இன்றைய சமூகதில் பல ஆண்களுக்குத் திருமணம் அமைவது கேள்விக்குறியாக? உள்ளது .இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவரவர் பிறக்கும்போது அமையும் கிரகங்களின் நிலையே முக்கிய காரணமாகும். ஒருவரின் திருமணம் தடைப்பட அல்லது தாமதமாக ஏழாமிடம், பூர்வ புண்ணியாதிபதி நீசம், அஸ்தங்கம், வக்ரகதி, பகை கிரகங்களுடன் இணைவு, பகைவீட்டில் இருந்தாலும், பாவிகளின் பார்வை இருந்தாலும், 6, 8, 12-ல் மறைந் திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
செவ்வாய், ராகு- கேது இவர்களாலும் அதிக அளவு சிரமங்களும், அவமானங்களும் வருகிறது. திருமணம் தாமதமாக மேற்கண்ட காரணங்கள்தான் முக்கியமானவையாகும். இதற்கு பல்வேறு நிவர்த்திகள் உள்ளன.
ஆண்களுக்கு ரதி பூஜை
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் ரதி- மன்மதன் சிலைகள் உள்ளன. திருமண மாகாத ஆண்கள் ரதிக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் ரதியின் சிற்பத்தினை தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும், தேங்காய், பழம், சூடம், பத்திவைத்து பூஜைசெய்து, சிற்பத்தின் கையிலுள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு சிற்பத்தினை மூன்றுமுறை வலம்வரவேண்டும். பிறகு பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு அர்ச்சனைசெய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணமாகும்.
பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பக்கு, சூடம், பத்தி, குங்குமம் தேவைப்படும்.
திண்டுக்கல்- கரூர் சாலையில்ஃ திண்டுக்கல்லுக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அனைத்து பேருந்து வசதிகளும் உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rathi.jpg)
பெண்களுக்கு மன்மதன் பூஜை
பெண்களின் திருமண வாழ்வுக்கு மிகவும் பொருத்த மானது ஜனன ஜாதகம்தான்.
பெண்களின் ஜாதகத்தில் 2, 3, 7, 8, 9-ல் பாவிகள் தொடர்பும், பார்வையும் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலமுடன் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் நலம் கிட்டும். ஒவ்வெரு ஜாதகத்தில் சந்திர பலன் அவசியம். சந்திரன் சுப பலம் அவசியம்.
ஒருவரின் திருமணம் தாமதமாக பூர்வ புண்ணியாதிபதியும், ஏழாமதிபதியும் நீசம், வக்ரகதி, பகை கிரகங்கள் இணைவு, பார்வை, 6, 8, 12-ல் மறைவு, செவ்வாய், சனி, சூரியன் தொடர்பில்லாமல் இருப்பது அவசியம்.
திருமணம் தாமதமாகும் பெண்களுக்கு மன்மதன் பூஜை விவரம்...
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோவில் மண்டபத்தில் மன்மதன்- ரதி சிலை உள்ளாது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் மன்மதனுக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டுவைத்து, பின்பு, ஒரு மாலையை சிற்பத்தின் கழுத்திலும், மற்றொரு மாலையைக் கையில் போட்டும், தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜைசெய்து, சிற்பத்தின் கையிலுள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு, சிற்பத்தினை மூன்றுமுறை வலம் வந்து, பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு அர்ச்சனைசெய்து வழிபட்டுவந்தால் விரைவில் திருமணமாகும்.
பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள், இரண்டு மாலைகள், ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்குமம் தேவைப் படும்.
திருமணமானவுடன் சௌந்தரராஜப் பெருமாளை தாம்பதியுடன் வந்து பூஜைகள் செய்யவேண்டும்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோவில் உள்ளது.
சேலம் மாவட்டம், ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்குமுன் ஈசனைப் பூஜித்ததால், இறைவன் காமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
குமார சம்பவம்- அதாவது முருகனின் திரு அவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின்மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோவில்கொண்ட தர்மபுரியாகும்.
மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர்மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாளநாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்.
கும்பகோணம் அருகே திருலோக்கியில் ரதி- மன்மதன் கோவில் உள்ளது. வியாழக்கிழமை புனுகு, ஜவ்வாது, இனிப்பு, மல்லிகை வாங்கிச்சென்று அர்ச்சனை செய்யலாம். குருபகவான் தனிச் சந்நிதியில் இருக்கிறார். பார்வதிபரமேஸ்வரன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருக்கிறார்.
மதுரை- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வலப்புறத் தூணிலும் ரதி- மன்மதன் அருள்பாலிக்கிறார்கள்.
செல்: 96006 07603
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/rathi-t.jpg)