னிதர்களுக்கு குணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் பழகும் விதத்தை வைத்துதான், பிறர் நம்மை நெருங்குவதும், வெறுப்பதும், உதவுவதும் உதறுவதும் நடைபெறும். நம்மில் வார்த்தைகளால் வாழ்க்கை இழந்தவர்கள் கோடி. உள்ளத்தில் இருப்பதுதான் வார்த்தைகளில் வரும். எந்த இடத்தில் எப்படிப் பேசவேண்டும், யாரிடம் எதைப் பேசவேண்டும் என்பதை அறிந்து பேசவேண்டும்.

நாம் பேசும் முறையிலிருந்தே நம் குணத்தைக் கண்டறிந்து விடுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரிந்தவர்களால்தான் இன்று நினைத்ததை சாதிக்க முடியும். ஒவ்வொருவர் பற்றிய உண்மைகளைப் பேசத் தொடங்கினால் எல்லாரும் நம்மைவிட்டு விலகிவிடுவர். சில விஷயங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நடந்து முடிந்ததை திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டிப் பேசும் பழக்கம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை வெறுக்கவே செய்வார்கள். யாரிடமும் நியாயம் கேட்டுப் பெறமுடியாத சூழலில் வாழ்கிறோம். கிடைத்ததை கிடைத்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இழந்துவிட்டுப் புலம்புதலை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் நினைத்

திருந்தால் அன்றே... என்னும் வெற்றுப் பெருமையால் எந்தப் பலனும் இல்லை.

nn

Advertisment

திறமை இருப்பவர்களைவிட சாதிப்பவர்களையே உலகம் கொண்டாடும். நம்மால் யாருக்காவது, ஏதாவது தேவை இருந்து கொண்டே இருந்தால்தான் நம்மைத் தேடி வருவார்கள். பிறருக்குப் பயன் படுவதாகவும், பிறரால் நாம் பயனடைவது மாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்தான் வாழமுடியும். நம் எதிரில் இருப்பவரின் மனநிலையை உணர்ந்தால்தான் அதன்படி செயல்பட்டு நம்மைக் காத்துக்கொள்ள முடியும். இத்தனை குணங்களும் மனிதர்களுக்கு எப்படி வருகிறது? நம் எண்ணத்தையும் செயலையும் கட்டுப்படுத்தி, நமக்கான குணத்தை உருவாக்குவதில் கிரகங்களின் பங்குதான் முதன்மையானது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உயர்ந்த மனிதராக உயர்த்தும் குணங்கள் பெறுவதற்கு கிரகங்களின் பங்களிப்பு?

லக்னத்தில் சூரியன் அமையப் பெற்றவர்கள் எளிதில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பர். குரு பார்வை பெற்றால் கோபத்தை அடக்கக் கூடியவர்கள். சுக்கிரன், புதன் பார்வை, இணைவு பெற்றவர்கள் நகைச்சுவையுடன் கேலி கிண்டல் செய்வதுபோல் குத்திக் காட்டிப் பேசுவர். செவ்வாய், சனி, ராகு சம்பந்தப்பட்டவர்கள் கோபத்தில் கண்டபடி பேசி, கையில் கிடைத்த பொருளையெடுத்து விளாசிவிடுவார்கள். கேது சம்பந்தப்பட்டால், ஒவ்வொன்றுக்கும் தன் வாழ்க்கையில் நடந்தை அல்லது கேள்விப்பட்டவற்றை குட்டிக்கதைபோல் சொல்லி விளக்கம் தருவர். வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இருந்தாலும் இத்தகைய குணத்துடனே இருப்பர்.

சூரியன் ஆதிக்கம் பெற்ற கார்த்திகை, உத்திரம், உத்திராடம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தைக் கொண்டவர்களுக்கு தான் என்கிற எண்ணமும், தன்னிடம் எல்லாரும் அடங்கிப் போகவேண்டும், தான் சொல்வதைச் செய்ய வேண்டும், எதிலும் தானே தலைமையாக இருக்க வேண்டும் என்கிற கர்வம் இயற்கையாக அமைந்துவிடும். சுபகிரகப் பார்வை பெற்றவர்கள் உயர்ந்த அரசாங்க ஆளுமையாகவும்,பெரிய பதவியிலும் இருப்பர். இவருக்குப் பணி செய்ய ஆட்கள் இருப்பர். பாவகிரகப் பார்வை, சேர்க்கை பலத்தைப் பொருத்து ரௌடி, தீவிரவாதிபோல் நடந்து கொள்வர். லக்னத்திற்கு சுபகிரகப் பார்வைகள் நற்குணத்தையும், பாவகிரக நிலையைப் பொருத்து கெடுகுணங்களையும் தரும்.

Advertisment

நல்ல தசாபுக்திகள் நற்பெயர், பணம், புகழைத் தரும். தீய தசையானது வழக்கு, நீதிமன்றம், ஜெயில், நோயாளி, மருத்துவமனை, தோல்விகள் போன்ற துன்பங்களை அதிகம் தரும்.

லக்னத்தில் சந்திரன் அமையப் பெற்றவர்கள் ஒரு நாள் பௌர்ணமி, ஒரு நாள் அமாவாசையாக, வளர்வதும் தேய்வதுமாய் குணம், உடல் நிலை, வாழ்க்கை முறை இருக்கும். பாவ கிரகங்கள் ஆட்சி, உச்சம், பார்வை, இணைவு வலுத் தன்மைக்கேற்ப பொய் சொல்வது, உளறிப் பேசுவது , கற்பனை செய்து புரளி கிளப்புவது, கோள் சொல்வது, ஏளனமாகப் பேசுவது, பிறரை நம்பவைத்துக் கழுத்தறுப்பது, உறவாடிக் கெடுப்பது, முகத்திற்குமுன்பு புகழ்வது- பின்பு கேவலமாகப் பேசுவது, தானே அழகு, குணமுள்ள அதிர்ஷ்டசாலி என தற்பெருமை பேசுவது என அனைத்திலும் முதன்மையானவராக காட்டிக்கொள்ள விரும்புவர். தான் வாழ பிறரைக் கெடுப்பார்கள். பிறர் வாழ்வது பொறுக்காமல் கெடுக்க நினைப்பார்கள்.

சுபகிரக சம்பந்தப்பட்டவர்கள் கற்பனை வளத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அரிய கண்டுபிடிப்புகளையும், காலத்தால் அழியா காவியத்தையும் படைப்பர். கற்பனைகளை நிஜமாக்கி, நினைத்த வாழ்க்கை கிடைத்து, மக்களின் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் மகான்களாக, தன்னை மக்களுக்காகக் கொடுத்து விடுவார்கள். சந்திரன் ஆதிக்கம் பெற்ற ரோகிணி, அஸ்தம், திருவோணம், கடக லக்னம், ராசிக்காரர்களில் தனக்காக மட்டும் வாழ்பவர்கள், மக்களுக்காகவே வாழ்பவர்கள் என இரு வகையினரும் உண்டு.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல் கொஞ்சம் நன்றாக இருந்தால் ஆணவமாகவும், பயந்தால் ஒரு வட்டத்துக்குள்ளும் ஒளிந்துகொள்வார்கள்.

லக்னத்தில் செவ்வாய் அமையப் பெற்றவர்கள் சுறுசுறுப்பானவர்கள். எளிதாக எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். எதுவும் உடனே உடனே நடக்கவேண்டும் என்கிற பிடிவாத குணம் கொண்டவர்கள். தைரியசாலிகள்.1, 4, 7, 8-ஆமிடப் பார்வை யில் சுப கிரகங்கள் இருந்து, சுபகிரக இணைவு, பார்வை பெற்றால் நினைத்ததை சாதிப்பர். அரசாங்க நன்மை பெறுவர். மருத்துவம் தொடர்பான அறிவு, தொழில் ஏற்படும். குரு பலம் பெற்றவர்கள் குருமங்கள யோகத்தால் புகழடைவர். நல்ல காரியத்திற் காகப் பிடிவாதம் பிடிப்பர்.

நேர்மையைக் கடைப்பிடிப்பவ ராகவும் இருப்பர்.

சூரியன், சனி, ராகு, கேது தொடர்பானது குற்றவாளியாக மாற்றும். வலுக் குறைந்த வர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வர். எதிர்மறை எண்ணம் கொண்டவராகவும், கண்ணில் படுபவர்கள் மீதெல்லாம் பொறாமையும் வெறுப்புணர்ச்சி யோடும் இருப்பர். வாழ்க்கையை வெறுப்ப வர்களாக மாற்றிவிடும். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், மேஷம், விருச்சிக லக்னக் காரர்களாக இருப்பவர்கள் பிறரை அடக்க முயல்வர். சுப கிரக வலிமை பெற்றவர்கள் மக்களால் புகழப்படுவர். நல்ல குணம் கொண்டவர்களாகவும் இருப்பர். பாவகிரக வலிமை வெறுப்பைப் பெறச்செய்யும். மேஷ லக்னக்காரர்களை விட விருச்சிக லக்னக்காரர்கள் எடுத்தெறிந்து பேசும் குணத்துடன், தேள் கொட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எளிதாக பிறர் மனதை நோகடிப்பர்.

லக்னத்தில் சுக்கிரன் அமையப் பெற்றவர்கள் உள்ளம், உணர்வு, உடை எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பார்கள். சுபகிரக சம்பந்தம் பெற்றவர்கள் அழகை ரசிப்பவர்களாகவும், கவிதை, நகைச்சுவை, கலையுணர்ச்சி மிக்கவர்களாகவும், மக்களுக் குப் பிடித்தவற்றைக் கண்டறிந்து செயல்படுத்திப் புகழ்பெறுவர். எதிர்பாலினத்தவரை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவராக இருப்பர். சுக்கிரன் ஆட்சி, உச்சம், சுபகிரகப் பார்வை, இணைவு போன்ற ஏதாவது சம்பந்தம் இருந்தால் கவர்ச்சி மிக்கவராக, எல்லாராலும் விரும்பக்கூடியவராக இருப்பார். ஏதாவது ஒரு வகையில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால், அழகை அடைய நினைப்பவர்களாகவும், எதிர்பாலினத்தவரை ஏமாற்றும் திறன் படைத்தவராகவும் மாறிவிடுவார். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேதுக்களின் சம்பந்தம் பெற்றால் தவறான தொழில் செய்ய விருப்பம் தோன்றும்.

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற பரணி, பூரம், பூராடம், ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் சுயநலத்துடன் கூடிய பொதுநல விரும்பிகளாக இருப்பர். ரிஷப லக்னக்காரர்கள் தனக்குத் தானே எதிரிகள்தான். துலா லக்னக்காரர்கள் தேவையான நேரத்தில் தேவையற்றதைப் பேசுவர். உடல் எதிரியாக இருக்கும். தனக் கென்று தனி நீதி, நியாயம் வைத்திருப்பர். அடுத்தவர்களை எடைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்.

லக்னத்தில் புதன் இருப்பவர்கள் அனைத்துத் துறை அறிவும் பெற்றவர்கள். புதன் பலம்பெற்றவர்கள் அறிவாளிகள். பிறவிக் கலைஞனாக இருப்பர். பலம் குறைந்தவர்கள். அடுத்தவர்களைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பர். பல்துறைகளில் ஞானம் பெற்றவர்கள், எந்த செயலைச் செய்தாலும் யோசித்துக்கொண்டே இருப்பதால் செயல் வேகம் குறையும். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தினால் சாதனையாளராக வருவர். சுப கிரகபீ பார்வை- அதாவது சுக்கிரன், சந்திரன், குரு இணைவு, பார்வை இருந்தாள் தான் கற்றதை, பெற்ற அனுபவத்தைப் பிறருக்குப் பயன்படும் வகையில் பதிவு செய்வர். எழுத்தாளராகவும், ஆசிரியராகவும், படைப்பாளி யாகவும் இருப்பர். பாவகிரகப் பார்வை பலம்பெற்றால் சுயநலவாதியாகவும், தவறான எதிர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பர். புதன் வலுப்பெற்றால் கலைத் துறையில் சிறந்த சாதனையாளராக வலம் வருவர். காலத்தால் அழியா காவியம் படைப்பர். பாவ கிரகச் சேர்கையில் சுபத் தன்மையோடு இருந்தால் தலைசிறந்த தொழில் நுட்பத்திறன் கொண்டவராக இருப்பர். தொழிற்கல்வி பயிலாவிட்டாலும் தொழில்நுட்ப அறிவிருக்கும். அனைவரையும் அனுசரித்துப் போகும் பாங்குண்டு.

மிதுன லக்ன, ராசிக்காரர்கள், தேவையான நேரத்தில் மட்டும் யாருக்கு என்ன என தேவையறிந்து கொடுத்து, தான் நினைத் ததை சாதித்துக் கொள்வர். பலமற்றவர்கள் ஏமாளியாக இருப்பர். கன்னி லக்ன, ராசிக் காரர்கள் காரியத்திற்காகப் பழகுவது, பேசுவது அப்பட்டமாகத் தெரியும். புதன் ஆதிக்கம் பெற்ற ஆயில்யம், கேட்டை, ரேவதி, மிதுனம், கன்னி லக்ன, ராசிக்காரர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிடலாம் என்றும், யாரை எங்கு, எப்படித் தட்டினால் விழுவார்கள் என்கிற வித்தையும் பெற்றவர்களாக இருப்பார்கள். சுயநலவாதிகள்.

லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர். ஓரிடத்தில் இருக்க விடாது.

தொடர்ச்சி வரும் இதழில்...

செல்: 96003 53748