மிதுன ராசியில் மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களும் உள்ளன.
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புளிப்பு, கார உணவுகளில் அதிகப் பிரியம் உள்ளவர்கள். இவர்களுக்கு மிருகமாக பெண் சாரை வரும். அதனால் இவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். தன் நோக் கத்திற்கு மட்டும் செய்வார்களே தவிர, பிறர் நோக்கத்திற்கு முடிவெடுக்கமாட்டார்கள்.
திருவாதிரையில் பிறந்த அனைவருமே சிவபெரு மானின் நட்சத்திரத்தைப் பெற்றவர்கள். தானுண்டு; தன் வேலையுண்டு என்றிருப்பார்கள். அதிகமான எண்ணங் களையும், நோக்கங்களையும் பெற்று, கல்வியில் தேர்ச்சி யும், கணிதத்தில் வல்லமையும், பேச்சில் சாமர்த்தியமும் கொண்டு திகழ்வார்கள். இவர்களது ஆரம்ப தசை ராகு தசை. பிறக்கும்பொழுது ராகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி அல்லது மகரத்தில் வரவேண்டும். அப்படிப்பட்டவர்கள் கல்வியில் தேர்ச் சியும், எப்போதும் சிரித்துப் பேசும் குணமுடை யவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும், ஆச்சார அனுஷ்டானங்களில் நம்பிக்கையும், கீர்த்தியும் பெற்றிருப்பார்கள். பிறப்பின் போது ராகு மேற்சொன்ன ஐந்து வீடுகள் தவிர, மற்ற இடங்களில் வந்தால் வாழ்க்கை யில் ஏற்ற- இறக்கங் களைக் கொடுத்துவிடும். அதற்கான பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் தந்திரமாகப் பேசும் குணமுடையவர்கள். நீண்ட உடலமைப்பு கொண்ட வர்கள். தைரியமானவர்கள். கறாரும் கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுது வதிலும், கலைத்துறையிலும் ஆர்வமும் திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வம், செல்வாக்குடன் முன்னேற் றத்தை அடைவார்கள்.
பரிகாரம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதத்தினருக்கு: உங்களை ராகு பகவான் இயக்குகிறார். வெள்ளிக்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கா தேவியை வணங்கிவர அனைத்து நன்மைகளும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை யில் ஒருமுறையாவது கதிராமங்கலம் சென்று வனதுர்க்கையை வழிபட்டுவர, வேண்டியது நடக்கும்.
திருவாதிரை நட்சத் திரக்காரர்களுக்கு: இதில் பிறந்தவர்கள் சனியையும் ராகுவையும் வணங்க வேண்டும். திருவாதிரை சிவபெருமானின் நட்சத் திரம். எனவேதான் சிவபெரு மானின் கழுத்தில் பாம்பு உள்ளது. இவர்கள் திருக் கொள்ளிக்காடு அல்லது சிவகங்கை மாவட்டம், பெரிச்சிக் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சனீஸ் வரரை வழிபட்டுவர மேன்மை யுண்டாகும். வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் வாழ் பவர்கள்-
"மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு'
என்று தினசரி ஒரே நேரத்தில் 18 முறை சொல்லி வணங்கிவர வாழ்வில் மேன்மையுறலாம்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதத்தினருக்கு: புனர்பூச நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் குரு பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள்.
இவர்களுக்கு அருள்பாலிப்பவர் திருச்செந்தூர் முருகன். ஏனெனில் குருவும் அவரே; செவ்வாயும் அவரே. தென்முகக் கடவுளா னவர் வீற்றிருக்கும் தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி, சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் அருகேயுள்ள பட்ட மங்கலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குரு பகவானை வருடம் ஒருமுறை தரிசிக்க வேண்டும். வாழ்வில் வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மையுறலாம். அவ்வாறு தரிசனம் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்லி வணங்கி மேன்மையுறலாம்.
"குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாதகுரு நேசா
க்ரஹ தோஷமின்றி கடாக்ஷித் தருள்வாய்.'
செல்: 94871 68174