எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
அவர், "எனது கால்களில் வலி, வீக்கம், கால்களை தூக்கிவைத்து நடக்க முடிய வில்லை. இடுப்பிலும் வலி, நானும், எனது மனைவியும் மட்டும்தான் வசிக்கிறோம். எனது பிள்ளைகள் உத்தியோகத்தின் காரணமாக வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். சில காரணங் களால் அவர்களுடன் சேர்ந்து வாழ நாங்கள் இருவரும் விரும்ப வில்லை. இப்போது என் மனைவி தான், என் தேவைகளை, காரியங் களைச் செய்து உதவுகிறாள்.
அவளுக்கும் வயதாகிவிட்டது. எனக்காக அவள் கஷ்டப் படுவதைப் பார்த்து மனதுக்குள்ளேயே அழுது கொள்கிறேன். எனது உடல் உபாதைதீர அகத்தியர் வழிகூறுவார் என்று அவரை நம்பி உங்களை நாடி வந்தேன்'' என்றார்.
அவர் கூறிய தைப் பொறுமை யாகக் கேட்டுக் கொண்டு, "இந்த உடல் உபாதைக்கு, நீங்கள் டாக்டர் களிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ள வில்லையா? அவர் கள் என்ன கூறினார் கள்?'' என்றேன்.
"உங்களுக்கு வயதாகிவிட்டது. எலும்பு கள் தேய்ந்துவிட்டன. முட்டி சவ்வுகள் கிழிந்துவிட்டன. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி வலி குறைய ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகளை சாப்பிடச் சொன்னார்கள். தினமும் கொஞ்ச தூரம் நடக்கவேண்டும் என்றார்கள். ஆனால் என்னால் நடக்கமுடியவில்லை'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித் துப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார். "தன் சுமையைத் தானே சுமக்கவேண்டும். தன் வலியைத் தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைத் துப் பெற்ற பிள்ளைகளின் உதவியை நாடாமலிருக்கும் இவரின் தன்மான உணர்வையும், வயதான காலத்தில், தனக்காக மனைவி சிரமப்படுகி றாளே, என்று மனைவி மீதுள்ள பாசத்தால் வருத்தப்படும் இவ னுக்கு சில யோகா சன தேகப் பயிற்சி முறைகளைக் கூறுகி றேன். அதனைத் தொடர்ந்து கடைப் பிடித்து செய்யச் சொல், வலி, சிரமம் குறையும். கால்களில் புத்துணர்ச்சி உண்டாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/legpain.jpg)
இவன் கட்டிலில், திண்ணையில், ஆசனத்தில் கால்களைத் தொங்கவிட்டு உட்காரும்போது, கால்கள் அசையாமல் ஒரே நிலையில் வைத்திருக்காமல், கால்கள் இரண்டையும், ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கால்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். நடக்கமுடியாத இவனுக்கு இது நடப்பதற்கு ஈடான பயிற்சியாகும்.
இதேபோன்று கால்களைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கும்போது இடக் காலை தரையில் ஊன்றிவைத்து, வலக்காலை மடித்து, இடது முழங்கால்முட்டிமீது வைத்து உட்காரச்சொல்.
(கோவில்களில் அம்மன், சுவாமி சிலைகள், கால்மீது கால் போட்டு அமர்ந்திருப்பதுபோல் அமர்ந்திருக்க வேண்டும்.)
இதுபோன்று உட்கார்ந்திருக்கும்போது, மூக்கின் இடப்பக்க துவாரத்தில், மூச்சுக்காற்று, சந்திர கலையாக உள் சென்றுவரும். இடப்பக்க மூச்சுக்காற்று, உடம்புக்கு சக்தியையும், மன அமைதியை யும் தரும்.
இதுபோன்று ஒரு நாழிகை (24 நிமிடம்) அமர்ந்திருந்து, பின்பு கால்களைத் தொங்கவிட்டு, ஒரு நாழிகை சென்றபின்பு மாற்றி மாற்றி அமர்ந்து செயல்படச் சொல்.
இவன் தரையில் உட்காரும்போது, சாதாரணமாக கால்களை மடக்கி சப்பணமிட்டு அமராமல், இடக்காலை மடக்கி கீழே வைத்து, அதன்மீது வலது காலை மடக்கிவைத்து அமரச் சொல்.
இதுபோன்று அமர்வதாலும், கால்களை தொங்கப்போட்டு அமர்வதால் கால்களில் நீர் தேங்கி, வீக்கம் உண்டாகாது. இதுபோன்று உட்காரும்போது, இடுப்பெலும்பு, முதுகெலும்பு, இயல்பாக தானாக நிமிர்ந்து உட்காரமுடியும்.
இந்த மூன்றுவிதமான யோகாசனப் பயிற்சிகளை கவனமாகச் செய்துவந்தால், இவன் இடுப்பு, கால்களில் உண்டாகும் வலிகள், கால்கள், பாதங்களில் வீக்கம் இருக்காது, ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தளர்ச்சி நீங்கும். சித்தர்களாகிய நாங்கள் கூறிய யோகாசனம் என்பது தேகப்பயிற்சிதானே தவிர, வேறு எதையும் தருவதில்ல. இவனைப்போன்று வயதானவர்கள் மட்டுமல்ல; வயது குறைவான இளைஞர்களும், செய்துவந்தால், அவர்களின் வயதான காலத்தில் இதுபோன்ற இடுப்பு, கால்வலி, கால்வீக்கம் வராது. வருமுன் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இவன் நான் கூறும் சில மூலிகை இலைகளை எண்ணெய்யில் போட்டு தைலமாகக் காய்ச்சி, அந்த தைல எண்ணெய்யைக் கால்களில் தடவி வரச்சொல். இவன் சிரமம், கஷ்டம் நிவர்த்தியாகும். அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியம் உண்டாகாது. சவ்வு சரியாகும்' என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.
"அகத்தியர் அருள்கூர்ந்து என் சிரமம்தீர, வழிகூறியதற்கு நன்றியையும், அவர் திருவடிக்கு வணக்கத்தையும், கூறிக்கொள்கிறேன். ஆசான் கூறியவற்றை தவறாமல் செய்து பணச்செலவில்லாமல், என் நோயை நானே தீர்த்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
இன்றையநாளில் அலுவலகத்தில் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு பணியாற்றும் இளைஞர்களும், வயது முதிர்ந்தவர்களும் இப்போதிருந்து இந்தப் பயிற்சியைத் தொடங்கிச் செய்துவந்தால் பின் வாழ்வில் இந்தப் பிரச்சினை இல்லாமல் போய்விடும். கால்மேல் கால்போட்டு அமர்ந்தால் சிலர். தன்னை மதிக்காமல் அமர்ந்துள்ளான் என்று கூறுவார்கள் என அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பிறருக்காக வாழாதீர்கள். உங்கள் நலனுக்காக, உங்களுக்காக வாழுங்கள்.
உங்கள் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/legpain-t.jpg)