proverbs

"நேர்மையான அரசு, மதச் சடங்குகள் செய்வதற்கு அனைவருக்கும் பாதுகாப்பளிக்கிறது. அதே நேரத்தில் உண்மையான மதம் அரசுக்கு உறுதுணையாக விளங்குகிறது.' -ஜார்ஜ் வாஷிங்டன்

இன்னுமொரு பழமொழியைப் பார்ப்போம்.

Advertisment

"மதம் இருக்கும்போதே மக்கள் இத்தணை ஒழுக்கக் கேட்டில் வாழ்கின்றனர்.மதம் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை எவ்வாறிருக்கும்?' -பெஞ்சமின் பிராங்க்ளின்

"ஒரு மிகச்சிறந்த பழமொழியிலிருந்து பெரிய ஆறுதல் உண்டாகலாம்.' - இது சுவிட்சர்லாந்து பழமொழி.

"ஏமாறக்கூடாதென்று நீ நினைத்தால் மூன்று கடைகளில் விலையைக் கேள்'. -சீனப் பழமொழி

Advertisment

"நன்மை- தீமை இரண்டிற்கும் நிச்சயமாகக் கைம்மாறுண்டு. ஒன்றும் நடக்கவில்லையென்றால், அந்த நேரம் இன்னும் வரவில்லை.' -சீனப் பழமொழி

"கதவுகள் எப்போது தட்டப்படலாம் என்பதை, சாஸ்திரம் உணர்த்தும் பழமொழிகளை கவனிக்காதவன் தவறுகளைத் தவிர்க்கமாட்டான்.' -துருக்கி

"ஆண்டவன் உன்னுடைய ஜாதியையும் பிறப்பையும் கேட்கமாட்டான். அவன் உன்னிடம் கேட்பதெல்லாம் பூமியில் நீ என்ன செய்தாய் என்பதை மட்டும்தான்.' -பாரசீகப் பழமொழி

நம் நாட்டில் மட்டுமல்ல; உலகில் எங்குமுள்ள பழமொழிகள், அவர்கள் அனுபவித்து உணர்ந்த வாழ்க்கையின் உண்மைதனை சுருக்கமாகக் கோடிட்டு உணர்த்தியுள்ளனர். அதனை நாம் பண்டைய சாஸ்திரங்களுடன் ஒப்பிட்டால் பல உண்மைகள் புலப்படும். பழுத்த அனுபவத்தின் சாரம்தான் பழமொழி. ஒவ்வொரு பழமொழியும் அறிவின் கருவூலமாகவும், அனுபவத்தின் முத்திரைகளைத் தாங்கிக்கொண்ட நெடுமரமாகவும் நிற்கும் தன்மையுடையது.

தமிழில் "முன்றுரையனார்' என்ற பெரும் புலவர் "பழமொழி நானூறு' என்ற சிறந்த நூலை அக்காலத்தில் இயற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் "பதினெண் கீழ்க்கணக்கு' என்ற அருமைநூலும் உண்டு. காலத்தின் வேகமான வளர்ச்சியால் இப்போது பழமொழிகள் காண்பதரிதாகிவிட்டன. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவாளிகள். காரணம் அவர்கள்அறிந்துகொள்வதும் புரிந்து கொள்வதும் அதிகம்.

-ஜேம்ஸ் ஸ்டீபன்.

இந்து சாஸ்திரத்தில் அர்த்த நாரீஸ்வரர் என்ற கடவுள் ஆண்பாதி- பெண்பாதி என விளங்குவார்.

அதாவது சிவன் பாதி, சக்தி பாதி என்பது. தலைப்புக்கு வருவோம்.

"கடன் வாங்கி ஏழையானாலும், கடன் கொடுத்து ஏழையாகாதே. முட்டாளும் பணம் சம்பாதிக்கலாம். அதைக் காப்பாற்ற புத்திசாலியால் மட்டுமே முடியும்.'

பரிகாரம்: சுண்டு விரலின் நேர்கீழ்பாகம் புதன் மேடு. அதில் கரும்புள்ளி தோன்றினாலும், சுண்டு விரல் குட்டையாக இருந்தாலும் பிறருக்குக் கடன் கொடுப்பது கூடாது.இனாமாக கொஞ்சம் கொடுத்து சமாளிப்பது நன்று. சந்திர மேட்டில் கரும்புள்ளி தென்பட்டால், பெற்ற தாயின் அசையாசொத்துப் பத்திரத்தை வங்கியில் ஈடாக வைத்துக் கடன்பெற்றால், பத்திரம் திரும்பிவர அரும்பாடுபட நேரிடும். ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் சனி இருந்தால் 48 வயதிற்குமேல் வீடு கட்டல் நன்று, தெற்கு நோக்கிய மனை, வீடு வேண்டாம். 12-ஆமிடமான விரய ஸ்தானத்தில் சனி இருந்தால் வீட்டை அடகு வைத்துப் பணம் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

"அனுபவமில்லாத படிப்பைவிடஅனுபவம் மேல்.'

ஜாதகத்தில் லக்னத்திற்கு 10-ல் எந்த கிரக நாதர்களும் இல்லாவிட்டால் நிரந்தர மாத வருமானம், வருட வருமானம்வராது. உள்ளங்கையில் விதிரேகை காண்பது அரிதாகும். இப்படிப்பட்டோர் குருகுலவாசம்போல், முதிர்ந்த அனுபவசாலியுடன் இணைந்து தொழில் கற்று பின் சொந்தமாக நிலைத்து நிற்கலாம்.

"அனுபவம் இன்றியமையாதது. வறுமையில் நிறை காண்பவனே, சிறந்த பணக்காரன்.'-ஹங்கேரிய பழமொழி

ஜனன லக்னமும் ராசியும் ஒன்றா யிருந்து, இரண்டு பக்கமும் குரு பகவானும், சுக்கிர பகவானும், வளர்பிறைச் சந்திரனுமிருந்தால், ராஜயோகத்திற்கு நிகரான கௌரவமும், கீர்த்தியும் பொருந்தி பலபேர் புகழ்ந்துரைக்கும்படியான தனவந்தனாக சுகமான வாழ்வு வந்துவிடும். ஆனால் பிற கிரகநாதர்கள் நிலையையும் கவனித்து தெளிவுபெறலாம். வறுமைதான் பணத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

"காதலுக்கு அழகு வேண்டாம். வாழ்க் கைக்கு அழகும் அந்தஸ்தும் வேண்டும்.' - இந்தியப் பழமொழி

ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் சனிபகவான் இருந்துவிட்டால். இனம் மாறி, மதம் மாறி திருமணம் செய்து வைக்கவே முயல்வார். சுக்கிர மேட்டில் கரும்புள்ளி காதல் கவலைக்கு வழிவகுக்கும்.

"தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின்மூலமாக மதிப்பை உயர்திக்காட்டும் மனிதனே சமூகத் தில் உயரமுடியும்." -ஆப்ரஹாம் லிங்கன்

ஒருவருடைய 10-ஆம் இல்லமானது ஜீவன ஸ்தானமாகும். அது மட்டும் சிறப்பானதாக பலன்களை அள்ளித்தர ஆரம்பித்துவிட்டால் அவர்கள் உண்மையிலேயே இன ஜன பந்துக்களையும் நண்பர்களையும் லட்சியம் செய்யவே மாட்டார்கள். இவர்களுடைய குறிக்கோள் எல்லாம் "கடமை' ஒன்றிலேயே லயித்து நிற்கும். மனிதாபிமானம் மற்றும் சமுதாயம் போன்ற பொதுப்பணிகளில் ஈடுபடாமல் ரகசியமாக பொருள் சேர்க்கும்.

சிலருக்கு ஜீவன ஸ்தானாதிபதி 6, 8, 12-ல் வலுவாக மறைந்து விடுவதால்,அப்படிப்பட்ட ஜாதகர்கள் படாதபாடுபட்டு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியே பொருள்சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பணிபுரியவேண்டிய இடமோஇக்கட்டானதாக அமைந்து பாடாய்ப் படுத்தும். இருப்பினும் ஊதியத்தின் மதிப்பை விட உழைப்பின்மூலமாக உயர்வாக வாழ வேண்டும்.

-பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

செல்: 93801 73464