னிதன் தன் வாழ்க்கையின் முழுமையான மகிழ்ச்சியை வாழ்க்கைத் துணையிடம் மட்டுமே பெறமுடியும். கணவன்- மனைவியின் அன்பிற்கு இணையாக உலகில் வேறெந்த உறவும் வரமுடியாது. வாழ்க்கைத்துணை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லையென்பது இல்வாழ்க்கையின் சுவையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். "வீட்டுக்கு அடங்காது; உருப்படாது' என்று தண்ணீர் தெளித்துவிட்டு ஊர்சுற்றித் திரிந்த எத்தனையோ ஆண்கள், திருமணத்திற்குப்பிறகு மனைவியின் அன்புக்குக் கட்டுப்பட்டு சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

திருமண வாழ்க்கை எல்லாருக்கும் சிறப் பைத் தருவதில்லை என்றாலும், ஒருசில தம்பதியர் மட்டும் மிகவும் அன்யோன்யமாக- ஒருவரையொருவர் பிரியாமல் மிகவும் நெருக்கமாக- விட்டுக்கொடுத்து வாழ்வதைக் காணலாம். ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் லக்னம் மற்றும் ஏழாமிடத்தின் பங்கு மிக முக்கியம்.

இந்தக் கட்டுரையில், லக்னமும் ஏழாமிடமும் உபய லக்னங்களாக இருப்பதால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற- இறக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரையுள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள், ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங் களையும் சரம், ஸ்திரம், உபயமென மூன்று பிரிவுகளாக ஜோதிட முன்னோடிகள் பிரித்திருக்கிறார்கள்.

Advertisment

சரம்

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரமென்றால் வெகு சலனமுடையதென்று பொருள். தடையற்ற இயக்கம் கொண்ட அமைப் பாகும். சர லக்னத்திற்கு சுபமோ, அசுபமோ எளிதில் வந்தடையும். ஒருவடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழிநடத்தும். வந்த தடமும் இருக்காது; போன சுவடும் தெரியாது. சர லக்னம் படைத்தல் தத்துவத்தைத் தன்னுள் அடக்கியது. இந்த லக்னத்தினர் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்பார்கள். கிடைத்த சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்துவார்கள். எதிலும் வேகம், விவேகம் என எல்லா விஷயத்திலும் அனுபவமுடையவர்கள். ஆதாயமில்லாத விஷயத்தை செய்யமாட்டார்கள். பெரிய மனிதர்களின் நட்பை விரும்புபவர்கள். தங்களைப் பிரபலங்களாக காட்டிக்கொள்ள முனைவார்கள்.

ஸ்திரம்

Advertisment

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது. அசைவற்ற நிலையைக் கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ- எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும்கூட வழிநடத்தும். ஸ்திர லக்னம் காத்தல் தத்துவத்தை அடக்கியது. கொள்கை மற்றும் லட்சியப் பிடிப்புள்ளவர்கள். இவர்கள் ஒருமுறை எடுத்த முடிவை யாராலும் மாற்றமுடியாது. அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்கமாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாறமாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியைப் பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓயமாட்டார்கள்.

ff

உபயம்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மைமையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நகரும்போது கிரகத் தன்மை சரம். மாறியபிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்ர நிலையில் சஞ்சாரம் செய்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவது உபயம். இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தைத் தனக்குள் கொண்டுள்ளது. மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள், தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா- இப்படி செய்யலாமா என யோசித்துக்கொண்டே, தமக்குத் தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மனம் மாறிக்கொண்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கும். யாரையும் பார்த்தவுடன் கணிக்கும் அறிவாளிகளான இவர்கள் பிறரைச் சார்ந்தே வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு சரியான வாழ்க்கைத்துணை அமைந் தால் மட்டுமே வெற்றியடைகிறார்கள். சரியான துணை அமையாதவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் தியாகியாக வாழ்கிறார்கள்.

உபய லக்னத்திற்கு 7-ஆமிடமே பாதக, மாரக, கேந்திர ஸ்தானமாக இருப்பதால் சுபத்தைவிட அசுபமே மிகுதியாக இருக்கும். சுபமோ, அசுபமோ விருந்தினர்போல் வரும்; போகும். மீண்டும் வரும்; மீண்டும் போகும். அதன்படி மிதுனம் மற்றும் கன்னி லக்னங்களுக்கு குரு பாதகத்தைச் செய்வார். தனுசு மற்றும் மீன லக்னங்களுக்கு புதன் பாதகத்தைச் செய்வார்.

உபய லக்னத்திற்கு களத்திராதிபதியே பாதகாதிபதியாக வருவதால் வாழ்க்கைத் துணையால், வாழ்க்கைத் துணையின் உறவுகளால் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். மனைவி, மனைவிவழி உறவினர்கள் எளிதில் உடன்படமாட்டார்கள். இருதார வாய்ப்புண்டு. சிலருக்கு காலம் தாழ்த்திய திருமணமிருக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாடிக்கையாளர்களால் அதிருப்தியே நிலவும். பல உபய லக்னத்தினர் நாள் முழுவதும் வெளியிடத்தில் தொழில், வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இரவும் பத்து மணிக்குப்பிறகு வீடு, மனைவி, மக்கள் என்ற எண்ணம் வரும். மீண்டும் விடிந்ததும் வெளியே புறப்பட்டுச் சென்று விடுவார்கள்.

உபய லக்னங்களுக்கு பாதக ஸ்தானமான 7-ஆமிடமானது 2-ஆமிடத்திற்கு 6-ஆகவும், 12-ஆமிடத்திற்கு 8-ஆகவும் அமைகிறது. எனவே உபய லக்னங்களுக்கு 2-ஆம் பாவமும் 12-ஆம் பாவமும் கடுமையாக பாதிப்படையும். பாதகாதிபதிகள் திரிகோணம் தவிர வேறிடங்களில் நின்றால் ஜாதகருக்கு கையில் பணம் தங்காது. நகைகள் சேராது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. பிரிவினை ஏற்படும். சரியான தூக்கம் வராது. படுக்கை சுகம், பயண சுகம் சரிவர அமையாது. லக்னமும் ஏழாமிடமும் உபயமாக இருப்பதால் ஜாதக ரும் வாழ்க்கைத் துணையும் நிலையற்ற தன்மையுடன் இருப்பார்கள். அனுசரித்துச் செல்லமாட்டார்கள்.

மிதுனம்

இது உபய லக்னம் என்பதால் ஏழாமதிபதியான குருவே பாதகாதிபதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதியாக இருப்பதால், குரு சுபவலுப் பெறக்கூடாது. தன் தசாபுக்திக் காலங்களில் மீளமுடியாத பாதகம் மற்றும் மாரகத்தை நிச்சயம் கொடுப்பார். ஆட்சி, உச்சம்பெற்ற குரு திருமணத்தில், திருமண வாழ்க்கையில் சுபத்தைவிட அசுபத்தையே மிகுதிப்படுத்துவார். லக்னத் திற்கு இரண்டாமிடமான கடகத்தில் குரு உச்சம்பெற்றால் 2, 10-ஆமிட சம்பந்தம்- பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழில் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். அதில் சிறு உண்மை இருக்கலாம்.

ஆனால் இரண்டாமிடம் குடும்ப ஸ்தானமென்பதால், குடும்பத்தில் வாக்குவாதம் மிகுதியாகும். தம்பதிகள் ஒருவர்மீது மற்றவர்கள் கடுமையான வாக்குப் பிரயோகம் செய்வார்கள். தகாத வார்த்தைகளால் குடும்பச்சண்டை வீதிவரை வந்து அவமானம் நடக்கும். பாதகாதிபதி குருவே மாரகாதிபதியாக இருப்பதால் மகிழ்வான திருமண வாழ்க்கை வாழும் பலர், குரு தசை, குரு புக்திக் காலங்களில், அறுபது வயதானவர்கள்கூட பிரிந்துவாழ உடன்படுகிறார்கள். அல்லது தம்பதிகளை ஏதேனும் காரணத்தால் காலம் பிரித்துவிடுகிறது. அல்லது அதற்கு இணையான கண்டத்தை சந்திக்கி றார்கள். அதுவும் 7, 10-ல் ஆட்சிபெறும் குரு மீளமுடியாத பாதகம் மற்றும் மாரகத்தை ஏற்படுத்துகிறது. குரு தசை வாழ்வில் வராதவரை இவர்கள் காட்டில் அடைமழைதான். சிறு சலசலப்புகள் இருந்தாலும் சமாளித்துவிடுகிறார்கள்.

அதேபோல் குரு, சனி மற்றும் செவ்வாயின் சாரம் பெற்றவர்கள் இரண்டாம் திருமணத்தை நோக்கிப் பயணிக்கிறார் கள். குருவுக்கு சனி, செவ்வாய் மற்றும் ராகு- கேதுக்களின் சம்பந்தமிருந்தால் ஜாதகருக்கு பாதகமும், மாரகமும் கண்டமாக பின்தொடர்ந்து துயரம் தரும். பிரச்சினை தீவிரமடையுமா? வலுவிழக்குமா என்பதை கோட்சார குரு, சனி, ராகு- கேதுக்கள் மற்றும் தசாபுக்திகளே முடிவுசெய்யும். பாதகாதிபதி குருவே மாரகாதிபதியாக இருப்பதால் கொடிகட்டிப் பறந்த பல மிதுன லக்னத்தினர் குரு தசைக் காலங்களில் கடுமையான பாதகம் கலந்த மாரகத்தை சந்தித்திருக்கிறார்கள். லக்னத் தில் நின்ற, ஏழாமிடத்தில் ஆட்சிபலம் பெற்ற குரு, திதிசூன்ய பாதிப்படைந்தால் திருமணமென்ற அத்தியாயத்தை வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடுகிறது. சிலர் குறிப்பிட்ட காலம் மறைவான குடும்ப வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இதன் சூட்சுமம் அறியாத பலர் ஏழாமதிபதி ஏழில் ஆட்சி; எப்படி திருமணம் நடக்காமல் போகுமென்று காரணம் சொல்கிறார்கள். குரு, சனி சம்பந்தம் இந்த லக்னத்திற்கு பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தந்ததாலும் திருமண வாழ்க்கையில் தோல்வியையும் விரக்தியையும்தான் சந்திக்கிறார்கள். இவர்களுக்கு எளிதாக நண்பர்கள் கிடைப்பதில்லை அல்லது நண்பர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. நண்பர்களை நம்பிய பலருக்கு நண்பர்களால் ஏற்பட்ட சாதகத்தைவிட பாதகம் கலந்த மாரகமே அதிகம். பல மிதுன லக்னத்தினர் திருமண வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார்கள்.

மேலும் 7-ஆமிடமும் உபயமென்பதால் குரு தசை, புக்திக் காலங்களில் மிதுன லக்னத் தினர் கவனத்துடன் செயல்படவேண்டும்.

பரிகாரம்

திருமணத் தடையை சந்திக்கும் மிதுன லக்னத்தினர் வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தன்று, நந்திக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட தடை அகலும்.

கன்னி

உபய லக்னமான கன்னிக்கு குரு நான்கு மற்றும் ஏழாமதிபதி. பாதகாதிபதி, கேந்திராதிபதி மற்றும் மாரகாதிபதியும் குருவே. இவர்களுடைய ஜாதகத்தில் குருவுக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் எந்தவகையில் இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். ஏழாமதிபதி குரு சுயசாரம் பெற்றாலும், சனிசாரம் பெற்றாலும், திதி சூன்ய பாதிப்பிருந்தாலும் திருமணம் நடைபெறாது. வெகுசிலருக்கு காதல் திருமணம் நடக்கிறது. விருப்ப விவாகம் தோல்வியில் முடிகிறது. குரு- சுக்கிரன் மற்றும் சந்திரன் சாரம் பெற்றால் இருதார யோகத்தை மிகைப்படுத்துவார். குரு, சூரியன் சாரம் பெற்ற கன்னி லக்னத்தினர் காரணமே இல்லாமல் பிரிந்து வாழ்வார்கள். விவாகரத்தும் பெறுவதில்லை. ஏழாமதிபதி குரு 11-ல் உச்சம்பெற்றால் முதல் திருமணம் சிறக்காது. இரண்டாம் திருமணம் வெகு சிறப்பாக அமையும். குருதசை, புக்திக் காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவதில்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது. நேரடியாக எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடுவதுதான் விபரீத விளைவு. உபய லக்னமென்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும்முன்பு தண்டனையே கிடைத்துவிடும். மேலே கூறிய பிரச்சினைகள் இருந்தாலும் நிரந்தரமான பிரிவினை இருக்கும் வாய்ப்புக் குறைவு. இவர்களுக்கு பெரிய திருமணத்தடை அல்லது திருமண வாழ்வில் பாதிப்பிருக்காது. என் அனுபவத்தில் தம்பதிகள் மனநிறைவுடனே வாழ்கிறார்கள். அதாவது 4, 7 கேந்திரம் என்பதால் கன்னி லக்னத் தினருக்கு நல்ல சொத்து சுகம் மிகுந்த வாழ்க்கைத் துணையே அமைகிறது. அல்லது திருமணத்திற்குப்பிறகு குறுகிய காலத்தில் வசதி வாய்ப்பு அதிகமாகிவிடுகிறது. வசதி வாய்ப்புகள் ஒருவரின் நிறை- குறைகளை சீர்செய்கிறது. 7-ல் மீனத்தில் குரு ஆட்சிபலம் பெற்று குரு தசை நடப்பவர்கள் கவனமாக செயல்பட்டால் பாதகத்தைக் குறைக்க முடியும். பல கன்னி லக்னத்தினர் குரு தசைக் காலங்களில் கனக புஷ்பராகக் கல்லை அணிந்தே மாரகத்தைத் தேடிக்கொள்கிறார் கள்.

பரிகாரம்

வசதி வாய்ப்பிருந்தால் அந்தணர் களுக்கு பசுமாட்டை தானம் தரலாம். வசதி யில்லாதவர்கள் கோபூஜை செய்யவேண்டும் அல்லது பசுவுக்கு உணவு தரவேண்டும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406