மனித வாழ்வில் அனைத்து நிகழ்வு களையும், நிகழ்த்தும் கிரகங்களுக்குப் பாதைவகுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்களின் வரிசையில், 24-ஆவது நட்சத்திரம் சதய நட்சத்திரமாகும்.
இது ராகு பகவானின் மூன்றாவது மற்றும் இறுதி நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கும்ப ராசியில் தனது நான்கு பாதங்களையும் பதித்து முழு நட்சத்திரமாக, ராட்சச கண நட்சத்திரமாக அமர்ந்துள்ளது.
ஆயுள் காரகன், கர்ம காரகன் என்றழைக்கப்படும் சனியின் கும்ப வீட்டில், பிரம்மாண்டத்தையும், ஆகர்சன சக்தியாகவும், விளங்கும் ராகுவின் நட்சத்திரம் அமையப்பெற்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sathayam.jpg)
இந்த கும்ப ராசி காலபுருஷனுக்கு பாதக ராசியாக விளங்குகிறது, இங்கே அமையப் பெற்ற சதயம் சற்று போராடி அனைத்தையும் அடையக்கூடிய நிலையினை இயல்பிலேயே பெற்றதாகும்.
சதய நட்சத்திரத்தை தமிழில் சதயம் என்பார்கள். பல தமிழ் நிகண்டுகளில் நீர் நாள், செக்கு, குன்று, வருணன் நான், போர், சுண்டல் என்று அறியப்படுகிறது. சமஸ்கிருதத்தில் சத்விஷா என்பார்கள்.
இந்த நட்சத்திரத்தை எதனால் சதயம் என்று அழைக்கின்றார்கள் என்றால், சதம் என்றால் நூறு என்று பொருள். 100 நட்சத்திரங்களின் கூட்டைக் கொண்டதே இந்த சதயம். இது வான்வெளி மண்டலத்தில் ஒரு பூங்கொத்திணைப்போல் காட்சியளிக்கிறது என்பார்கள்.
இதன் உருவம் ஒட்டகம் மற்றும் தராசு போன்றிருக்கும் என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இது பெண் நட்சத்திரம் என்றும்; இல்லை திருநங்கை நட்சத்திரம் என்றும் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவிவருகிறது.
இந்த சதய நட்சத்திரத்தின் ராசிநாதன் சனி பகவானாகவும், நட்சத்திர நாதன் ராகுவாகவும், நவாம்ச நாதர்களாக சதயம் ஒன்றென்றால் குருவாகவும், சதயம் இரண்டென் றால் சனியாகவும், சதயம் மூன்றென் றாலும் சனிபகவானாகவும், சதயம் நான்கென்றால் குரு பகவானாகவும், வருவார்கள்.
சதயம் ராகுவின் கர்மப் பதிவைக் கொண்டு விளங்குகிறது.
தெற்காசியா முழுவதும் கட்டியாண்டு வரலாற்றுப் புகழ்பெற்ற, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிர்வகித்து மக்களின் மனதிலும் வரலாற்று சுவடுகளிலும் தன்னை மெருகேற்றிக் கொண்ட அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம், இந்த சதய நட்சத்திரமாகும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வம்சாவளிகளில் சாமியாடிகள், குறி சொல்பவர்கள் போன்றோர்கள் இருப்பார்கள். மேலும் இவர்களின் தந்தைவழித் தோன்றல்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் அல்லது மன வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும்.
இவர்களது தனித்தன்மை, எந்த மறைமுகமான சதியினாலும் தோற்கடிக்கப்படவே முடியாது.
இவர்களது தனித்தன்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
சதயம் அதீத கோபமும், மீறிய காமமும் கொண்ட நட்சத்திரமாக ஜோதிடத்தில் அறியப் படுகிறது ஒரு ஜாதகத்தில் சதய நட்சத்திரத்தில் நின்ற கிரகமானது திடீர் மரணம், காணாமல் போனவர்களை பற்றி எடுத்துரைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிகவும் நளினமாகவும், பாரம்பரியத்தை மதிக்கும் குணமும், படைத்தவர்களாக இருப்பார்கள். நவீனத்தையும், ஏற்றுக்கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்களை வழி நடத்தும் ஒரு சரியான நபர் கிடைத்துவிட்டால் இவர்கள் வாழ்வில் வெற்றி அடைவதை யாராலும் தடுக்க இயலாது. இவர்களுக்கு ஏதாவது ஒரு தூண்டுகோல் இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
இவர்களுக்கு 34 வயதுக்கு மேற்பட்டபிறகே வாழ்க்கையில் மேம்பாடு தென்படும். பார்ப்ப தற்கு செல்வந்தர்கள்போல காட்சியளிப்பார் கள். இவர்களின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி யின் நிலையைப் பொருத்து திருமணம் வாழ்வு நிர்ணயிக்கப்படும். மேலும் இவர்களுக்கு தந்தையுடனான முரண்பாடுகள் இறுதிவரை இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் மருத்துவர்களாகவோ, சட்ட வல்லுநர் மற்றும் வழக்கறிஞர்களாகவோ இருந்தால் உயர்நிலையை எளிதில் எட்டிப் பிடிப் பார்கள்.
சதயம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் வீடான தனுசில் அமையப்பெறும். இந்த நிலையானது உயர் கல்வி, சூழ்நிலையை இறுக்கிப்பிடிப்பது, முரண்பாடு, பொறியில் படிப்புகளில் உயர்நிலை அடைவது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும். மேலும் நுணுக்க மான விஷயங்களை அறியும் கணிதம் சம்பந்தப் பட்ட கல்வி இவர்களுக்கு சிறப்பினைத் தரும்.
சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாச வீட்டில் சனியின் வீடான மகரத்தில் அமையப்பெறும். இந்நிலை யானது கனரக வாகனங்கள் சம்பந்தப் பட்ட தொழில், தூரம் செல்லுகின்ற தொழில், சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் போன்ற தொழில் அமையப்பெறும். கல்வியில், தொழிற்கல்வி எனப்படும் ஐ.டி.ஐ மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்படைவார்கள்.
சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சனியின் மற்றொரு வீடான கும்பத்தில் அமையப் பெறும். இந்நிலையானது இரண்டாம் பாதத் திற்குச் சொன்ன பலனை ஒத்தே இருக்கும். மேலும் போராடி சில விஷயங்களை அடையக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
சத்யம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் குருவின் மற்றொரு வீடான மீனத்தில் அமையப் பெறும். இந்த நிலையானது உயர்கல்விகளில் நாட்டம், கல்வி சார்ந்த துறைகளில் நாட்டம், பொறியியல் கல்வி கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்பிக்கும் திறன் போன்றவை உருவாக்கும். மேலும் வெளிநாட்டுப் போக்கு வரத்து போன்ற துறைகளில் இவர்கள் சிறப் படைவதை நிதர்சனத்தில் காணமுடிகின்றது.
சதய நட்சத்திரத்தின் உருவமாக பூங்கொத்து அமைந்துள்ளது. இதனை தொழில் செய்யும் இடங்களிலும் பணிசெய்யும் இடங்களிலும் லோகோவாக பயன்படுத்துவதன் மூலம் தொழிலில் செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை மற்றும் காலபைரவர்.
வணங்கவேண்டிய மரம்: கடம்ப மரம்.
அணியவேண்டிய ரத்தினம்: நீல புஷ்பராகம்.
(அடுத்த இதழில் பூரட்டாதி)
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/sathayam-t.jpg)