திருமண வாழ்க்கையென்பது இன்று ஒருசிலருக்கு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. விலகுதல், விவாகரத்து என்ற நிலை சமீபகாலத்தில் அதிகரித்துவருகிறது. இதற்கு என்ன காரணம்?
திருமணமென்று வந்தவுடன் பெரியவர்கள் பெண்ணின் ஜாதகத்தையும், பையனின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். பத்துப் பொருத்தம் உள்ளதா? ஏழு பொருத்தம் உள்ளதா என்று பார்க்கின்றனர், பெண்ணைப்பெற்ற சிலர், எப்படியாவது பெண்ணைத் தள்ளிவிட்டால் போதுமென்று பொருத்தம் பார்ப்பவர்களிடம், "கழுத்துப் பொருத்தம் இருக்கா? அதைமட்டும் சொல்லுங்க'' என்று கேட்டு, ஓரிரண்டு பொருத்தம் உடையவர்களுக்கும் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர்.
காதல் திருமணங்கள் பற்றி சொல்லவேவேண்டாம். அவர்கள் எந்தப் பொருத்தத்தையும் பார்ப்பதில்லை. ஒருசிலர் குரு பார்வை வந்துவிட்டதென்று, இருவரின் ஜாதகத்தையும் முழுமையாக ஆராயாமல் திருமணம் செய்துவைத்து, அதன்பிறகு சோதனைக்கு ஆளாகின்றனர்.
ஜோதிடமென்பது, நம்மிடம் வருபவர்கள் சங்கடப்படக்கூடாது என்று நினைத்து அவர்களை சந்தோஷப் படுத்துவதற்காக சொல்வதல்ல. நன்மையான நிலையிருந்தாலும், கெடுதலான நிலையிருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லி ஜாதகருக்கு எச்சரிக்கையை உண்டாக்குவதுதான் ஜோதிடம். கொடுக்கும் தட்சணைக்காகவோ, ஜாதகரின் மன சந்தோஷத்திற்காகவோ அவர்கள் விரும்பும் வகையில் சொல்லப்படும் பலன்கள் எதிர்மறையாகவே முடியும்.
ஜோதிடம் என்று வரும்போது... பத்துப் பொருத்தம் என்பது ஒரு சதவிகிதம் மட்டும்தான். அதன்பிறகு இருவரின் ராசி, லக்னம், களத்திரகாரகனின் நிலை, களத்திர ஸ்தானாதிபதியின் நிலை, அவர்கள் யார் வீட்டில் இருக்கிறார்கள், யாருடைய சாரத்தில் இருக்கி றார்கள், யாருடன் இணைந்திருக்கிறார்கள், யாரால் பார்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். ஜாதகனின் வீரியநிலை, பெண்ணின் ஆசைநிலை, மாங்கல்ய ஸ்தானத் தின் நிலை, மாங்கல்யகாரகனின் நிலை என்று அனைத்தையும் பார்க்கவேண்டும். தசாபுக்தி, ஆயுள், ரோகம் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்... இன்னும் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனக்குத் தெரிந்த ஒரு ஜோதிடர் இருந்தார். அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லாரும் நல்லது- கெட்டது எல்லாவற்றுக் கும் அவரிடம்தான் நாள்கேட்டுச் செல்வார்கள். அவர் பலன் சொல்லும்போது கோட்சாரரீதியாக அப்போது கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்துப் பலன் சொல்வார். "உனக்கு ஏழில் குரு வந்திருக்கான். உனக்கு எட்டில் சனி வந்திருக்கான்'' என்று அதற்குரிய பலன்களைச் சொல்வார்.
அதற்கே அவரிடம் கூட்டம் கூடும்.
அவர் மறைவுக்குப்பின் அந்த வேலையை அவர் மகன் எடுத்துக்கொண்டார். பொருத்தம் பார்க்கவும், முகூர்த்தம் நடத்த நாள் கேட்கவும் அவரிடம் போனால், பத்துப் பொருத்த அட்டவணையைப் பார்த்துச் சொல்வார். பஞ்சாங்கத்தில் குறித்துள்ள முகூர்த்த நாளை அப்படியே குறித்துக் கொடுத்தும் அனுப்புவார்.
அந்த நாள், மணமக்களுக்கு சாதகமான நாளா? பாதகமான நாளா? சந்திரன் எட்டில் இருக்கிறானா? பன்னிரண்டில் இருக்கிறானா என்பதைக்கூட அவர் கவனத் தில் கொண்டதில்லை. "முகூர்த்த நாள். திருமணம் செய்யலாம்...' இதுதான் அவரு டைய வார்த்தையாக இருக்கும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்...
ஜோதிடர் என்று சொல்லிக்கொள்பவர்களில் சிலர் இப்படித்தான் உள்ளனர். இவர் களைப் போன்றவர்களால்தான், ஜோதிடத் தின்மீதுள்ள நம்பிக்கையே பலருக்கு இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு உண்மையையும் சொல்லியாக வேண்டும். ஜாதகத்தில் என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன என்ற உண்மை இன்றுள்ள பலருக்கும் தெரிவதில்லை.
பொதுவாக எல்லாருக்கும் தெரிந்த ஒரு தோஷம், செவ்வாய் தோஷம் மட்டு மாகவே இருக்கிறது. நாக தோஷம், பாம்பு கிரகங்களின் ஸ்தான நிலை, காலசர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், புனர்பூ தோஷம் என்று பலவகை யான தோஷங்களை நம்மில் பலர் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. கற்பு நிலை யையும் கவனிப்பதில்லை.
சில ஆண்களின் ஜாதகத்தைப் பார்த்து, அதிகார வாழ்க்கை- அதாவது கன்னி கழியாத ஒரு பெண்ணை மணந்து வாழும் வாழ்க்கை அவர்களுக்கு இல்லையென்பதைத் தெரிந்து, விவாகரத்தான, விதவையான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். இத்தகைய வாழ்க்கை தான் அவர்களுக்கு என்ற அவர்களது விதியைக் கூறியுள்ளேன். ஆனால், அதைக் கேட்காமல் இளம்பெண்ணாகத் தேடித்தேடி, வயதாகி யும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப் பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் ஒரு பெண்மணி என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். திருமணம் நடந்த திலிருந்து அவருக்கு நிறைய சங்கடங்கள், கணவன் எந்த வேலைக்கும் போவ தில்லை; பணம் கொடுத்து சுயதொழில் செய்ய வைத்தாலும் அதிலும் நஷ்டம் என்று கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/life_3.jpg)
இருவரின் ஜாதகத்தையும் பார்த்தேன். திருமணம் நடந்த நாள்பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டேன். இரண்டு ஜாதகங் களையும் பார்த்தபோதே பொருத்தமில்லாத ஜாதகங்கள் என்பது தெரிந்தது. அவர்களுக் குத் திருமணம் நடந்த நாளில், அந்தப் பெண்ணின் ஜாதகப்படி எட்டாமிடத்தில் சந்திரன்; சந்திராஷ்டமம்.
அந்தப் பெண்ணின் ஜாதகத்தின் நான்காமி டத்தை வைத்து கற்புநிலையைப் பார்த்தேன்.
"உங்கள் கணவர் உங்களுக்கு உறவு தானே?'' என்று கேட்டேன்.
"ஆமாம்'' என்றார்.
"ஆனால், உங்களுக்கு அபிமான புருஷன் ஒருவர் இருப்பதாக உங்கள் ஜாதகம் சொல்கிறதே?'' என்றேன்.
"ஆமாம்... அவருடன் நான் கடைசிவரை இருப்பேனா? அவரைத்தான் என் கணவராக ஏற்றுக்கொண்டுள்ளேன். இது என் கணவருக் கும் தெரியும்...'' என்றார்- பதினெட்டு வயதில் தன் தாய்மாமனை ஜாதகப் பொருத்தமின்றி திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண்மணி. அதன்பிறகு அவருக்கு சில ஆலோசனைகளையும், பரிகாரங்களையும் சொல்லி அனுப்பிவைத்தேன்.
இந்த இடத்தில் பரிகாரம் பற்றிய ஒரு உண்மையையும் சொல்லவேண்டும். சில ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து முடித்ததும், "இந்த ஜாதகருக்கு பூஜை செய்யவேண்டும், தோஷம் கழிக்கவேண்டும், ஹோமத்தில் உட்கார வைக்கவேண்டும், கழிப்பு கழிக்கவேண்டும்' என்று சொல்வார் கள். இத்தகைய செயல்கள், அந்த ஜோதிட ருக்கு லாபத்தை உண்டாக்குமே தவிர, அந்த ஜாதகருக்கு எந்தவொரு பலனையும் ஏற்படுத்தாது என்பதே உண்மை.
என்னிடம் வரும் ஜாதகர்களுக்கு, அவர் களுடைய ஜாதகத்தைப் பார்த்து, எந்த கிரகத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டி ருக்கிறது, எந்த தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என்பதையெல்லாம் பார்த்து, அந்த கிரகத்திற்குரிய ஆலயத்திற்குச் செல்லும்படி சொல்வேன். யாரால் நமக்கு சங்கடமோ அவரிடம் சரணாகதி அடைவதே பரிகாரங்களில் சிறந்த பரிகாரம் என்பதை நாம் உணரவேண்டும்.
திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்ந்து வருபவர்களும், அவர்களின் தசா புக்தி, கோட்சாரத்தின் காரணமாக வேறு தோள்சாயும் நிலையைக் கண்டறிந்து, "இந்த நேரத்தில் உங்கள் விதி இதுதான்; ஆனால் சாக்கடையில் விழாமல் தூய நதியில் விழுங்கள். விழவேண்டும் என்பது விதியாக இருக்கும்போது, விழும் இடத்தை நல்ல இடமாகத் தேர்வுசெய்யுங்கள்' என்று சொல்லி பலருக்கு வழிகாட்டி இருக்கிறேன்.
பொதுவாக எல்லாருக்குமே வாழ்க்கை யின்மீது பெரிய கற்பனை இருக்கும். நன்றாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், விதி... திருடனாக, கொலைகார னாக, மனைவியைவிட்டு வேறு பெண்களிடம் செல்லக்கூடியவனாக, மனைவியைவிட்டு வேறு பெண்ணுடன் வாழக்கூடியவனாக, கணவருடன் வாழமுடியாதவளாக, வேறு துணையுடன் வாழக்கூடியவளாக, மற்றவர் களை சந்தோஷப்படுத்தி வாழக்கூடியவளாக என்று அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும்.
என்னுடைய அனுபவத்தில் எந்தவொரு ஜாதகருமே தவறானவர்களாக வாழ விரும்பு வதில்லை. ஆனால் கிரகநிலை அவர்களே எதிர் பார்க்காத வழியில் அவர்களைப் போக வைத்து விடுகிறது.
உதாரணத்திற்கு ஒரு ஜாதகம்... அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், சூரிய தோஷம், சந்திர தோஷம் என்று தோஷங்கள்... "இத்தகைய ஜாதகிக்கு இளவயது திருமணம் சங்கடத்தில் முடியும்.
முப்பது வயதிற்குமேல் திருமணம் செய்யுங் கள்; முதலில் காளஹஸ்தி சென்று ராகு- கேது வுக்குப் பரிகாரம்செய்துவிட்டு வாருங்கள்' என்று, அதற்குரிய வழிமுறைகளையும் சொல்லி அனுப்பினேன்.
அந்தப் பெண்ணின் ஏழாமிடத்தின்மீது குருவின் பார்வை விழுகிறது. அப்போது அந்தப் பெண்ணுக்கு இருபத்து மூன்று வயது. அவளுக்கு ஒருவன்மீது காதல் உண்டானது.
யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது யாருடைய வேலை? குரு உண்டாக்கிய லீலை.
இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்தன. இருவருக்கும் ஒரு குழந்தை உண்டான நிலையில், அவன் அந்தப் பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் ஓடிப்போனான்...
அந்தநிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் மீண்டும் என்னிடம் வந்து நிலைமையைக் கூறினர்.
அந்தப் பெண்ணின் லக்னம் துலாம். களத்திர ஸ்தானாதிபதி, மாங்கல்ய ஸ்தானாதி பதி செவ்வாய், சுக்கிரன் இருவருமே லக்னத் திற்கு பன்னிரண்டில் மறைவு பெற்றிருந்தனர். ஓடிப்போனவனின் ஜாதகத்தைப் பார்த்தேன். மேஷ லக்னம், லக்னாதிபதி செவ்வாய் ஏழாம் வீடான துலாத்தில். அதுமட்டுமல்ல; இளைய தாரத்தைக் குறிப்பிடக்கூடிய பதினொன்றாவது வீட்டின் அதிபதியான சனிபகவான் அதே ஏழாம் வீட்டில் உச்சமாக வீற்றிருந்தார்.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பார்த்தீர்களா... அவர்களுக்கு சில யோசனைகள் கூறி, "அவனை இனி நம்பவேண்டாம். உங்கள் பெண்ணை அரசு வேலைக்கு முயற்சி செய்யும்படி சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பிவைத்தேன். அந்தப் பெண்ணுக்கும் பதினொன்றாம் அதிபதி பலமாக இருந்தார்.
இப்படிப் பல விஷயங்களையும் பார்க்கும் போது பொருந்தி வரவில்லையா- அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு தட்சணை கொடுத்தாலும், அவர் களே விரும்பினாலும் பொருத்தமில்லை என்ற உண்மையைச் சொல்லிவிடவேண்டும்.
இதுதான் ஜோதிடத் தொழிலின் தர்மம். இந்தரீதியில், பொருத்தமிருந்து திருமணம் செய்வோருக்குள் கடைசிவரை மகிழ்ச்சியே நிறைந்திருக்கும். கசப்பு, சலிப்பில்லாமல், எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் வாழ்வார்கள்.
ஜாதகம் பார்க்காமலேயே சிலருக்குத் திரு மணம் நடக்கலாம். ஜாதகநிலை சரியில்லாத ஒரு பெண்ணுக்கும், மனைவியுடன் சுமுக மாக வாழமுடியாத நிலையுள்ள ஒருவருக் கும் திருமணம் நடக்கலாம். அதற்குக் காரணம் அந்த சமயத்தில் அவர்கள் ஏழாமிடத்திற்கு கிடைத்த சுபப் பலனாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய தசாபுக்தி நாயகர்களின் வேலையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர் களுக்கு, அவர்களுடைய களத்திர ஸ்தானத் திற்கு பார்வைப் பலன் உள்ளவரை அல்லது அந்த ஜாதகர்களுக்கு நன்மையை- இன்ப நிலையை வழங்கிடக்கூடிய அந்த தசாபுக்தி முடியும்வரை அவர்களுடைய வாழ்க்கை சுமுகமாகவே நடந்துகொண்டிருக்கும். அதன் பிறகு அவர்களுடைய குடும்பத்தில் விரிசல் தோன்றும். கணவன்- மனைவிக்குள் மோதல் உண்டாகும். இருவருக்கும் ஒத்துப்போகாத நிலை உருவாகும்.
ஒருசில ஆண்களின் ஜாதகத்தைப் பார்த்தால், அவன் மனைவி அவனுடைய ஜாதகப் படியே அவனையன்றி வேறொருவனுடன் வாழக் கூடியவளாக இருப்பாள். இதையெல்லாம் "ஜாதக பாரிஜாதம்' தெளிவாகவே கூறுகிறது.
இதேபோல் பெண்கள் ஜாதகத்திலும் உண்டு.
கற்புக்கரசியாக ஒருத்தி வாழ நினைத்தாலும் சில தசாபுக்திகளும், கோட்சாரப் பலன்களும் வரும்போது அவள் மனம் மாற்றம் பெற்று விடும். இதற்கு அவள் மட்டுமே காரணமல்ல. குடும்ப வாழ்க்கையில் அவள் வாங்கிய அடிகள் அவளை அந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கும்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பதினொன்றாம் இடமென்னும் இளைய தாரத்தின் ஸ்தானமும் அதன் அதிபதியும் வலுத்திருந்தால், மனைவியைவிட்டு வேறொரு பெண்ணையும், கணவனைவிட்டு வேறொரு ஆணையும் துணையாகத் தேடிக்கொள்ளும் நிலை உருவாகும்.
சமீபகாலத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணம், பொருத்தங் களை சரியாகப் பார்க்காமல் திருமணம் நடத்திவைக்கும் போக்கு அதிகரித்திருப்பது தான்.
திருமணம் செய்துகொள்ளப்போகும் இருவரின் ஜாதகங்களையும் நன்றாக ஆராய்ந்து, அவர்களுக்குப் பொருத்தம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, அதன்பிறகு அவர்களுக்கு சுபமான முகூர்த்த நாளில் திருமணம் செய்துவைப்பதுடன், சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்லநேரத்தைப் பார்த்து இருவரையும் ஒன்றிணைத்தால் அவர்களுடைய வாழ்க்கை சுபமாகும்; நீடித்து நிலைக்கும்.
ஜாதகத்தில் மிகமிக முக்கியமானது மூன்றுமுடிச்சு விழும் நேரமும், முதன்முதலாக தம்பதிகள் இணையும் நேரமுமாகும். இதனை அனைவரும் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக உருவாக்கிக் கொண்டு வாழ்ந்திடவேண்டும்.
செல்: 94443 93717
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/life-t.jpg)