உறவுகள் சிலருக்கு உறுதுணையாகவும், பலருக்கு உறுத்தும் துணையாகவும், பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக வுமே அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.
கணவன்- மனைவி, தாய்- தந்தை, சகோதர- சகோதரி, நண்பர்கள் என்று எந்த வகையானாலும், உறவுகள் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவை. இன்றைய சமூக, பொருளாதாரச் சூழ்நிலையில் உறவுகள் சுயநலம் சார்ந்ததாக இருப்பதையும், அதன் காரணமாக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையையும் காண்கிறோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sund.jpg)
தகுதிக்கு மீறிய ஆசை, தராதரமற்ற ஆசையானது எதற்கும் துணியச் செய்து, மனிதர்களை தடம்புரளச் செய்கிறது. குறிப்பாக, மண், பெண், பொன் ஆகிய மூன்றால் விளையும் அனர்த்தங்களே அதிகம். முறையாக அனுபவிக்கப்பட வேண்டிய காமம், ஆணானாலும் பெண்ணானாலும் எல்லைமீறிச் சென்று உறவுமுறை, வயது வித்தியாசம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், கொலைவரை செல்ல வைக்கிறது.
இதேபோல் வீடு, மனை மற்றும் சொத்துப் பிரிவினை போன்றவற்றால் தகப்பனுக்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் பிரச்சினை முற்றி, நீதிமன்றப் படியேறுவதும், கணவன்- மனைவி ஒருவரையொருவர் வழக்குப்போட்டு அலைக்கழிப்பதும், அண்ணன்- தம்பி சொத்துத் தகராறில் சண்டையிட்டுக் கொள்வதும் புதிதல்ல. இதனால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமே இல்லாதவர்கள் வாழ்வையும் பாதிப்பதுதான் கொடுமை.
பொன்- அதாவது பணத்தால் ஏற்படும் நன்மைகளைவிட பாதகங்களே அதிகம். கொடுக்கல்- வாங்கலில் ஏற்படும் தகராறு ரத்த சம்பந்தமுள்ளவர்களையே மிருகங்களாக்கி விடுகிறது. தினசரிகள், தொலைக்காட்சிகள், வலைத்தளம் போன்ற ஊடகங்களில் வரும் செய்திகளே இதற்குச் சான்றாக உள்ளன.
இன்று பெரும்பாலும் ஆண்- பெண்ணுக் கிடையே ஏற்படும் காமவேட்கையே தகாத உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தூண்டி, அதனால் திருமணம் என்ற பந்தத்தையும், உறவுகளையும் கேவலப்படுத்துவதோடு, ஒரு பாவமும் அறியாத மற்றவர்களையும் சமூகத்தின்முன் தலைகுனிய வைக்கும் கேவலங்களும் அதிகம் நடக்கின்றன.
என்ன காரணம்? சமூகவியல் அறிஞர்களும், பொருளாதார வல்லுநர்களும், உளவியல் நிபுணர்களும், இன்னுமுள்ள அறிஞர்பெருமக்களும் பல காரணங்களைக் கூறுகின்றனர்.
முன்னோர்கள் நமக்களித்த வேதத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாத்திரம் மற்றும் மந்திர சாத்திரம் கூறும் அடிப்படையான முன்வினைப் பயனே இதற்குக் காரணம் என்பதுதான் உண்மை. செய்தவினை திரும்ப வருமென்று சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறினார்கள் பெரியவர்கள். இதை இப்படிப் பார்க்கலாம்.
எல்லா தகுதிகளும்- அதாவது அழகு, இளமை, வயது, தோற்றம், படிப்பு, அந்தஸ்து, வேலை, சொத்து என்றிருந்தாலும், ஆணோ பெண்ணோ- திருமணமாகாமல் தவிப்பதை இன்று அதிகமாகப் பார்க்க முடிகிறது. மேற்கூறிய தகுதிகளில் குறையிருக்கும் ஆண்- பெண்ணுக்கு இளமையிலேயே திருமணம் நடப்பதையும் பார்க்க முடிகிறது. திருமணம் மட்டுமல்ல; எல்லா உடல்தகுதிகளும் இருந்தும், உரிய வயதில் திருமணம் நடந்தும், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்காமல் தவிர்ப்பவர்களையும் பார்க்க முடிகிறது. இது ஏன்?
சேர்ந்து வாழவும் பிடிக்காமல், பிரியவும் முடியாமல், சிலர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அதில் இழுபறி இருப்பதும், நிம்மதியில்லாமல் தவிப்பதும் ஏன்?
நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்துக்காக வருடக்கணக்காக நீதிமன்றப் படியேறி தொல்லைகளை அனுபவிக்கும் குடும்பங்கள் இன்று சகஜம். இதற்கு என்ன காரணம்?
தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை பெற்றோரைத் தவிக்கவிடுவதும், சிலருக்கு பெற்றோரே எதிரிகளாவதும் எதனால்?
குழந்தையென்று ஒன்று பிறந்தால் போதுமென்று ஏங்கியவர்களுக்கு, ஏன் பிறந் ததோ என்று நொந்து கொள்ளுமளவுக்கு குறைபாடுள்ள குழந்தை பிறப்பதும் எதனால்?
மேலே சொன்ன அத்தனைக் கேள்வி களுக்கும் ஜோதிட சாத்திரம் கூறும் பதில்- அவரவர் செய்த பாவ- புண்ணியப் பலன்களே. இதைத் தெரிந்துகொள்ள, லக்னத் திலிலிருந்து எண்ண வரும் ஐந்தாம் பாவம், அதன் அதிபதி, ஐந்தாம் பாவத்தில் அமர்ந்த கிரகங்கள், ஐந்தாம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள், ஐந்தாம் பாவாதிபதியின் வலிலிமை, அவனோடு சேர்ந்த மற்றும் பார்த்த கிரகங்களின் வலிமை இவற்றைப் பொருத்தே இப்பிறவியில் ஜாதகர்- ஜாதகியின் வாழ்க்கை அமையும்.
இதேபோல் ஒன்பதாம் பாவம் என்னும் பித்ரு ஸ்தானமும் முக்கியமாக கவனிக்கப்படவேண்டும். பித்ரு என்ற சொல்லுக்கு "முன்னோர்' என்று பொருள். முன்னோர்களின் ஆசி இருந்தால்தான் "பாக்கியம்' எனப்படும் மனை, வீடு, வசதியான வாகனங்கள், சொத்து சுகம் அமைந்து, இப்பிறவியில் சொகுசான வாழ்க்கை வாழமுடியும். மாறாக பித்ருக்களின் சாபமோ அல்லது பித்ருக்கள் வகையில் ஏதாவது குறையோ இருந்தால் அதை இந்த பாவம் காட்டிக்கொடுத்து விடும்.
இதேபோல் களத்திர சாபம், ஸ்த்ரீசாபம், புத்திர சாபம், பிராமண சாபம் போன்ற வகையில் ஏதாவது பாதிப்புகள் இருந்தாலும் ஜாதகர்- ஜாதகியை நிம்மதியாக வாழவிடாது. இதை எப்படி அறிவது? இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு எப்படி காண்பது? இதற்குத்தான் மந்திர சாத்திரரீதியான பரிகாரங்களை முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். சாபநிவ்ருத்தி ஹோமங்கள், ரட்சாதாரணம் ஏற்று, மந்திரோபதேசம் பெறுவது; உரிய யந்திரம் பிரதிஷ்டை செய்து பூஜித்துவருவது போன்றவற்றால் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீரவு பெறலாம் என்பதை உறுதியுடன் கூறலாம்.
இனி தலைப்புக்கு வருகிறேன். தடம்புரளும் உறவென்பது நம்பிக்கை துரோகம் செய்வது. பொதுவாக காதல் உறவானாலும், கணவன்- மனைவி உறவானாலும், ஜாதகர்- ஜாதகி யின் ஜனன ஜாதகத்தில் குடும்பஸ்தானம், காலலைக் குறிக்கும் ஐந்தாமிடம், காமம் மற்றும் கணவன்- மனைவியைக் குறிக்கும் ஏழாமிடத்தில் இயற்கையான பாவகிரகங்கள் அமர்ந்திருந்தால், காதலன்- காதலி; கணவன்- மனைவி மற்றவரால் ஏமாற்றப் பட்டு, வாழ்க்கையில் தொல்லைகளை அனுபவிப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இதேபோல் ஒரு ஆண்மகனின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப் பட்டிருந்தாலும், பெண் ணின் ஜாதகத்தில் குரு பகவான் கெட்டிருந்தாலும், ஏமாற்றப்படுவதோடு, வாழ்க்கையும் பல தொல்லைகளுக்கு ஆளாகி, அவதிப்பட நேரும்.
இதேபோல் ஒருவரது ஜனன காலத்தில் ஆன்மகாரகன் சூரியன், மனோகாரகன் சந்திரன், களத்திரகாரகன் சுக்கிரன், அங்காரகன் அல்லது வியாழன் மற்றும் 7-ஆம் பாவத்தோடு ராகுவுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு போன்ற கிரக அமைப்பு காணப்படுமா னால் கணவன்- மனைவி ஏமாற்றுபவராகவும், தடம் புரள்பவராகவும் இருக்க வாய்ப்புண்டு. தொழிலில் ஏமாற்றத்தை சந்திப்பவர்களுக்கும் இதுபோன்ற கிரக அமைப்பு பொருந்தும்.
புத்திசாலிலித்தனத்தை ஒருவருக்குத் தருவதில் முக்கியத்துவம் பெறும் புதன், ஒருவரது ஜாதகத்தில் வலுவிழந்திருந்து, அவர் கர்மகாரகனாம் சனிபகவானோடு எவ்விதத்திலாவது தொடர்பிலிருந்தால், அந்த ஜாதகர்- ஜாதகி காதல், கல்யாணம் இவற்றில் தடம் புரளும், ஏமாற்றும் துணை- இணையைப் பெற்றுதொல்லைகளை சந்திப்பார் என்று ஜோதிடம் கூறுகின்றது.
பொதுவாக ஆண்களின் ஜாதகத்தில் காமத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் நீசன் யாராவது இருந்தால் சபலபுத்தி ஏற்படும்.
இதே பாவத்தில் சனியும், சுக்கிரனும சேர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு ஏற்கெனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்த பெண்ணோடு கள்ளத் தொடர்பு ஏற்படும்.
இவ்வாறே, ஆணின் ஜாதகத்தில் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாமிடத்துக் கும், லாபஸ்தானம் என்னும் பதினொன் றாம் இடத்துக்கும் எவ்வகையிலாவது தொடர்பிருக்குமானால், அவருக்கு இரண்டாவதாக ஒரு பெண்ணோடு தொடர்புண்டு என்று கூறலாம்.
பொதுவாக, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால், அவர்கள் காமவேட்கை அதிகமுள்ளவர்களாகவும், அதைத் தீர்த்துக்கொள்ள தடம் புரளவும் தயங்க மாட்டார்கள் என்பதையும் ஜோதிடம் உறுதியாகக் கூறுகிறது.
இதுவரை, தடம் புரளும் உறவுகளால் தொல்லைகள் யாருக்கு என்பதைக் கூறினேன். இடம் கருதி கூறாமல்விட்டவையும் உண்டு. குறிப்பாக திருமணத்தன்று வேறொருவரோடு வெளியேறும் ஆண்- பெண்களும் இதில் அடக்கம். தடம் புரளும் உறவுகள் அவர்கள் மட்டுமல்ல; அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது. சிலசமயம் இந்த பாதிப்புகள் பல தொல்லைகளையும் கொடுத்து துடிக்கவைக்கிறது. திருமணம் தடைப்படுவது, தள்ளிப்போவது, விவாகரத்து மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள், குழந்தை பிறப்பதில் தாமதம், சொத்துப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் மந்திர சாத்திரரீதியான பரிகாரங்கள்மூலம் தீர்வுபெறலாம்.
செல்: 95660 27065
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-10/sund-t.jpg)