ப் எச். சதீஷ்குமார், சென்னை.

எனக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை. வீட்டிற்கு ஒரு பிள்ளை நான். எனக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை யென்று என் பெற்றோர்கள் மிகவும் கவலையாக உள்ளனர். ஆண் வாரிசு கிடைக்குமா?

ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. மேலும் ஒரு ஆண் வாரிசைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். ரிஷப லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ஒரு வாரிசு, குழந்தை பற்றி ஜோதிடத் தேடலில் 5, 9, 10-ஆமிடங்களைப் பரிசீலிக்க வேண்டும். புத்திரகாரகர் குருவின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். உங்கள் ரிஷப லக்ன 5-ஆமதிபதி புதன், சுக்கிர சாரம் வாங்கி சுக்கிரனோடு உள்ளார். 9-ஆம், 10-ஆமதிபதி சனியும் சுக்கிர சாரத்தில் உள்ளார். சுக்கிரன் என்பது ஒரு பெண் கிரகம். அதனால் உங்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். நடப்பு சனி தசை, சுக்கிர புக்தி. இதில் குழந்தை பிறந் தாலும், அதுவும் பெண் குழந்தையாகவே இருக்கும். யோசித்துக்கொள்ளவும். இவ்வாறு, ஆண் வாரிசு வேண்டுமென அடம் பிடிக்கும் அன்பர்களுக்கென ஒரு ஆலயம் உள்ளது. திருச்சி- உறையூர் பாண்டமங்கலம் ஆலயத்தில், காசி விஸ்வநாத ரையும், காசி விசாலட்சியை யும் வணங்கி, அங்குள்ள அரசமரத்தை வலம்வந்து நெய் தீபமேற்றி பூஜை செய்ய ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டாகும்; முயற்சி செய்துபாருங்கள்.

Advertisment

aa

ப் வினோதினி.

வழக்கிலுள்ள வீடு கிடைக்குமா?

2-2-1993-ல் பிறந்தவர். கும்ப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். உங்கள் 4-ஆமதிபதி சுக்கிரன் உச்சம். 4-ல் உச்ச சந்திரன். நடப்பு ராகு தசை, சந்திர புக்தி 2023, அக்டோபர்வரை. இதற்குள் வழக்கிலுள்ள வீடு கைக்கு வந்து சேர்ந்துவிடும். நீங்கள் எப்போதும் வழக்கு எதுவும் போடக்கூடாது. வழக்குகளில் வெற்றிபெற விழுப்புரம்- திருவெண்ணெய் நல்லூர் வாதாடீஸ்வரர் சந்நிதியில் பக்தர்கள் பிராது கொடுத்து வழிபடவேண்டும். வழக்கில் வெற்றிபெற்றவுடன் பிராதை வாபஸ் பெறவேண்டும்.

ப் பி.ஜி. தனஞ்செழியன், வேலூர்.

இத்துடன் என் மகள்- மருமகன் ஜாதகம், என் ஜாதகம், என் மகன் ஜாதகம் இணைத்துள்ளேன். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகிறது. எனக் கும் உடல்நிலை அடிக்கடி சரியில்லா மல் போகிறது. எனக்கு வரும் கேது தசை எவ்வாறு இருக்கும்? என் மகன் கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்குச் செல்லாமல் இருக்கிறான். அவனுக்கு நல்லவேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது செய்யலாம்?

நீங்கள் 21-9-1963-ல் பிறந்தவர். மகர லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு புதன் தசை 2023, மே மாதம் வரை உள்ளது. புதன் உச்சம். அவரே 9 மற்றும் 6-ஆமதிபதியாகிறார். எனவே புதன் தசையில் சற்று உடல்நிலை சீராக இருந்திருக்காது. மேலும் அவர் 8-ஆமதிபதி சூரியனின் சாரத்தில் நிற்கிறார். எனவே நன்மை குறைவாகவே இருந்திருக்கும். அடுத்துவரும் கேது தசையில், தசாநாதர் கேது 12-ல் இருந்து நடத்துகிறார். இவர் சாரம் வாங்கிய சுக்கிரன் நீசபங்கம். எனவே கேது தசையின் போக்கு முதலில் தோல்வி, பின் வெற்றி எனும் அளவில்தான் அமையும். நிறைய அலைச்சலும் விரயமும் தருவார். இவ்வித கேது தசை நடப்பவர்கள், காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனை வழிபடலாம். அல்லது சிவன் கோவிலில் சண்டிகேஸ்வரரை வழிபடுவது நன்மையளிக்கும். உங்கள் மகன் 17-6-1997-ல் பிறந்தவர். மேஷ லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். ராசியில் குரு நீசம். சனியின் பரிவர்த்தனையால் நீசபங்கம். இவரின் 6-ஆமதிபதி புதன், செவ்வாய் சாரத்தில் இருப்பதால், இவர் தொடர்ச்சியாக வேலைபார்ப்பது சற்று கடினம்தான். ஆனால் இவரின் செவ்வாய், சனி பார்வையும், 5, 7-ன் அதிபதிகளின் இணைவும் காதல் திருமணத்தைக் கூறுகிறது. குருபகவான் மீனத்தில் இருக்கும் இந்த ஒரு வருடத்தில் நல்லவேலை கிடைக்கும். காதல் திருமணமும் நடக்கும். நடப்பு சனி தசை- 12-ல் இருந்து தசை நடத்துகிறார். விரயம், அலைச்சல் உண்டு. எனினும், மாமனாரின் அரசு ஒப்பந்தத் தொழிலில் ஈடுபடும் வாய்ப்பும் ஏற்படும். வேலூர் அருகே ஆம்பூரில், சனிபகவானை மிதித்த திருக்கோலத்தில் அனுமன் தரிசனம் தருகிறார். எனவே சனிபகவானின் பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஆஞ்சனேயரை வணங்குவது சிறப்பு. சனிக்கிழமைதோறும் வணங்கவும். மருமகன் பாலாஜி 1-4-1989-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னாதிபதி, 11-ஆமதிபதி சுக்கிரன், குரு பரிவர்த்தனை. சுக்கிரன் உச்சம். 8-ல் இருக்கும் சனி 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-ஆமதிபதி புதன் நீசபங்கம். நடப்பு ராகு தசை 2022, நவம்பர் 18 வரை. அதன்பின் வரும் குரு தசையில் புத்திர பாக்கியம் கிடைக்கும். சனியின் பார்வையும், 5-ஆமிட அதிபதியின் நீசபங்கமும் குழந்தை பாக்கியத்தை தாமதம் செய்கிறது. மேலும் இவரின் 3-ஆமதிபதி சந்திரன், இரு பாவ கிரகங்களான சனி, ராகுவுக்கிடையே அகப்பட்டுக் கொண்டுள்ளார். எனவே தகுந்த மருத்துவ உதவி இவருக்குத் தேவை. 11-ஆமிடத்தில் சூரியன் உள்ள ஜாதகர் களுக்கு அனைத்து தோஷமும் அடிபட்டு விடும் என்பது ஜோதிட விதி. எனவே குலதெய்வ வழிபாடு, சீக்கிரம் குழந்தைப்பேறு கொடுக்கும். மகள் மோனிகா 22-12-1994-ல் பிறந்த வர். கும்ப லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். இவருக்கும் 11-ல் சூரியன், உடன் 5-ஆமதிபதியும் உள்ளார். இவரின் புத்திரகாரகன் குருவை சனி பார்ப்பதால், புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்துகிறார். நடப்பு சுக்கிர தசை குரு புக்தி 2023 வரை. அதற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவரின் 9-ஆமதிபதி சுக்கிரனுடன் ராகு சேர்க்கை. இவருக்கு கர்ப்பப்பை சம்பந்தமாக கொஞ்சம் பிரச்சினை இருக்கும். இவ்வித பிரச்சினை உள்ளவர்கள் திருச்சி பேட்டைவாய்த்தலை சென்று வணங்கவும். புத்திர பாக்கியம் தாமதமாகிவரும் தம்பதிகள், நவகிரக ஹோமம் செய்து, பின் திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதரை வழிபட்டு, அங்கு தரும் திருக்கண்ண அமுதைப் பருகிவந்தால் கண்டிப்பாக மகப்பேறு கிடைக்கும்.

ப் மாரியம்மன், சிதம்பரம்.

என் இளைய மகன் நல்ல வேலையை விட்டுவிட்டு மன உளைச்சலில் உள்ளான். நிரந்த வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?

துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன் 5-ல் குரு பார்வையில் உள்ளார். குரு நீச புதனுடன் பரிவர்த்தனையாகி, புதனை நீசபங்கமாக்கி உள்ளார். சந்திரன் 8-ஆமிடத்தில் உச்சம். இந்த ஜாதக அமைப்புப்படி, இவர் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பார். 6-ஆமிடத்தில் புதன் 12-ஆமதிபதியாகி, நீசபங்கமாகி அமர்ந்திருப்பது தான் காரணம். ஆனாலும் வேலை மாறிமாறிக் கிடைக்க, அதனை இவர் சளைக்காமல் விலகி விலகி புதுவேலையில் சேர்வார். இதற்குக் காரணம், 8-ல் உச்சமான சந்திரன் இவருக்கு வேண்டாத எண்ணங்களைக் கொடுத்து அலைக்கழிக்கச் செய்துவிடுவார். நிரந்தர வேலையெனில் குரு தசையில் சுக்கிரபுக்தியில் அமையும். இதே சுக்கிர புக்தியில் கலப்பு- காதல் மணம் நடக்கும். நிரந்தர வேலை கிடைக்க கஷ்டப்படுகிறவர்கள் திருச்சி- முசிறி, திருத்தலையூர் சென்று, சுவாமி சப்தரிஷீஸ்வரர், அம்பாள் குங்கும வல்லியை ரோஜாப்பூ அணிவித்து, அபிஷேகம் செய்து வழிபட, நிரந்தர வேலை கிடைக்கும்.

செல்: 94449 61845