சென்ற இதழ் தொடர்ச்சி...
இனி, புதன் மற்றும் ராகு சம்பந்தத்தால் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் காணலாம்.
கல்வி
ஒருமனிதனுக்கு ஐந்து வயது முதல் 20 வயதுவரை கல்வி கற்கும் பருவம். இந்த காலகட்டங்களில் புதன் மற்றும் ராகு சம்பந்தம் இருந்தால் படிப்பில் கவனக் குறைவு இருக்கும். அடிக்கடி பள்ளியை மாற்றுவார்கள் அல்லது விளையாட்டுத்தனம் மிகுதியாக இருக்கும். பலருக்கு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் எழுத்துப்பிழை இருக்கும். சில மாணவர்கள், சான்றிதழில் உள்ளபடி மாற்றி எழுத நிர்பந்திக்கப்படுவார்கள். சிலர் தாங்களாகவே எண்ணியல்படி பெயரில் மாற்றம் செய்வார்கள். சமீபத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவப் படிப்பில் சேர முயன்றதை அறிந்தோம். இதுவும் புதன், ராகு- கேதுக்களின் தந்திரங்கள். இந்த அமைப்பு இருப்பவர்கள் சிறுவயதில் சரியாகப் படிக்காவிட்டாலும் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.
பரிகாரம்
புதன் மற்றும் ராகு சம்பந்தத்தால் கல்வியில் தடை, தாமதத்தை சந்திப்பவர்கள், வீட்டில் பவளமல்லிச் செடி வளர்க்கும்போது குழந்தை களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
நோய்
புதன் மற்றும் ராகுவுக்கு சம்பந்தம் இருப்பதால் தோல், நரம்பு மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருக்கும். குறிப்பாக சொரியாசிஸ், காது கேளாமை, வீரியக் குறைவு, ஆஸ்துமா போன்ற வற்றால் சிரமம் இருக்கும்.
பரிகாரம்
ஆங்கில மருத்துவத்தைத் தவிர்த்து சித்த வைத்தியத்தைக் கடைப்பிடித்தால் நோய்த் தாக்கம் குறையும். தினமும் தன்வந்திரி பகவானை வழிபட்டு சிறிது துளசி இலைகளை சாப்பிட்டுவர சுகமான பலன் உண்டு.
கடன்
புதன் காலபுருஷ ஆறாம் அதிபதி என்பதால், புதன், ராகு சம்பந்தம் கடனை உற்பத்தி செய்யும். எளிதில் தீராத மற்றும் தீர்க்க முடியாத கடனைத் தந்து மனிதனை வாழ்நாள் கடனாளியாகவே வாழவைக்கிறது. இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்கள் கடனால் ஏற்படும் துக்கத்தை எளிதில் மறக்கமுடியாத பாதிப்பை யும் தருகிறது.
பரிகாரம்
புதன்கிழமை மதியம் 12.00-1.30 மணிவரை யான ராகு வேளையில் சக்கரத்தாழ்வரை வழிபட பாதிப்பின் சுவடே தெரியாது.
நண்பர்கள்
சிறிய குழந்தைமுதல் நாட்டையாளும் அரசியல்வாதிகள்வரை நண்பர்களை, கூட்டாளிகளை நம்பிதான் இருக்கிறார்கள். புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்கள் நண்பர் களை, தொழில் கூட்டாளிகளை நம்பியே வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். இந்த கிரக சம்பந்தம் இருப்பவர்கள் நண்பர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிரக்கூடாது. கண்ட இடங்களில் குப்பையை மட்டுமல்ல; வீட்டு விஷயங்களையும் கொட்டக்கூடாது. நம்பிக்கை துரோகத்தால் நடுத்தெருவில் நிற்பார்கள்.
பரிகாரம்
புதன், ராகு சேர்க்கையால் தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், புதன்கிழமை காலை 6.00-7.00 மணிவரை யிலான புதன் ஓரையில், கருட வாகனத்தில் அமர்ந்த மகா விஷ்ணுவை வழிபட பாதிப்பு குறையும்.
வாழ்வியல்
ஜனனகால ஜாதகத்தில் மூன்று மற்றும் பன்னிரண்டாமிட சம்பந்தம் இருப்பவர்கள், அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்தும் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஏ.டி.எம் கார்டு, ஆர்.சி புக் போன்ற ஆலணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் மற்றும் தொலைப்பார்கள். இவர்களுக்கும் புதன், ராகு சம்பந்தம் இருக்கும். இதனால் பலமுறை அரசுக்கு தண்டம் கட்டும் நிலை ஏற்படலாம்.
பரிகாரம்
இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனத்தில் விநாயகர் ஸ்டிக்கர் ஒட்டவேண்டும். அல்லது சாவிக் கொத்தில் விநாயகரின் உருவப்படம் இருந்தால் பாதிப்பு குறையும்.
திருமணம்
மனித வாழ்வில் மிக முக்கியமான அத்தியாயம் திருமணம். ஜனனகால ஜாதகத்தில் புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்கள் பதிவுத் திருமணம் செய்தால், வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையால் மன உளைச்சலை அனுபவிக்கிறார்கள். "அலைபாயுதே' படம் போல பதிவுத் திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்கிறார்கள். அல்லது விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள்.
பரிகாரம்
முன்யோசனையின்றி தவறான முடிவெடுத் துப் பதிவுத் திருமணம் செய்துகொண்டவர்கள், பதிவுத் திருமணத்தால் மீளமுடியாத பிரச்சினையை சந்திப்பவர்கள் புதன்கிழமை காலை 7.30-9.00 மணிவரையிலான எமகண்ட நேரத்தில் இரட்டைப் பிள்ளையாருக்கு அறுகம்புல் சாற்றி வழிபட சுகமான வாழ்க்கை மலரும்.
சொத்து
காசு, காமம், சொத்து என்ற மூன்று தீய சக்திகளே உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணம். சொத்தினால் உருவாகும் எல்லைத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை உலகநாடுகளுக்கே இருக்கும்போது, தனி மனிதனுக்கு இல்லாமல் போகுமா? மண்ணாசையும் சகிப்புத்தன்மையும் இல்லாத வரை இது தொடர்கதையாகவே இருக்கும். சொத்து மற்றும் ஆவணங்களால் எழும் கருத்துவேறுபாட்டில் பலர் உயிரைக் கூட இழக்கத் தயங்குவதில்லை. சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் ரிஷப லக்னம், மூன்றாமிடத்தில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி. ஆவணங்களைக் குறிக்கும் புதனுக்கு திரிகோணத்தில் கேது இருப்பதா லும், சொத்து சுகத்தைக் குறிக்கும் நான்காம் அதிபதி சூரியன் மூன்றாமிடத்தில் இருப்ப தாலும்தான் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் எல்லைத் தகராறு இருந்து வருகிறது. புதனும் சனியும் சாரப் பரிவர்தனை பெற்று கேதுவுக்குத் திரிகோணத் தில் இருப்பது, ஆவணங்களால் ஏற்படும் கருத்து வேறுபாட்டை அதிகப்படுத்துகிறது. 3-ல் நிற்கும் சந்திரன் தசை, சனி புக்தி நடக் கிறது. மூன்றாமிடத்திற்குத் திரிகோணத்தில் ஜனன மற்றும் கோட்சார கேது. ஆக, மூன்றா மிடத்தின் வேலை கேதுவின் சம்பந்தத்து டன் வலிமையாக இருப்பதால், நாடுகளுக்கிடை யோன எல்லைப் பிரச்சினை சவாலாக இருந்து வருகிறது. கோட்சார குருவின் பார்வை மூன்றா மிடத்திற்கு இருப்பதால் பெரிய பாதகம் ஏற்படாது.
இனி, தனிமனிதர்களுக்கு சொத்தால், ஆவணத்தால் ஏற்படும் மன உளைச்சலையும் அதற்கான தீர்வையும் காணலாம்.
ஜோதிடத்தில் இளைய சகோரதத்தைப் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது. மூன்றாம் பாவகக்காரகர் செவ்வாய். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம். நமது ஜோதிட முன்னோடிகள் தீர்க்கதரிசிகள். மூன்றாமிடத்தால் ஒருவருக்கு அசௌகரியம் என்றால் சகோதரத்தாலும், ஆவணத்தாலும், சொத்தாலும் மட்டுமே வருமென்று ஆனிதரமாக வரையறுத்துள் ளார்கள்.
ஆக, மூன்றாமிடம் வலுவிழத்தவர்களுக்கு சகோதரத்தால், ஆவணத்தால் சாதகமற்ற பலன் ஏற்படுவது உறுதி என்று தெளிவாகிறது.
எத்தனையோ குடும்பங்களில் பூர்வீகச் சொத்தைப் பிரிக்கும்போது சகோதரர்களுக் குள் கருத்து வேறுபாட்டல், சொத்துடன் சகோதரர்களும் பிரிவதை அனுபவத்தில் பார்க்கிறோம். இவர்களுக்கு மூன்றாமிடம் பலவீனமாக இருப்பதுடன், புதனுக்கு நிச்சயம் ராகு மற்றும் கேதுக்களின் சம்பந்தமும் இருக்கும்.
ஜனனகால ஜாதகத்தில் நான்காமிடம், நான்காம் அதிபதி, செவ்வாய் வலிமை பெற்றிருந் தாலும், புதன், ராகு- கேது சம்பந்தமிருந்தால், சொத்துகளால் பயனடையமுடியாத வகையில் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை தலைவிரித்தாடும்.
இது ஒருபுறமிருக்க, கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் சிலர் மூன்றாமிடத்தால் தமக்கு ஏற்படப்போகும் அசௌகரியத்தை உணராமல், உடன்பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கிக் குவித்துவிட்டு பின்நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். மூன்றா மிடம் பலவீனத்துடன் புதன், சனி, ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும்விதமாகவே இருக்கிறது. சென்ற மாதம் நமது பாலஜோதிட வாசகர் தன் நண்பருக்காக, நண்பருடன் வந்து சந்தித்தார். பிரசன்னத்தில் ஆவணத்தால் பிரச் சினை வலுவாக இருக்கிறது என்று தெரிந்தது. தனது தந்தை இளம்வயதில் சம்பாதித்து தன் தம்பியின் பெயரில் சேர்த்து வைத்த சொத்தின் இன்றைய மதிப்பு 500 கோடி. அந்த சொத்து கிடைக்குமா என்பதே கேள்வி. 500 கோடிக்கு உரிமையாளர்களான தந்தையும் மகனும் சாதாரணமாக வாழ்கிறார்கள். பலர் சொத்து வாங்கும்போது சுய ஜாதகத்தைப் பரிசீலிப் பதில்லை. யார் பெயரில் சொத்து வாங்கு வதென்பது மிக முக்கியம்.
அதேபோல் பினாமி பெயரில் சொத்து வாங்குபவர்கள் பலருக்கும் இதே நிலைதான். ஜனனகால ஜாதகத்தில் புதன் , சனிக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் பினாமி பெயரில் சொத்து வாங்கக்கூடாது.
பரிகாரம்
சொத்தால், ஆவணத்தால் அவதிப்படுபவர் கள் சனிக்கிழமை காலை 6.00-7.00 மணி வரை யிலான சனி ஓரையில் 21 பேருக்கு இட்லி, எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்).
"கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு' என்பது பழமொழி. இங்கே கத்தியை ராகு வுடனும், புத்தியை புதனுடனும் ஒப்பிடலாம். புதன் என்ற புத்திகிரகம் வலிமையாக இயங்கும் போது மட்டுமே மனிதனால் தனது முன்னேற் றம் மற்றும் வளர்ச்சிக்கான சிந்தனை சிறப் பாக இருக்கும். புதனின் இயக்கம் ராகு- கேதுக் களால் மட்டுப்படுத்தப்படும்போது சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் வயதிற்கேற்ப மாறுபடும். அதேநேரத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தசாபுக்தி மற்றும் கோட் சாரத்துடன் சம்பந்தம் பெறும்போது ஏற்படும் விளைவுகள் அதிகமாகவும், மற்ற காலங்களில் பாதிப்பு குறைவாகவும் இருக்கும்.
பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும்போது, அவை சரியாகிவிடும். நம்மைச் சார்ந்தவர்களை நேசிக்கும்போதும் துன்புறுத்தாதபோதும் துக்கம் நம்மைத் துரத்தாது.
ஆழ்ந்த நம்பிக்கையுடன், ஆத்மசுத்தியுடன் பிரார்த்தித்தால் பிரபஞ்சத்திடமிருந்து நல்ல செய்திகள் உங்களைத் தேடிவரும்; வாழ்க்கை வசந்தமாகும்.
செல்: 98652 20406