முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி, சென்னை- 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்தம்- 4.
செவ்வாய்: அஸ்தம்- 4.
புதன்: அஸ்தம்- 4.
குரு: அவிட்டம்- 2.
சுக்கிரன்: அனுஷம்- 2.
சனி: திருவோணம்- 1.
ராகு: கிருத்திகை- 4.
கேது: அனுஷம்- 2.
கிரக மாற்றம்:
புரட்டாசி 25 (11-10-2021) சனி வக்ர முடிவு. (காலை 9.16).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்
11-10-2021 பகல் 12.55 மணிக்கு தனுசு.
13-10-2021 மாலை 4.05 மணிக்கு மகரம்.
15-10-2021 இரவு 9.15 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மேஷ ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால், எடுக்கும் காரியங்களிலெல்லாம் வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தைரியத்துடன் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவு உண்டாகலாம். உங்கள் ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2-ல் ராகு இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருந்து, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் நன்றாக இருக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும் என்றாலும், குரு 10-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது அவசியம். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வதன்மூலம் மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை இருந்தாலும் பெரிய பாதிப்பிருக்காது. வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் முன்னேற்றம் அடையலாம். விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி வழிபடுவதாலும், லட்சுமி தேவிக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் வாழ்வில் மேன்மை கிட்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். சொந்தமாக வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் அமையும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால், திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் வீடுதேடி வரும். சுபகாரியங்கள் கைகூடும். ராகு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப் பாக இருக்குமென்றாலும் 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வதாலும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு எலுமிச்சைப் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவதாலும் நன்மைகள் பல கிடைக்கும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
இந்த வாரத்தில் மாதக் கோள்களான சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், ஆரோக்கியக் குறைவு உண்டாகலாம். செயல்களில் சுணக்கம் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உடற்பயிற்சி செய்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் சில கிடைத்தாலும், செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் ஆடம்பரத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. குரு, சனி 8-ல் இருப்பதால் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர்கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் துடன் இருப்பது சிறப்பு. மற்றவர்களை நம்பி பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பது, முன்ஜாமின் கையெழுத்து போடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர் களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அசையும்- அசையா சொத்துகளால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்கவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களின்போது கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. முருகன், தட்சிணாமூர்த்தியை வழிபட்டுவந்தால் சுபிட்சமான நிலை ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலன்களை அடைவீர்கள். உங்கள் வலிமை அதிகரிக்கும். எதிரிகள் மிரண்டுபோகுமளவுக்கு உங்கள் முன்னேற்றம் இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5-லும், ராகு லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், சகல சௌபாக்கியங்கள் பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும். உங்களுக்கிருந்த கடன்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தினரிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். திருமணமாகாதவர்களின் கல்யாணக் கனவுகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள்மூலம் உதவிகள் கிடைக்கும். பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர்ப் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனிக்கு எள் தீபமேற்றி வழிபடுவதாலும், சனிப்ரீதியாக ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலைசாற்றி வழிபடுவதாலும் நற்பலன்கள் ஏற்படும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 2-ல் புதன், 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்தவிதத்திலும் பஞ்சமிருக்காது. எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். உங்களது செயல்களுக்குப் பரிபூரண ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வார்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். நீண்டநாட்களாக இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். ராசியாதிபதி சூரியன், செவ்வாயுடன் இணைந்து 2-ல் இருப்பதால் பேச்சைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றும் நேரமென்பதால் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில், வியாபாரரீதியாக கொடுக்கல்- வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் செயல்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். வேலையில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். சிவ வழிபாடு நன்று. சஷ்டியன்று விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 5-ஆமிடத்தில் தனகாரகன் குரு சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கும். பணவரவு சற்று ஏற்ற- இறக்கமாக இருக்கும். என்றாலும், கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால், முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அமையும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறமுடியும். சுக்கிரன் 3-ல் சஞ்சரிப்பதால் வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தியொன்று கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப் பலனைப் பெறமுடியும். மகாவிஷ்ணு, சனிபகவானை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
சூரியன், செவ்வாய் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால், எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தேவையில்லாத அலைச்சல், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படலாம். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவுகள், கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்று. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். எனினும் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. குரு, சனி 4-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பணவரவுகளில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையலாம். வியாபார விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் மிகவும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே இலக்கை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனத்துடன் இருக்கவேண்டும். தெரிந்தவர்களே ஏமாற்றும் நிலை ஏற்படலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால், தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ பெருமானை யும், ராகு காலங்களில் துர்கையம்மனையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சி வரும் நாட்களில் நடக்கும். 3-ல் சனி இருப்பதால் கடந்தகால நெருக்கடி கள் எல்லாம் மறைந்து நிம்மதியடையக்கூடிய வாய்ப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார ஏற்றம் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டா லும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினரை அனுசரித்துச் சென்றால் சாதகமாக செயல்படுவார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். வெளித் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்; லாபம் பெருகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணியில் எதிர்பார்க்கும் கௌரவ மான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வு களையும் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை காணப்படும். எனினும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனமாக இருப்பது நல்லது. தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சளாடை சாற்றி, நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங் கள் கைகூடும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குரு 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். சூரியனும் செவ்வாயும் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை இவ்வாரத்தில் உண்டு. தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும். விநாயகரையும் மகாலட்சுமித் தாயாரையும் வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால், எதைச் செய்தாலும் அதில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். பணவரவுக்குப் பஞ்சம் ஏற்படாது. அதுமட்டுமின்றி ஒருசில எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பெண்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் எதிலும் சிக்கனமாக இருந்து, வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார்- உறவினரின் உதவிகளும் ஒத்துழைப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி ஏற்றங்களைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கடன்களும் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். சனிபகவானுக்கு கருப்புநிற ஆடை சாற்றி, நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடலில் உஷ்ணம் சம்பந்தபட்ட உபாதைகள், உடல் சோர்வு, கை- கால் வலி போன்றவை ஏற்படலாம். ஆரோக்கியக் குறைவால் எதிலும் கவனம் செலுத்தமுடியாத நிலை சிலருக்கு ஏற்படும் என்பதால், உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்று. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். உங்களுடைய செயல்களில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கவும். முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத் துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல் நன்று. அதனால் வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றைக் குறைக்கமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களும் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எனவே எதிலும் கவனத் துடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குரு, சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணவிஷயத்தில் முன்னெச் சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. வீடு, மனை வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வில்வ இலைகளால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, சிவ மந்திரங்கள் சொல்லி வணங்கினால் சங்கடங்கள் விலகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குரு, சனியுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இனிவரும் நாட்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நாட்களாக அமையும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்தமாக வீடு, வாகனங்கள், நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்கள் வழியில் அற்புதமான நற்பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடந்தகால கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை காணப்படும். என்றா லும் சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். எனவே முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நவராத்திரி நாட்களில் பார்வதிதேவியையும், மகாலட்சுமி யையும், துர்கையம்மனையும் வழிபட்டுவந்தால் செல்வநிலை உயரும்; நினைத்த காரியம் நிறைவேறும்.