horoscope

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

Advertisment

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக்கோளான சூரியன் சஞ்சரிப்பதாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் நீங்கள்நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில்காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

Advertisment

வேலையாட்கள் ஆதரவு மிகமிக சிறப்பாகஇருக்கும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப் படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு எடுத்தப்பணிகளை சுலபமாகவும், பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு மிகச்சிறப்பாகவும் செய்து முடிக்கக் கூடியப் பலம் உண்டாகும். உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் நல்லமதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள்உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். மேலும் வளமான பலன்களை நீங்கள்பெற காலபைரவரை வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 1, 5, 6.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் உங்களின் பேச்சுத் திறமையால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள்.

பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு ஜென்ம ராசியில் அமையப்பெற்று 5, 7, 9-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடியஇனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய வாய்ப்புகளும், நெருங்கியவர்களின் உதவியும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல்சூரியன், 12-ல் செவ்வாய்சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்ககூடிய சனி தற்சமயம் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இதுநாள் வரை உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் சற்றுகுறைந்து உங்கள் பொருட் களுக்கு நல்லவிலை கிடைக்கக்கூடிய யோகமும் அதன்மூலம் உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறையக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்தபழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குருபகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாகசெயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடியசெயல்கள் காரணமாக உங்களுக்குகிடைக்கவேண்டிய ஒரு நல்லவாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். ஒருசில நேரங்களில் நீங்கள் எதிலும் நேரடியாக செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சமாளித்து போட்ட முதலை எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 1, 5, 6.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் புதன், லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள்உண்டு. பூர்வீக சொத்துவகையில் இருந்த பிரச்சினைகள் தற்போது விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சனிபகவான்தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்துக்கான வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து அதிகப்படியான லாபங்களை ஈட்டுவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் உங்கள்மீது சொன்னஅவப்பெயர்கள் எல்லாத்தையும் விலக்கி அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள்உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற் கொள்வது நல்லது.வெற்றி தரும் நாட்கள்: 30, 1, 2, 3.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசி அதிபதி சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.சிறப்பான பண வரவுகள் கிடைத்து உங்களின் அனைத்துதேவைகளும் பூர்த்தியாக கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். ஒரு பெரிய மனிதனுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போதுகுறைந்து அமைதியான சூழ்நிலைஉண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் நிமித்தமாக இருந்தசட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து தொழிலில்நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு கூட்டாளி

கள் மூலமாக சாதகமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது, குருபகவானுக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்,அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்-சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடியவாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் எந்த ஒரு செயலிலும் சிறப்பாக செயல்பட்டுபெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, கால பைரவருக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 6.

சந்திராஷ்டமம்: 30-6-2024 காலை 7.34 மணிமுதல் 2-7-2024 பகல் 11.14 மணிவரை.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்ப

தால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கைஅடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பிள்ளைகள்வழியில் தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில்ரீதியாக சில சட்ட சிக்கல்கள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதுநல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள்எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் மேலதிகாரியிடம் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். அதனால் எதிலும் கண்ணும்கருத்துமாக செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 1.

சந்திராஷ்டமம்: 2-7-2024 பகல் 11.14 மணிமுதல் 4-7-2024 பகல் 3.58 மணிவரை.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம்,அனுஷம், கேட்டை)

ராசி அதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் பெறக் கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. உங்களின் பொருளாதாரநிலை மிகமிக சிறப்பாக இருந்து அனைத்து

தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் போன்றவை குறைந்து மன அமைதி ஏற்படக்கூடிய நேரமாகும். பாக்கிய ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும்

சிறப்பாக செயல்பட்டு போட்டமுதலை எளிதில் எடுக்கக் கூடியவாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில்அனுகூலப் பலன் கிட்டுவதுடன் புதிய கிளைகளை நிறுவக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால வேலைப்பளுகுறைந்து எடுத்த பணிகளை சுலபமாக முடிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 1, 2, 3.

சந்திராஷ்டமம்: 4-7-2024 பகல் 3.58 மணிமுதல் 6-7-2024 இரவு 10.34 மணிவரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நேரமாகும். இதுநாள்வரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் கவனத்தோடு செயல்படுவது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளே உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு நண்பர் கள் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்கள்மீது தேவை யற்ற பழிச்சொற்கள் விழலாம். மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் மிகவும் அற்புதமானஅமைப்பாகும். நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் வருகின்ற நாட்களில் கைகூடி மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும். உங்களுக்கு இருந்துவந்த சட்டரீதியான பிரச்சனைகள் எல்லாம் தற்போது குறைந்து பொருளாதார ரீதியாக ஆதாயங்களைப் பெறுவீர்கள். புதன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. ராகு 3-ல் இருப்பதால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகமும் அதன்மூலம் ஆதாயமும் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் அது மட்டுமில்லாமல் அதிகாரியுடைய ஆதரவும் சிறப்பாக இருக்கக்கூடிய நிலை உண்டு. மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு மற்றவருடைய பாராட்டுதலை பெறுவார்கள். உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கால பைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 5, 6.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். நெருங்கியவர்களின் ஆதரவுசிறப்பாக இருப்பதால் ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். ராகு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது, உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தற்போது உங்கள் ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் சற்றுக் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் எதிலும் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். குறிப்பாக தொழில் தொடர்பான விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட நீங்கள் சுலபமாக கையாண்டு எளிதில் செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 1.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. வெகுளித்தனமாகவும் வெளிப்படையாகவும் நீங்கள் பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாகஎடுத்துக்கொண்டு தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகி உங்களின் மன அமைதியை குறைப்பார்கள். உங்களது வேலைப்பளு அதிகரித்து இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ள காலமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நிதானத்தோடு செயல்படுவது தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொது இடங்களில் அதிகம் பேசாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையில்லாத பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, பாம்பு புற்றுக்குப் பால் விடுவதன்மூலம் ஆதாயம் தரக்கூடிய பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4.