க்னத்தில், சனியின் மகர ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத் தைக் கொண்டிருப்பார். மனதில் அதிகமான சிந்தனைகள் தோன்றும். வீண் சிந்தனைகள் நிறைய இருக்கும். வெற்றி பெறவேண்டுமென்ற எண்ணத்துடன் ஜாதகர் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பார். எப்போதும் சாதுரிய குணத்துட னும் எச்சரிக்கை உணர்வுடனும் இருப்பார்.

2-ஆம் பாவத் தில் சனியின் கும்ப ராசியில் ராகு இருந் தால் ஜாதகர் எப்போதும் பணத் தைப் பற்றிய சிந்தனையுடனே இருப்பார். குடும் பத்தில் கஷ்டம் இருக்கும். ரகசிய செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் ராகு இருந் தால் உடன்பிறந் தோரால் பிரச்சினை ஏற்படும். அதனால் மனக் கவலை உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல ரகசிய காரியங்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.

4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் ராகு இருந்தால் அன்னையின் உடல்நலத்தில் குறையிருக்கும். வீட்டில் சந்தோஷ சூழல் இருக்காது. சிலர் சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று வாழ்வார்கள். பல முயற்சிகளில் ஈடுபட்டு, இறுதியாக வெற்றி பெறுவார்கள். பல தகிடுதத்தங்களில் ஈடுபட்டு பணத்தை சம்பாதிப்பார்கள்.

Advertisment

5-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் ராகு இருந்தால் பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். படிக்கும் காலத்தில் பல தடங்கல்கள் இருக்கும். அறிவு வேகமாக வேலை செய்யும். ஜாதகர் சில ரகசிய செயல்களின்மூலம் பணம் சம்பாதிப் பார். அவருக்கு பெயர், புகழ் இருக்கும்.

rr

Advertisment

6-ஆம் பாவத் தில் புதனின் மிதுன ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் தன் பகைவர்களை வெல்வார். பல சிக்கல்களைக் கடந்து, வெற்றி கிடைக்கும். பலருடன் சேர்ந்து வெற்றிக் கனியைப் பறிப்பார். ரகசிய செயல்களைச் செய்வதில் மன்னராக இருப்பார்.

7-ஆம் பாவத் தில் சந்திரனின் கடக ராசியில் ராகு இருந்தால் மனைவி யால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தைரியசாலியாய் இருப்பார். பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வெற்றிபெறுவார். எனினும், மனதில் சிறிய அளவில் கவலைகள் இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் ராகு இருந்தால் நோயின் பாதிப்பிருக்கும். சிலர் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். சிலருக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை உண்டாகும்.

9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் ராகு இருந்தால் அதிர்ஷ்டத்தில் தடைகள் ஏற்படும். ஜாதகர் பல சட்ட விரோத செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார். வாழ்க்கையில் கடுமையான போட்டி இருக்கும். எனினும், சிறிய லாபம் கிடைக்கும். மனதில் கவலை இருக்கும்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் ராகு இருந்தால் தந்தைக்கு சில பிரச்சினைகள் இருக்கும். அரசாங்க விஷயத்தில் சில தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு ராகு தசை நடக்கும்போது பெரிய பதவி கிடைக்கும். சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள்.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் ராகு இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தைச் சம்பாதிப்பார். பல தவறான வழிகளில் சென்றும் பணம் சம்பாதிப்பார். வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

12-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். செலவுகளைக் கட்டுப் படுத்து வதற்கு ஜாதகர் மிகவும் சிரமப் படுவார். வெளியே பெரிய பணக்காரரைப் போல ஜாதகர் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆடம் பரமாக செல வழித்து மாட்டிக் கொள்வார்.

செல்: 98401 11534