சிம்ம லக்னத்தில் சூரியனின் எதிரியான ராகு பகவான் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மன அமைதி இல்லாமலிருப்பார். உயர்பதவிக்காக ரகசியமாக சில காரியங்களைச் செய்வார். தைரியசாலியாக இருப்பார். பலரும் அதற்காக அவரைப் பாராட்டுவார்கள். அந்த தைரியத்தால் அவர் வெற்றிபெறுவார்.

2-ஆம் பாவத்தில் தன் நண்பரான புதனின் வீட்டில், கன்னி ராசியில் ராகு பகவான் இருந்தால் குடும்பத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். எனினும் ஜாதகருக்கு வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைக்கக் கூடியவராக இருப் பார். ரகசியமாக செயல்பட்டு தன் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வார். குறுக் குவழியில் பணம் சம்பாதிப்பார். எப்போதும் சாதுரியமாக செயல்படுவார்.

3-ஆம் பாவத்தில் ராகு பகவான் துலா ராசியில் இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்பு களால் சிறிய பிரச்சினைகள் உண்டாகும்.

Advertisment

123

ஆனால், தைரியமாக செயல்பட்டு வெற்றி பெறுவார். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் பெறுவார். மனதில் குடும்பத்தைப் பற்றிய சிந்தனை எப்போது மிருக்கும்.

4-ஆம் பாவத்தில் ராகு பகவான் விருச்சிக ராசியில், எதிரி செவ்வாயின் வீட்டில் இருந்தால் தாய்க்கு உடல்நல பாதிப்பிருக்கும். மனதில் கவலையிருக்கும். பூமி, வாகனம் வாங்குவதில் சில தடங்கல்கள் இருக்கும். வீட்டில் அமைதியற்ற நிலை காணப் படும். சிலர் இருக்குமிடத்தை விட்டு வெளியே சென்று வேலை பார்ப்பார்கள்.

5-ஆம் பாவத்தில் ராகு பகவான் குருவின் தனுசு ராசியில் நீசமடைகிறார். அதனால் பிள்ளைகளால் சில கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் குறை ஏற்படும். ஜாதகர் தன் அயோக் கியத்தனங்கள் வெளியே தெரியாத வகையில் பார்த்துக்கொள்வார்.

6-ஆம் பாவத்தில் சனி பகவானின் மகர ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்குப் பகைவர்களால் பிரச்சினைகள் உண்டாகும். ஆனால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார்.

7-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் மனக் கஷ்டங்கள் உண்டாகும். வர்த்தகத்தில் சில தடங்கல்கள் உண்டாகும். ஜாதகர் கடுமையாக உழைத்து, ரகசியமாக செயல்பட்டு தன் காரியங்களைச் சாதிப்பார்.

அதன்மூலம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவார்.

8-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகர் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். அன்றாடச் செயல்களை நினைத்து மனதில் கவலை உண்டாகும். உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். இல்லா விட்டால் வயிற்றில் பிரச்சினை உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு பகவான் இருந்தால் அதிர்ஷ்டத்தில் தடைகள் இருக்கும். நடக்கவேண்டிய நல்ல செயல்கள் இறுதி நிமிடத்தில் நடக்காமல் நின்றுவிடும். அதனால் மனதில் கவலை உண்டாகும். சிலர் தர்மச் செயல்களைச் செய்ய முடியாது. சிலர் வெறுப்பு காரணமாக கடவுளை வழி படமாட்டார்கள்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவிருக்கும். வியாபாரத்தில் தடங்கல்கள் இருக்கும். அரசாங்க விஷயங் களில் பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் ராகு தசை நடந்தால் ராஜயோகம் உண்டாகும். ஜாதகர் தைரியத்துடன் வாழ்வார்.

11-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் ராகு பகவான் உச்சமடை கிறார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகருக்கு பல வகைகளில் வருமானம் வரும். சிலருக்கு திடீர் பண வரவிருக்கும்.

12-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் ராகு பகவான் இருந்தால் ஜாதகருக்கு வீண் செலவுகள் இருக்கும். அதன்காரணமாக மனதில் கவலை உண்டாகும். சில நேரங்களில் அதிக அளவில் கஷ்டங்கள் உண்டாகும். அதனால் அதிக மனக்கவலை ஏற்படும்.

செல்: 98401 11534