விஷயங்களறிந்த பெற்றோர்களையும், பெரியோர் களையும் இக்காலத்தில் பலரும் உதாசீனப்படுத்தி ஒதுக்கிவைத்துவிடுகின்றனர். அதேபோல வீட்டுப் பூஜையறையில் இருக்கும் வழிபாட்டு உபகரணங்களுள் ஒன்றான பஞ்சபாத்திரம் எனும் தெய்வத்தன்மை வாய்ந்த சிறு தாமிரக் குவளையையும், அதனோடு சேர்ந்த உத்தரணி என்னும் சிறு கரண்டியையும் பூஜைக்காலத்தில் மட்டும் சிறிது நீரெடுத்து விட்ட பிறகு ஓரங்கட்டிவிடுகின்றனர். இதன் ஆன்மிக மகத்துவம் பலருக்கும் தெரியாமல் உள்ளது. சந்தியா காலத்தில் தோன்றும் வெற்றிதேவதைகளை வணங்கப் பயன்படுகிற பாத்திரமே பஞ்ச பாத்திரம்.

aa

திருமணக்காலங்களில் மணமகனுக்குச் சீர்வரிசை தரும்போதும், கன்னிகாதான நேரத்தில் தாரை வார்க்கும்போதும், பித்ரு பூஜை நடக்கும் காலத்தில் அர்க்கியம் விடும்போதும் என மனிதனின் ஜனனம் முதல் இறுதிவரை கூடவே வருவது பஞ்சபாத்திரம். நமக்கு ஏற்படும் துன்பங்களை அகற்றும் ஆற்றல் பஞ்சபாத்திரத்திற்கு உண்டு.

பஞ்சபாத்திரம் என்பது...?

Advertisment

வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட செம்பினாலான இந்த பூஜைப் பொருட் களுக்கு, மூன்று கோணங்களில் இதன் தெய்வத்தன்மை விவரிக்கப்படுகிறது. பஞ்சமுகம் என்றால் "விரிந்திருக்கிற- பரந் திருக்கிற' என்று பொருள். மேல்பகுதி முகம்போல் சற்று விரிந்து பெரிதாகவும், உடற்பாகம் சிறிதாக வும் இருக்கக் காண்கிறோம்.

இரண்டாவது விளக்கம்- இதற்குப் "பஞ்சபத்திர பாத்திரம்' என்று சாஸ்திர விதிப்படி பெயர் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஐந்துவகையான தெய்வ விருட்சங்களின் இலைகளை அந்த பாத்திரத்தில் தூய நீரிலிட்டு, அவை ஊறிய நீரை பூஜைக்காலத்தில் பயன்படுத்துவது. ஐந்துவகை இலைகள் ஊறும் நீர் அமிர்தம் எனப்படும்.

விநாயகருக்குரிய தெய்வப் பத்திரம் வன்னி, அறுகு; பரமேஸ்வரனுக்குரிய தெய்வப் பத்திரம் வில்வம். விஷ்ணுவுக்கான தெய்வப் பத்திரம் துளசி; அம்பிகைக்குரியதான வேம்பு ஆகிய ஐந்து பத்திரங் களைத் தூய நீரிலிட்டு வைக்கும் இந்த பாத்திரத்தில், பூஜைக்காலங்களில் (சந்தனம், குங்குமம் மலர் இட்டு) கை வைத்து மூடியபடி-

Advertisment

"கங்காதி சர்வ தீர்த்தேப்ய:

மயா ப்ரார்த்தனா க்ருதம்/

தோய மேதத் சுகஸ்பர்சம்

சௌக்யார்த்தம் ப்ரதி க்ருஹயதாம்//'

என்று பாத்யம் என்ற உபசாரமும்;

"நமஸ்தே தேவதேவேச

நமஸ்தே தரணீ தரே/

நமஸ்தே கமலா காந்தே

க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே//'

என்று அர்க்கியம்விடும் மந்திரங்களும் சொல்வது வழக்கம். அத்துடன் பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், ஏலக்காய், இலவங்கம், வெட்டிவேர், சிறிது மஞ்சள்பொடி ஆகியவற்றை இட்டுப் பயன்படுத்துவார்கள்.

ass

பிற்காலத்தில் இந்த நீரே இறைவனுக்கு அபிஷேக காலத்தில் ஊற்றப்படும் புனித நீராக மாறியது. பஞ்சபத்திரங்கள் இட்ட நீர்ப்பாத்திரமே பஞ்சபாத்திரம் என்று காலப்போக்கில் மருவிவிட்டது.

மூன்றாவதாக- தினந்தோறும் வழிபாட்டுக் காலங்களில் பூஜையறையிலும், கோவில் சந்நிதிகளிலும் அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் ஆகிய ஐந்து உபசாரங்களுக்கு ஐந்து வட்டில்கள் வைத்திருப்பார்கள். இந்த ஐவகை செப்புக் கிண்ணங் களும் வைணவ சம்பிரதாயப்படி பஞ்சபாத்திரம் எனப் பட்டன. இவற்றுக்கு ஆவாகன பூஜை செய்திட பஞ்சபாத்திரம் என்று தனியாக இருக்கும். அர்க்யம் என்பது இறைத்திருமேனியின் கைகளுக்கும், பாத்யம் என்பது பாதங்களுக்கும், ஆசமனீயம் என்பது வாயருகிலும், ஸ்நானீயம் என்பது திருமேனிக்கும், சர்வார்த்த தோயம் என்பது அனைத்து அங்கங்களுக்கும் விடப்படுகிறது.

ஆலயத்தில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குக் கொடுக்கப்படும் புனிதநீரை ஐந்தாவது (பஞ்சம்) பாத்திரத்தில் எடுத்துவந்து தருவார்கள்.

உத்தரணியின் சிறப்பு

உண்மையாக இதற்குப் பெயர் ருத்ரணி என்பதுதான். பஞ்சபாத்திரத்துடன் இணைந்தே இருக்கும். இது ருத்ரனின் அணிகலனாகிய உருவைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பாற்கடலைக் கடைந்துதான் அமிர்தத்தை எடுத்தனர். அதைப்போல பஞ்சபாத்திரத்தில் நீர் எடுக்கும்போது அது உயிர் காக்கின்ற அமிர்தமாக நமக்குக் கிடைக்க வேண்டுமென்னும் பொருளில் அந்த சிறு கரண்டியை வைத்தார்கள்.

அமிர்த சஞ்சீவினி பூஜை

கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு நதிகளை அழைத்து, வாசனை மலர்களையிட்டு பஞ்சபாத்திரத்திலுள்ள நீரை பூஜைக் காலத்தில் அருந்துகிறோம். ஆனால் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை ஐந்துமுறைகூறி, ஐவகைப் பத்திரங்களை இட்டு, அமிர்த மிருத்யுஞ்சய மந்திரம், ஆயுர்தேவி மந்திரம், அமிர்தசஞ்சீவினி மந்திரமாகிய காயத்ரி மந்திரம், த்ரியம்பக மந்திரத்தைக் கூறி, பஞ்சபாத்திரத்திற்கு பஞ்சோபசாரங்கள் செய்து, தர்ப்பைக் கூர்ச்சமிட்டு, நதிகளை நினைத்து வருணனையும் தியானித்து பாத்திரத்தை உத்தரணியுடன் கோலமிட்டு வைத்து, சுற்றிவந்து வழிபட்டபின், அந்த நீரை முறைப்படி கிழக்காக அமர்ந்து "அபிமந்திரணம்' செய்வார்கள். நீரை வலது உள்ளங்கையில் இட்டு கைகுவித்து, ரேகைவழியாக வாயிலிட்டு அருந்துதலுக்கு "அபிமந்திரணம்' என்று பெயர். உள்ளே விழுங்குதலை "ப்ராசனம்' எனவும் கூறலாம்.

"அகால மிருத்யுகரணம் சர்வ பாப

க்ஷயகரம் சர்வ வியாதி நிவாரணம்

அமிர்த சஞ்சீவன மந்த்ரசித்திம்

அமிர்தேஸ்வர பாதோதகம் சுபம்'

என்று பஞ்சபாத்திரத்தைப் பார்த்தவாறே உட்கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு அமிர்த சஞ்சீவினி பூஜைசெய்து நீர் உட்கொண்டு, அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்துவந்தால் ஆயுள்விருத்தி ஏற்பட்டு, நோய்கள் அகன்று உடம்பில் தேஜஸ் ஏற்படும்.

சந்தியா தேவதை அருட்பார்வை

கதிரவன் மறையும்- பகலும் இரவும் தொடுகின்ற வேளைக்கு சந்தியா காலம் என்று பெயர். இக்காலத்தில் செய்யப்படும் பரிகாரப் பூஜைகளுக்கு விரைவாகப் பலன் கிடைத்துவிடும். காரணம், இந்த நேரத்தில் சந்தியா தேவதை தோன்றி, "இந்த பக்தன் செய்கின்ற பூஜை விரைவில் வெற்றி பெறட்டும்' என்று வாழ்த்துகிறாள். சந்தியா வந்தன காலம் மூன்றுவகை உண்டு.

அதிகாலை வானில் நட்சத்திரங்கள் மறையும்முன் வரும் காலம்- ப்ராத காலம். மதியம் 12 மணிமுதல் 12.30 மணிக்குள் வரும் காலம்- மத்யான காலம். மாலையில் சூரியன் அஸ்தமன மாகிற சமயம்- சாயங்காலம். மேலும் பஞ்சபாத்திர உத்தரணியை எடுத்துக்கொண்டு ஜபம்செய்ய இக்காலங்களில் எவரொருவர் செல்கிறாரோ, "எல்லா ஐஸ்வர்யங்களும் இவருக்கு ஏற்படட்டும்' என்று சந்தியாதேவி ஆசிர்வதிக்கிறாள்.

சந்தியா காலத்தில் சந்தியாதேவி அருட் பார்வையும் ஆசிகளும் கிடைக்க, காயத்ரி மந்திர ஜபத்தைப் பஞ்ச பாத்திர உத்தரணியுடன் அமர்ந்து, முறைப்படி குரு உபதேசம் பெற்றுச் செய்தல்வேண்டும்.

அட்சய பாத்திரம் அள்ளக்குறையாமல் அன்னத்தையும் செல்வங்களையும் அருளவல்லது. அதைப்போல ஒரு குடும்பத்தின் பூஜையறையில் பஞ்சபாத்திரம் என்னும் அட்சய பாத்திரம் தெய்வமாக மதிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டால், குடும்பத்தலைவருக்கு வேண்டியதைக் கொடுக்கும் என்பதும் ஒரு தேவரகசியம்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வளர்ச்சியடையவும், நடுத்தர வாழ்விலுள்ள மனிதர்கள் இன்னும் உயர்ந்த அந்தஸ்துக்குச் செல்லவும் கையில் பஞ்ச பாத்திரம் வைத்துக்கொண்டு, பூஜைக்காலங்களில் விதிப்படி அதற்குரிய உபசாரங்களைச் செய்து, பஞ்சபாத்திரத்திற்கு அங்க மந்திரங்களைச் சொல்லி வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும்.

பூஜையறை மணியில் 11 ருத்திரர்கள், தீபத்தில் மகாலக்ஷ்மி, உபசார தீபத்தில் துர்க்கை அமர்ந்திருப்பதையறிந்து வணங்கு வதுபோல, வாழ்க்கைக் காலத்தை நீடித்து வளம்தரும் அமிர்த நீருடன் விளங்கும் பஞ்சபாத்திரத்தை தெய்வமாக வணங்கி, வற்றாத செல்வத்தையும் துன்பமில்லாப் பெருவாழ்வும் பெறுவோம்.

செல்: 91765 39026