7. புனர்பூசம்
இந்த நட்சத்திரத்தின் 1, 2, 3-ஆம் பாதங்கள் மிதுனத்திலும், 4-ஆம் பாதம் கடகத்திலும் பரவியுள்ளது. இது மிதுனத்தில் 23.20 டிகிரியில் இருந்து, 30.00 டிகிரி வரையும், கடகத்தில் 3.20 டிகிரி வரையும் உள்ளது. இந்த பூனர்பூச நட்சத்திரத்தின் சாரநாதர் குரு ஆவார். இவரது நட்சத்திரத்தில் ராகு நின்றால், ஒரு குருவின் சாரத்தில் ராகு நிற்கிறார் என்று அர்த்தமாகும். இவர் மிதுனத் தில் நின்றால் புதன்+குரு+ராகு என்றாகும். கடகத்தில் இருப்பின் சந்திரன்+குரு+ராகு என அர்த்தமாகும்.
மச்சம்: புனர்பூசத்தில் ராகு இருப்பின், மூக்கில் மச்சம் இருக்கும்.
குணம்: குரு என்பவர் மிக மிக தர்ம மிகு கிரகம் ராகு என்பவர் மிக மிக கெட்ட கிரகம். ஆக ஒரு நல்ல கிரக சாரத்தில் ராகு செல்லும்போது, அந்த ஜாதகரின் குணம் எவ்விதம் இருக்கும். உலகிலேயே இவர்களைப்போல் நல்லவர்கள் கிடையாது என பேசுவர். ஆனால், வாக்கில் இருக்கும் குளிர்ச்சி, மனதில் இராது. தேன் தடவிய சொற்களும், விஷம் கோர்த்த அர்த்தமாகவும் இருப்பர். இவர்களை எல்லாரும் மிக நம்புவர். ஆனால் ரொம்ப நாள் பழகிய பிறகுதான், இவர் எவ்வளவு ஆபத்தானவர் என தெரிய வரும். இவர்களின் தர்மமான செயல்களில், சங்கடம் ஒளிந்திருக்கும். கள்ளம் கலந்திருக்கும். நிறைய போலி சாமியார்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.
நல்ல பலன்: குரு சுபமாகி இருப்பின், ஒரு குருவின் காலில் அமர்ந்த ராகு, நல்ல எதிர்மறையான, குறுக்கு வழிகளை சொல்லித் தருவார். படிக்கும் மாணவர்கள், சிறு, சிறு குறிப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு, முழு பரீட்சையையும் எழுத வைத்துவிடுவார். எவ்வளது தூரமான பயணங்களையும், குறுக்கு சந்துகளை கடந்து, சீக்கிரமாகவே சென்றடைந்துவிடுவார். மூளை பரபர வென்று வேலை செய்யும். இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பர். மனித குலத்துக்கு தேவையானவற்றை, எளிதில், குறுகிய காலத்தில் கிடைக்கச் செய்வார். அந்த ஆற்றலும், அறிவும், பரபரப்பும் நிறைந்து காணப்படுவர்.
கெட்ட பலன்: சாரநாதர் குரு அசுபராகி இருப்பின் ஒன்றை ஒன்பதாக்கி கூறுவர். வார்த்தைகளில் அலங்காரம் மிளிரும். ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கும். இவர்கள் எந்தத் தொழில், செய்தாலும், இவர்கள் நிறைய வேறுபட்ட புதிய தகவல்கள் கொடுப்பார்கள். அத்தனை விஷயங்கள்மூலம் நிறைய ஆதாயம் தேடிக்கொள்வர். நாளடைவில், இவர்களின் சொந்தகளுக்கும் , பேச்சிற்கும் மரியாதை இல்லாமல் போய்விடும். இவர்கள் என்ன சொன்னாலும், உடனே நம்பிவிடாமல், நாலு பேரிடம் விசாரிப்பர். அல்லது கூகுளில் அலசிப் பார்த்து, ஆராய்ந்து தெளிவு பெறுவர்.
தொழில்: இவர்கள் அனேகமாக, பிறருக்கு அறிவுரை கூறும் வேலையை செய்வர். அது ஜோதிடமாக இருக்கலாம். வழக்கறிஞர்களாக வேலை செய்யலாம். கவுன்சிலிங் கொடுப்பார்கள். யாகம், பூஜை செய்வதற்கு ஆட்கள் தேடித் தருவர். குழந்தைகள் நலம் சார்ந்த எழுத்து வேலை சரியாக வரும். வேத பாடசாலையில், உபாயத்யராக பணி புரிவர். பசு மடங்களை நிர்வாகம் செய்வர். நீதிமன்றத் தில், உதவியாளர் பணி கிடைக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raghu_27.jpg)
பயண டிக்கெட் எற்பாட்டாளர்களாக இருப்பர்.
நாடி ஜோதிட கணக்கு: நாடி ஜோதிடப்படி, குரு என்பவர் ஜாதகரை குறிப்பார். ராகு ஜாதகரின் தாத்தாவைக் குறிப்பார். எனவே இவரும் இவரின் பாட்டானாகும் தவறான ஆலோசனையில் ஈடுபடுவார்கள். இல்லையெனில், ஜாதகர் வேற்று மத சம்பிராதயங்களை விரும்பி ஈடுபடுவார். பிறமத கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்.
பரிகாரம்: பண்ணாரி மாரியம்மனை வணங்குவது நல்லது. இஷ்ட துர்க்கை வழிபாடு நன்மை தரும். துர்க்கைக்கு நூல் புடவை சார்த்தியும், குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடலாம். வியாழன் அல்லது திங்கட்கிழமைகளில் வழிபடலாம். சாதுக்களுக்கு தேவையறிந்து உதவலாம்.
8. பூசம்
இதன் சாரநாதர் சனி ஆவார். இந்நட்சத்திரம் கடக ராசியில் 3.20 டிகிரி முதல் 16.40 டிகிரி வரை உள்ளது.
உங்களின் பிறந்த ஜாதகத்தில், ராசி, லக்னம் எதுவாயினும், ராகு பகவான் கடக ராசியில் அமர்ந்து, அவர் பூச நட்சத்திரக்காலில் நின்றால் உண்டாகும்.
பலன்: இது ராகு+சனி என்ற கணக்கில் வரும்.
மச்சம்: இவர்களுக்கு முகத்தில் எங்காவது மச்சம் இருக்கும்.
குணம்: ராகு என்பவர் தடலடியான பெரும் போக்கான குணம் கொண்டவர். அவர் வாங்கிய சாரநாதர் சனியோ மந்தக் குணம் கொண்டவர். எனவே எதிரெதிர் குண நலன்கள் கொண்ட அமைப்பிது. இதனால் இவர்கள், எப்போது அமைதியாக இருப்பர். எப்போது ரௌத்திரமாக மாறுவர் என யாராலும் கணிக்கை இயலாது. இவர்கள் விஷயம் நல்லபடியாக முடிய வேண்டுமெனில், ஒரு கொக்கு தவமாய் காத்திருப்பது போல், பொறுமையுடன் தன் காரியத்தை பூர்த்தி செய்துவிடுவர். அதுபோல் யாரைவது பழி வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், அப்போதும் சரியான தருணத்திற்கு காத்திருந்து. வஞ்சம் தீர்த்துக்கொள்வர். எனவே கொஞ்ச காலம் இவரிடம் பழகியவர்கள், ஒரு நெருப்புடன் பழகுவதுபோல், கவனமாக பேசுவர்.
நல்ல பலன்: சாரநாதர் சனி சுபத் தன்மை பெற்றால், இவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள். நல்லதோ- கெட்டதோ பொறுமை காப்பார்கள். இவர்களை நம்பியவர்களை கைவிட மாட்டார்கள். துரோகம் செய்வதவர்களை துவைத்து எடுத்து விடுவர். சனி சாரத்தில், கடகத்தில் செல்லும் ராகு ரொம்பவும் ஆர்ப்பாட்டமாக இருக்கமாட்டார். எதையும் ஆழ்ந்து சிந்திப்பார்கள். ஆழ்ந்த சிந்தனை அடக்கம் தரும். அடக்கம் மனிதருள் மேன்மை தரும். இவர்கள் எந்த கல்வி கற்றா லும், அதில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேறுவர். உங்கள் ஜாதகத்தில், பூச நட்சத்திரத்தில் அமர்ந்த ராகு, உஙகளை அதிகம் சிந்தனை வசப்படுத்துவார். சிந்தனை அதிகம் உள்ளவர் சிறப்புக்கு உரியவர்தானே!
கெட்ட பலன்: சாரநாதர் சனி கெட்டால், உங்களுக்கு யாராவது சிறு கெடுதல் செய்தாலும், அதை மன்னித்து மறக்க மாட்டீர்கள். பழி வாங்கும் குணம் பலமாக இருக்கும். இதற்கு அமர்ந்த ராகுவும் பாபர். சாரம் தந்த, சனியும் பாபர். எனவே இரு பாபக கிரகங்களின் சம்பந்தம், ஜாதகரை இலகுவாக இயங்கவிடாது. இறுக்கமான மனநிலையிலேயே வைத்திருக்கும்.
தொழில்: நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும், தொழில் விஷயங்களை பிரித்து, அலசி ஆராய்வீர்கள். இதனை கொச்சைத் தமிழில் சொன்னால், நோண்டிக்கிட்டே இருப்பார் என அர்த்தமாகும். இந்த குணத்தால், நீங்கள் அனேகமாக இயந்திரங்களை, கழற்றிமாட்டும் வேலை, கார், பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கடை, கப்பல், நீர் இறைக்கும் இயந்திரம், அணைகட்டுவது. விவசாயம், மீன்பிடி தொழில், கால்வாய் இயந்திரம் என்பது போன்று பணி, தொழில் அமையும். இடம் கொடுத்தவர் கடக சந்திரன் எனவே தொழில், நீர் நிலை ஆதாரம் பெறும்.
நோய்: மார்பு, நுரையீரல் நோய், பல் வலி, மூச்சுவிடுவது பற்றிய கோளாறு, விக்கல் போன்றவை அவ்வப்போது பாடாய்படுத்தும்.
நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடக் கணக்கப்படி, ராகு தாத்தாவையும், சனி வேலை செய்யும் ஊழியரை குறிக்கும். மேலும் சனி, தொழிலையும், ராகு வெளிநாட்டையும் குறிக்கும். இதன்மூலம், உங்கள் தொழிலில், வேலை செய்பவர்கள்மூலம் தொந்தரவும் வரும். அது கூடவே வெளிநாட்டு சம்பந்தமும் கிடைக்கும். சிலருக்கு பாட்டானாரின் தொழிலை இவர்கள் கவனிப்பார்கள்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சிறப்பு, குறிப்பாக, பைரவருக்கு, அபிஷேக பொருட் களை காணிக்கை கொடுப்பதும், துர்க்கைக்கு, நல்லெண்ணை கொடுப்பது நன்று.
9. ஆயில்யம்
இது கடக ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் புதன் ஆவார். இது 16.40 டிகிரி முதல் 30.00 டிகிரி வரை உள்ளது. உங்கள் பிறந்த ஜாதகம் எந்த ராசி அல்லது எந்த லக்னமாக இருப்பினும், ராகு பகவான், கடக ராசியில், ஆயில்யம் நட்சத்திரத்தில் நிற்கும் போது, அவர் ராகு+புதன் என்றாகிறார்.
இதன் பலன்கள்.
மச்சம்: இவர்களுடய காதுகளில் மச்சம் இருக்கும்.
குணம்: ராகு வெகு வேகமான கிரகம். இவருடைய சாரநாதர் புதனும் லேசுப் பட்டவரில்லை. அவரும் ஒரு வேக கிரகம், மற்றும் புத்திசாலிக் கிரகம். ஒரு மூளையுள்ள கிரகக் காலில், எதிர் மறைத்தன்மை கொண்ட ராகு சென்றால் எவ்விதம் இருக்கும். இவ்வித அமைப்பு கொண்டவர்கள் எதையும் வேறு விதமாக யோசிப்பர். எல்லாரும் ஒருவிதமாக கணக்குப் போட்டால், இவர்கள் வேறுவித மாக கணக்கிடுவர். எதையும் குதர்க்கமாக செய்வர். வேண்டாத்தனமும் விளையான செயலும் மிகுந்திருக்கும். இவர்களிடம் ஒன்றைக் கூறினால், அதனை வேறு விதமாக பரப்பிவிடுவர்.
நல்ல பலன்: அதீத கற்பனைகளால், இவ்வித அமைப்புகொண்ட ஜாதகர்கள் கலைத்துறையில் மிளிர்வர். கவிதை எழுதுவது, கதை பண்ணுவது, நாடக அமைப்பு, கலை அலங்காரம் செய்தல், வீடுகளை புதுமையாக அமைத்தல், கணக்கு பாடத்தில் திறமையானவராகவும் இருத்தல். எதையும் புள்ளி விவரக் கணக்கோடு கையாளுதல் என இருப்பர்.
கெட்ட பலன்: சாரநாதர் புதன் கெட்டி ருந்தால், கணக்கில் புலியாக இருப்பதால் கள்ளக்கணக்கு அருமையாக எழுதுவர். கலை உலகில் புதுமையைச் செய்கிறேன் என்று வேண்டாத் தனம் செய்து, அனைவரை யும் முகம் சுளிக்கச் செய்வர். பத்திரிகை துறையில் அந்நியாமாக கிசு கிசு எழுதுவதால் அவ்வப்போது கை, கால் முறிவு ஏற்படும். கைபேசியில் கண்ட தகவல்களை பரப்பு வதால், சில நேரங்களில் அரசு தண்டனைக்கு ஆளாவார்கள்.
தொழில்: நிறைய மொழிகள் தெரிந்து வைத்திருப்பதால், மொழி பெயர்ப்பு வேலை செய்வார். கலை, எழுத்து உலகில் வேலை வாய்ப்புண்டு சிலர் அரசியல் பத்திரிகை அல்லது கிசுகிசு பத்திரிகை நடத்துவர். மானாவாரியாக பேசு முடியுமாதலால், சுற்றுலா வழிகாட்டி ஆகிவிடுவார். சிலர் மனநல மருத்துவராக இருப்பர். விமான பயம் சார்ந்த தொழில், வேலையை நிறைய மனிதர்கள் மேற்கொள்வர். மனவள கலை பற்றிய பயிற்சி வகுப்பு எடுப்பார்கள்.
நாடி ஜோதிட கணக்கு: ராகு, தாத்தா வெளிநாட்டு பயணம், ரகசிய தொடர்பு என இதனைக் குறிக்கும். புதன், தாய்மாமன், இளைய சகோதரன், கல்வி, குசும்புத்தனம் தோட்டம் இவைகளை குறிக்கும். இதிலிருந்து உங்கள் பாட்டானாருக்கும், தாய்- மாமனாருக்கும் ஆகாது எனலாம். உங்கள் இளைய சகோதரன் வெளிநாட்டில் கல்வி கற்பார் அல்லது இரகசிய தொடர்புகளுடன் உங்கள் தாய்- மாமன், தம்பி இவர்கள் இருக்கக்கூடும் எனவும் கூறலாம்.
பரிகாரம்: ராகு+புதன் சேர்க்கை எனும்போது, ஸ்ரீரங்கம் போன்ற பெருமாளை வணங்குவது நல்லது. மற்றும் திருவனந்த புரம் பத்மநாப சுவாமி, ஹயக்கீரிவர் இவர் களையும் வணங்கலாம்.
அடுத்த இதழில்...
மகம், பூரம், உத்திரம்
செல்: 94449 61845
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-05/raghu-t_1.jpg)