நாம் பிறந்த ராசியின் அதிபதி யைக்கொண்டு நம்முடைய வாழ்க்கையின், செயல்களின், உறவுகளின் பொதுப் பலன் களை அறியமுடியும். அந்த வகையில் கும்ப ராசியில் பிறந்தவர் களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
ஆயுள் காரகன் என்று கூறப்படும் சனி பகவான்தான் நீண்டகாலம் வாழ்வதற்கும், நற்பேறுகளை அடை வதற்கும் காரகமாகிறார். சர்வ சக்தி களையும் ஒருவருக்கு வழங்கிடக் கூடியவர் சனி பகவானே. இவருடைய சுப பலமற்றவர்கள் சமூகத்தால் அவ மதிக்கப்படக் கூடியவர்களாக இருப் பார்கள். தீயசெயல்களில் ஈடுபட்டு சங்கடப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
ஆட்சி அதிகாரத்தை ஒருவர் அடையவேண்டுமென்றால் அவருக்கு சனி பகவானின் அருள்வேண்டும். நீதி நெறிகளுக்குரியவர் சனி பகவான். ஒருவர் செய்த நன்மைகளுக்கேற்ப நன்மைகளையும், தவறுகளுக்கேற்ப தண்டனைகளையும் வழங்கிடக் கூடியவர் சனி பகவான்.
சனி பகவானின் ஆதிக்கம் உடையவர்கள் இரும்பு, சுரங்கம், ஆயுதம், தொழிற்சாலை, எண்ணெய், நீதி, விஞ்ஞானம், ஆட்சி அதிகாரம் போன்ற துறைகளில் தனித்துவம் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இத்தனை சிறப்புகளையும் கொண்ட ஆயுள்காரகனான சனி பகவானை தங்களுடைய ராசிநாதனாகக்கொண்டவர்கள் கும்ப ராசியில் பிறந்தவர்கள். சனி பகவானின் காரகத்துவம் என்னவோ அவற்றையெல்லாம் கொண்டவர்களாக, கடுமையாக உழைத்திடக் கூடியவர்களாக, அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக, நினைத்ததை சாதித்திடக் கூடியவர்களாக, பின்விளைவுகள் பற்றிக் கவலைப் படாதவர்களாக, துணிச்சலுக்குப் பெயர்பெற்றவர் களாக இருப்பார்கள்.
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் மனதில் இருப்பதை எந்த நிலையிலும் எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடுத்தவர் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு நேர்மைக்காக வாழ்ந்து வருவதுபோல் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடியவர்கள். பொதுவாக மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைபடுத்திக் கொள்பவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். எப்போதும் அமைதியாக இருப்பதால் இவர்களை பரமசாது என்றும் எண்ணிவிட முடியாது. உறவுகளிடத்தில் அன்பு செலுத்துபவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதை அடைந்தவுடன் அதன்மீது சலிப்பு கொள்ளக்கூடியவர்களாகவும், அதன்பிறகு வேறு ஒன்றின்மீது ஆர்வம் தோன்றி அதையும் அடைந்தபின் அதன்மீதும் சலிப்பு கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுடைய வாழ்க்கையில் அபாய கரமான பல நிகழ்ச்சிகளை எதிர்கொண்டு துணிச்சலாக வெற்றிநடை போடக்கூடியவர் களாகவும் இருப்பார்கள். இவர்களால் பல நிகழ்வுகளை உருவாக்கிட முடியும். எத்தகைய எதிர்ப்பையும் எதிர்கொண்டு இவர்களால் வெற்றிபெறவும் முடியும்.
சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப் பிடித்து நேர்மையாக வாழ முயற்சித்தாலும், சில நேரங்களில் தடம்புரண்டு விடுவார்கள்.
உல்லாச வாழ்க்கையைப் பெரிதும் விரும்பும் இவர்கள் எதிர்பாலினரின் ஈர்ப்பில் சிக்கிக் கொண்டு தவிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரங்களில் வேண்டுமென்றே தவறான வழிகளில் செல்லுதல், செயல்படுதல், எதையும் சரிவர நடத்தமுடியாமல் விலகுதல், ஏதேனு மொரு பழக்கத்திற்கு ஆளாகுதல் என்ற போக்கின் காரணமாக இவர்களுடைய திருமணத்தில் தடைகள் உண்டாகும். இவர் களுடைய குணத்தால் பொருள் நஷ்டமும் ஏற்படும். தனது சுய வருமானம், தனது குடும்பம் என்றானபின் துணையின் நிர்ப்பந்தத்தால் பெற்றோரைவிட்டு விலகிச்செல்வார்கள்.
தங்களைக் காப்பாற்றிக்கொள்வதில் உஷார் பேர்வழியான இவர்கள் தங்கள் எண்ணங்களை செயலாக்க என்ன வழியென்று எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். குடும்பப் பெருமையாலும், குலப் பெருமையாலும் சிறப்படையும் இவர்கள் ஒரு செயலைச் செய்வதற்கு முன்னால் ஏன் செய்கிறோம்?
எதற்காகச் செய்கிறோம் என்று யோசிப்பார் கள். சுய கௌரவத்தைப் பெரிதாக எண்ணும் இவர்கள் அதற்கு இழுக்கு ஏற்படும் இடத்தில் காலைக்கூட வைக்கமாட்டார்கள். செய்யும் தொழிலே தெய்வமென்ற தத்துவத்தை மறக்காத வர்கள். எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை நுணுக்கமாக அறிந்துவைத்து செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். யாரேனும் ஒரு பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்து விட்டால் அதை முடித்துக்கொடுக்காமல் இவர்களுக்குத் தூக்கமே வராது என்று சொல்லலாம். புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம்கூட நெருங்கிப் பழகி, தங்களுக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kumbam_0.jpg)
இவர்களுடைய களத்திர ஸ்தானாதிபதியாக விளங்கும் சூரியபகவான், இவர்கள் ராசிநாத னான சனி பகவானுக்குப் பகைவர் என்பதால், பொருத்தம் பார்த்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தால்தான் இவர்களுடைய மணவாழ்க்கை இனிக்கும்.
வரவறிந்து செலவுசெய்யும் இவர்களுக்கு பிற்காலம் யோக காலமாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இளமையிலேயே சேமிப்பு அவசியம். வெளியுலகில் புகழோடும் பெருமையோடும் வாழக்கூடியவரான இவர்களுக்கு வீட்டிற்குள் நிம்மதி என்பது எதிர்பார்க்கும் வகையில் இல்லாமல் போகும்.
இவர்களின் பேச்சுக்கு எப்போதும் எல்லா இடத்திலும் மதிப்பிருக்கும். சொந்த முயற்சியில் முன்னேற்றம் காணக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை, வாகனம் என்று தேடிக்கொள்வார்கள். இருந்த இடத்திலேயே தொழிலை அமைத்துக்கொண்டு வெற்றிகாணும் இவர்கள் மற்றவர்களை எளிதில் திருத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடமுள்ள ஒரே குறை என்னவென்றால், எவ்வளவு பெரிய பதவி, பொறுப் பிருந்தாலும் அதில் பிடித்தமில்லை என்றால் அதைத் தூக்கியெறிந்து விடுவார்கள்.
அதேபோல் எத்தனைப் பெரிய நண்பர்களாக இருந்தாலும் இவர்களுக் குப் பிடிக்காத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை யும் துச்சமாக நினைத்து தூக்கியெறிந்து விடுவார்கள்.
இவர்கள் மனம் எப்போதும் தண்ணீர்க் குடம்போல் தளும்பிக்கொண்டிருக்கும். சிலர் நிறைகுடம்போல் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பார்கள். சிலர் குறைகுடம்போலவும் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் சஞ்சல புத்திக்காரர்களாகவும், எதையாவது நினைத் துக் கவலைப்படுபவர்களாகவும், வாழ்க்கை முயற்சிக்கு உத்தேசம் இல்லாதவர்களாகவும், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களாகவும் இருப்பார்கள். சிலருக்கு பரம்பரை சொத்துகள் இருப்பதும், பிள்ளைகள் அதிகம் பிறப்பதும் அபூர்வம் என்றே சொல்லவேண்டும்.
பொதுவாக இவர்களுக்கு மனவலிமை அதிகம். எவ்வளவு இக்கட்டான நிலையிலும் எந்தவித முயற்சியுமில்லாமல் அடிப்படை ஆதாரத்தை அடையும் ஆற்றல் உண்டு. ஒருவரைப்பற்றி துல்லியமாக எடைபோடும் சக்தியும் உண்டு. எதை மறைத்துப் பேசினாலும் அதை இவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். எதையும் சிறப்பாகவும் சீராகவும் செய்ய வேண்டும்; பலருக்குப் பயன்படும் விதத்தில் வளரவேண்டுமென்று நினைப்பார்கள். எதிர் காலத்தின்மீதே இவர்களுடைய கவனம் செல்லும்.
இவர்கள் மனதில் தன்னம்பிக்கையும் தணியாத வேட்கையும் இருக்கும். இன்றைய வாழ்க்கை எவ்வளவு இக்கட்டாக இருந்தா லும், எதற்காகவும் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு நரம்புத் தளர்ச்சியோ, உணர்ச்சிவயப்படும் போக்கோ தோன்றுமென்பதால், எதிலும் நிதானமாகச் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள் என்றாலும், ஒருசிலருக்கு அந்த விருப்பம் நிறைவேறாமலேயே, வாழ்க்கை வேறு கோணத்தில் போக ஆரம்பித்துவிடும்.
பெரும்பாலும் இவர்கள் கஷ்டப்பட்டே வாழ்க்கையில் உயர்வார்கள். இருப்பு என்பது இவர்களில் பலருக்கு இல்லாமல் போகும். அதே நேரத்தில் உடலும் உள்ளமும் எப்போதும் வலிமையாகவே இருக்கும். வருமானம் தேடி வெளியூர்களுக்கும், வெளிநாட்டிற்கும் செல்லக்கூடிய யோகம் இவர்களில் பலருக்கு உண்டாகும். ஒருசிலருக்கு அந்நியர்மூலமாகவே வருமானம் என்று சொல்லவேண்டும். வாழ்க்கைத் துணையால் சில வகையான பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய நிலையிலுள்ள இவர்கள் ஜாதகம் பார்த்து, கிரக நிலைகளைப் பார்த்து திருமணம் செய்துகொள்வதன்மூலம் நல்ல துணையை அடையலாம்.
கும்ப ராசியில் பிறந்த சிலர் இல்லற விஷயத்தில் போதுமான சக்தியில்லாமல் திண்டாடுவார்கள். அல்லது தங்களுக் குப் பொருத்தமில்லாதவற்றின்மீது ஈடுபாடுகொண்டு தன் துணைக்கு துரோகம் செய்வார்கள். அதேநேரத்தில் தான் தேடிக்கொண்ட துணையைத் திருப்திப்படுத்தவேண்டுமென்று பலவகையிலும் முயல்வார்கள். வாழ்க் கைத் துணையால் சில சங்கடங்களை அனுபவிக்க நேரும். இவர்களுடைய துணை இவர்களின் பேச்சைக் கேட்காதவராகவும், கேட்டாலும் தன் மனம் போனபடியே நடந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். கும்ப ராசியில் பிறந்த இருபாலருக்கும் இதுபோன்ற சோதனையும் வேதனையும் உண்டாகலாம்.
கவர்ச்சியிலும், தங்கள் தோற்றத் திலும் இவர்களுக்குள்ள நம்பிக்கையினால் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்கள். அந்த உற்சாகம் மிதமிஞ்சிப் போய்விடக்கூடாது என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேபோல் எந்தவொரு செயலிலும் அவசரமோ ஆர்ப்பாட்டமோ கூடாது. நிதானத்துடனும் சகிப்புத் தன்மையுடனும் செயல்பட்டால்தான் வெற்றிகள் கிட்டும்.
பந்த பாசங்களில் பற்றுள்ளவரான இவர்கள் எந்த நேரத்திலும் எத்தகைய பிடிப்பான பற்றையும், உறவையும் உதறக் கூடியவராகவும் இருப்பார்கள். மலருக்கு மலர் தாவும் எண்ணமும் அதற்குரிய வாய்ப்பும் உண்டாகும். அதனால் சிலர் கடமைகளையும் மறந்துவிடுவார்கள். கடைசியில் ஒருவர்கூட இவர்கள்மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள்.
அடுத்த இதழில் மீனம்...
செல்: 94443 93717
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-05/kumbam-t.jpg)