின் நிலையே விதியை வழி நடத்தும், வாழ்வில் நன்மை தீமைகளை அனுபவிக்கச் செய்யும். அதனால்தான் லக்னமுறையில் கூறும் பலன் நடப்பது இல்லை. நான் உனக்கு கற்பித்த, தமிழ் ஜோதிடமுறையில், இவரின் சரியான பிறந்த நேரத்தை கணித்து, அப்போது ஆதிக்கம் பெற்ற இரு கிரக நிலைமைகளைக் கொண்டு, பலன் அறிந்துபார். அவரின் இப்பிறவி வாழ்க்கை விதிநிலை தெரியும் என்று அகத்தியர் கூறினார்.
இன்னும் ஒரு சூட்சுமத்தைக் கூறுகின்றேன். இந்த இரட்டைக் குழந்தைகளில், இரண் டாவதாகப் பிறப்பவன்தான். முதலில் கருவானவன். முதலில் பிறந்த குழந்தை இரண்டாவதாக கர்ப்பத்தில் உதித்தவன். பிறக்கும்போது இரண்டாவது கருமுதல் குழந்தையாகவும், முதல் கருவில் உருவானது இரண்டாவது குழந்தையாகவும் பிறக்கும். இரட்டையர்களின் பிறப்பின் ரகசியம் இதுதான்.
இவளின் மூத்த மகன் பிரச்சினைக்கு காரணத்தைக் கூறுகின்றேன். அவரின் மனைவி யும், மகளும் மூத்த மகனைவிட்டுப் பிரிந்து சென்றதற்கு, விதியோ, கர்ம வினையோ, பாவ- சாப- பதிவுகளோ காரணம் இல்லை. இந்த தாயின் குணமும், செயலும்தான் காரணம். மகளும், மருமகளும் சேர்ந்து வாழாமல், மகனின் சந்தோஷ வாழ்க்கையை இந்த மாதாவே பிரித்து வைக்கின்றாள். இப்போது என் முன்னே அமர்ந்து, ஒன்றுமே அறியாதவள்போல் அகத்தியனிடம் வழி கேட்கின்றாள்.
இந்த தாய், தனது மூத்த மகனுக்கு, தனது சகோதரனின் மகளை, திருமணம் செய்ய ஆசைப்பட்டாள். ஆனால் மகனோ, மாற்று இனத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்பி அவன் விருப்பம்போல் திருமணம் செய்து கொண்டான். இது தாய்க்கு பிடிக்கவில்லை. மேலும் அவள்மீது வெறுப்பு உண்டானது.
இன்று வரை அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுக்குப் பிறந்த குழந்தை யையும் பேரனாக ஏற்றுக்கொள்ள மனமும் இல்லை.
மருமகள் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து திட்டுவாள். ஏன்? அடிக்கக் கூடச் செய்வாள். மகன் வீட்டில் இருக்கும்போது நல்லவள்போல் நடிப்பாள். மகன் இல்லாத நேரம் எல்லாம், மருமகளுக்கு வீடு நரகம் தான். மாமியார் செய்யும் கொடுமைகளையெல்லாம், கணவனிடம் கூறினால், அவனும் சொல்வதை நம்பி, மனைவிக்கு ஆதரவாகப் பேச மாட்டான். மனைவியைத்தான் திட்டுவான். கணவனின் பாசமும், கணவன் வீட்டார் பாசமும் கிடைக்காததால், இவளின் மனைவியும், குழந்தையும் இவனை விட்டுப் பிரிந்தனர்.
மூத்த மகன் தாயை விட்டுப் பிரிந்து, தன் மனைவி, குழந்தையுடன், தனியே சென்று வசிக்கச் சம்மதித்தால் மனைவி இவனுடன் சேர்ந்து வாழ்வாள். இல்லையேல், விவாகரத்துப் பெற்று, தன் குழந்தையுடன் பிரிந்து சென்று விடுவாள். மகன் தாயைவிட்டுப் பிரிந்தால் மனûவியுடன் வாழலாம். மனைவி தேவையில்லை என்றால் தாயுடன் வாழலாம். தாயா? தாரமா? இவனே முடிவெடுத்துக் கொள்ளட்டும். என்று கூறி அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அந்த தாயிடம் "அம்மா, உங்கள் மூத்த மகன் பிரச்சினைக்கு, முன்பிறவி, பாவ- சாபமோ, கர்மவினை விதியோ, கிரகங் களோ காரணமில்லை. உங்கள் குணமும், செயலும்தான் காரணம் என்று அகத்தியர் கூறுகிறார். உங்களுக்கு இவ்வளவு வயதாகி யும், இன்னும் உங்கள் பிறந்த வீட்டின் மீதும், சகோதரன்மீது பாசம் கொண்டு வாழ்கின்றீர் களே தவிர, உங்கள் மகன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லையே உங்கள் அகங்கார, ஆணவ குணத்தை நீக்கிவிட்டு, மருமகன்மீது அன்பும் பாசமும் கொண்டு வாழுங்கள். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். மகன் வாழ்வில் உண்டான பிரச்சினைகள் தீரும்'' என்று கூறி அனுப்பிவைத்தேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/twinbabys-t.jpg)