பராசர முனிவர் மைத்ரேயருக்குக் கூறிவருகிறார்.
"இந்த மக்கள் எதனையும் சரியாகச் செய்ய தெரியாதவனை, செய்யமுடியாதவனை, படிக்காதவனை "நீ மாடு மேய்க்கத்தான் சரியானவன்' என்று கேவல மாகக் கூறுவார்கள். மாடுகளை மேய்ப்பவர்களை, தாழ்ந்த சாதியினர் என்று கூறுவார்கள். கிருஷ்ணர் தான் வாழ்வதற்கு இந்த இனத்தையும், மாடுமேய்க்கும் தொழிலையும் தேர்ந்தெடுத்ததன்மூலம் கூறும் கருத்தை அறிவோம்.
பெற்றவர்கள் ஆதரவில்லாமல், பணம், சொத்து, வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்து, அன்றாடம் உழைத்துவாழும் பாமர மக்கள், தங்கள் உழைப்பால் உயர்ந்த வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொள்ளமுடியும் என்பதையும், படித்தவன்தான் அறிவாளி, படிக்காதவன் முட்டாள் என்று கூறும் கற்றவர் கர்வத்தை அடக்கவும், கற்றவனால் இந்த உலகம் உயர்வடையாது; உழைப்பாளியால்தான் உலகம் உயர்வை அடையும் என்பதையும், மனிதர்களிடையே மொழி பேதம், தொழில் பேதம் இருக்கலாம்;
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parigaram_70.jpg)
ஆனால் உயர்ந்தவன்- தாழ்ந்தவன், மதம், குலம் என்ற பேதம் கிடையாது; எல்லாரும் ஓரினம்- எல்லாரும் ஓர் குலம் என்பதை கலியுகத்தில் மக்கள் புரிந்துகொள்ளவே, யாதவ குலத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தார். கிருஷ்ணர் மதம், சாதி மறுப்புக் கொள்கை கொண்டவர்.
இராமர் எப்போதும் தன் கையில் வில், அம்பு ஆயுதங் களை வைத்துக்கொண்டு, ரிஷி, முனிவர்களுக்குத் தொல்லைதரும் அசுரர்களை மட்டுமே கொன்றழித் தார். அசுர குலத்தை முற்றாக அழிக்கவில்லை.
கிருஷ்ணர் தனது பிறப்புமுதல் இறப்புவரை எந்த சூழ்நிலை யிலும் எந்தவொரு ஆயுதத்தையும் கையில் எந்தவில்லை. தன்னைக் கொல்ல வந்த எதிரிகளை, அசுரர் களை கையாலேயே அடித்துக் கொன்றார். கிருஷ்ணரின் அவதார நோக்கத்தில் அசுரர்களை முற்றாக அழித்துவிடவேண்டும் என்பதும் ஒன்றா கும். கிருஷ்ணர் அசுரவம்ச வாரிசுகளைக் கொன்று, அசுரவம்ச வளர்ச்சியைத்தான் முதலில் தடுத்தார். அதன்பின் அசுர மன்னர் களையும், அவர்களின் போர்படைத் தளபதிகள், படைவீரர்களைக் கொன்று, அசுரர்கள் குலத்தையே முடித்தார். பகையில் மிச்சம், பணக்கடன், பாவ- சாபக் கடனில் மிச்சம், நெருப்பில் மிச்சம் வைக்கக்கூடாது என்பது கிருஷ்ணரின் கொள்கை. கிருஷ்ணர் தன் வாழ்வில் அறிவையே ஆயுதமாகவும், உடல் பலத்தையே போர்படையாகவும் பயன்படுத்தி தனது. எதிரிகளை அழித்தார்.
கிருஷ்ணர் தனது வாழ்வில் தனது நலன், தனது பெற்றோர் நலன், மனைவி கள், குழந்தைகள் நலன் என, தனது குடும்பத்தார், தன் யாதவ இன மக்கள் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அவர்கள் ஆசைப்பட்டதை அடையச் செய்து, நிம்மதி யாக வாழச்செய்தார். ரிஷிகள், முனிவர்கள் போன்றவர்கள் கூறுவதைக்கேட்டு எதனையும் செய்யவில்லை. அவர்கள் தன் வாழ்க் கையில் ஈடுபடாமல் அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார். எந்த சூழ்நிலையிலும், தனக்கு வேண்டியவர்களுக்காக நியாயம் தவறி எதனையும் செய்யவில்லை.
இன்றையநாளில், கிருஷ்ணரைப் பற்றி கதை சொல்வோர், அவரை மாயக் கண்ணன், கள்வன், ஏமாற்றுபவன், தந்திரவாதி என ஒரு மோசடி நபர்போல கூறுகிறார்கள்.
இவர்கள் கண்ணனைப் பற்றி அறியாதவர் கள். கண்ணனின் ஒவ்வொரு செயலுக்கும் உண்மையான காரணத்தை அறியாதவர்கள்.
கிருஷ்ணரைப் போன்று ஒரு நேர்மை யான, நியாயத்தை கடைப்பிடித்தவரைக் காண முடியாது. தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாதவர். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. இப்போது ஒரு நிகழ்வை அறிவோம்.
இராமன்- வாலி, சுக்ரீவன் சகோதர சண்டையில், சுக்ரீவனுக்கு ஆதரவாக மறைந் திருந்து வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர குலத்திற்கு அரசனாக்கினார். இராமன் நியாயம் தவறி செயல்பட்டார்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நாட்டைப் பங்குபிரிப்பதில் பங்காளிச் சண்டை ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் ஆதரவாக இருந்தார். கிருஷ்ணர் நினைத்திருந்தால் எந்தப் பிரச்சினையுமின்றி பாண்டவர்களுக்குரிய பங்கினை வாங்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.
அஸ்தினாபுரத்து அரசன் திருதராஷ் டிரனுக்கும், அவன் மனைவி காந்தாரிக்கும், தாம்பத்திய உறவினால் முறைப்படி பிறந்த புத்திரர்கள், அரசவம்ச வாரிசுகள் துரியோதனன் முதலான கௌரவர்கள் 100 பேர். ஆனால் நாட்டில் பாதிப்பங்கு கேட்கும் பாண்டவர்கள் ஐந்து பேரும் திருதராஷ்டிரனின் தம்பியான பாண்டுவுக்கும், அவன் மனைவி குந்திதேவிக்கும் நேரடி தாம்பத்திய உறவில் முறையாகப் பிறந்த குழந்தைகள் அல்ல. அரசுரிமை, சொத்தில் உரிமையுள்ள குடும்ப வாரிசுகள் அல்ல.
பாண்டு மன்னன் மனைவியான குந்திதேவி, எமதர்மனுடன் உறவுகொண்டு தர்மரைப் பெற்றெடுத்தாள். வாயுதேவனுடன் இணைந்து பீமனையும், இந்திரனுடன் சேர்ந்து அர்ச்சுனனையும், அஸ்வினி தேவர்களுடன் கலந்து, நகுவன், சகாதேவன் என்ற இரண்டு மகன்களையும் பெற்றாள். தனது சிற்றப்பா, பாண்டுமன்னனுடன் வாழ்ந்து குந்திதேவி பாண்டவர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பதால்தான், துரியோதனன் பங்குதர மறுத் தான். துரியோதனன் தரமறுப்பது நியாயம் என்பதால்தான், பீஷ்மர் முதலான அனைத்து பெரியோர்களும் பாண்டவர்களுக்காகப் பரிந்த பேசவில்லை. கௌரவர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதால்தான், கிருஷ்ணர் நியாயத்தை மீறி பாண்டவர்களுக்கு உதவி செய்யவில்லை. பாரதப் போரில்கூட அர்ச்சுனனுக்கு தேரோட்டியாகத்தான் இருந்தாரே தவிர ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் போராட வில்லை.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/parigaram-t_0.jpg)