வேதமுறைக் கணித ஜோதிடத்தில் ஆண்- பெண் திருமணத் தடைக்கு, ராகு- கேது, செவ்வாய் ஆகியவற்றால் உருவாக்கப்படும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், 7, 8-ஆமிட தோஷம் என இதுபோன்று இன்னும் பலவித தோஷங்களே காரணம் என்று கூறுகின்றார்கள். இதற்கு பலவிதமான சாந்தி, பரிகாரங்கள், வழிபாட்டு முறைகளைக் கூறுகின்றனர்.

சித்தர் பெருமக்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட நிலை மூன்றுதான். இதில் ஒருவரின் பிறப்பென்பது அவரவர் தனிப்பட்ட நிலை; இது முதல்நிலை. அடுத்து திருமணம் இரண் டாவது நிலை. அடுத்தது இறப்புநிலையாகும். ஒருவரின் பிறப்புநிலை அவரது தாய்- தந்தையால் உருவாக்கப்படுகிறது. மூன்றாவது நிலையான இறப்பு அவரவர் மூச்சுக்காற்றின் அளவினால் தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால் திருமணம் மட்டும் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ- சாப- புண்ணிய வினைப்பதிவுகளால் தீர்மானிக்கப்பட்டு, இப்பிறவியில் நடைபெறுவது.

bb

முற்பிறவிகளில் அல்லது வம்சமுன்னோர்கள் வாழ்வில் குடும்ப உறவுகளுக்குச் செய்த கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வெறுத்துவிட்ட வாக்கினால் திருமணத்தடை ஏற்படுகிறது. பலரின் ஜாதகத்தில், கிரகங்கள் அமைந்துள்ள நிலையினை ஆய்வுசெய்து தெரிந்துகொண்ட உண்மைகளில் சிலவற்றை சுருக்கமாக அறிவோம்.

Advertisment

தமிழ்முறை ஜோதிடத்தில் குடும்ப உறவுகளைக் குறிப்பிட, கிரகங்கள் உதாரணமாகத்தான் கூறப்படுகின்றன. உண்மையில் குடும்ப உறவுகள்தான் கிரகங்கள்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு கிரகம் அந்த ஜாதகனைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.

சுக்கிரன் என்ற கிரகம், அவருக்கு மனைவியாக அமையும் பெண்ணைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் ராசிக் கட்டத்தில் எந்த ராசியில் வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்கு ராசி, லக்னம், 7-ஆமிடம், 8-ஆமிடம், நட்சத்திரம் என எதையும் பார்க்கக்கூடாது.

Advertisment

உதாரண ஜாதகத்தில் ஜாதகனைக் குறிக்கும் குருவுக்கும் மனைவியைக் குறிப்பிடும் சுக்கிரனுக்குமிடையில் புதன் உள்ளது.

இவர் தன் முன்பிறவியில், தன் தம்பி, தங்கை, தாய்மாமனை ஏமாற்றி, நம்பிய பெண்ணையும் காதலித்து ஏமாற்றிக் கைவிட்டதால், அவர்கள்விட்ட சாபம், இந்தப் பிறவியில் திருமணத்தடையை ஜாதகருக்கு உண்டாக்கிவைத்து விடும். இளம் பெண்களுடன் நட்பை உருவாக்கி வைக்கும்.

அதுபோல குருவுக்கும், சுக்கிரனுக்குமிடையில் சந்திரன் இருந்தால், இவரின் முன்பிறவியில், தன் மனைவியின் பேச்சைக்கேட்டு பெற்ற தாயை கவனியாமல் பசியும் பட்டினியுமாய் அலைய விட்டு, கஷ்டப்பட வைத்ததால் உண்டான தாய்சாபம், இப்பிறவியில் திருமணம் தடையாகும். திருமணம் நடந்தாலும் கருத்து வேறுபாடு, பிரிவு உண்டாகலாம்.

ஜாதகரைக் குறிப்பிடும் குருவுக் கும், மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கு மிடையில் சூரியன் இருந்தால், முற்பிறவியில், பெற்ற தந்தைக்கும், தான் பெற்ற மகனுக்கும் அன்னம், தண்ணீர் தராமல் அவர்களை பசியும் பட்டினியுமாய் கஷ்டப்படச் செய்ததால், பெற்ற தந்தை, மகன் விட்ட சாபம் இப்பிறவி யில் திருமணத்தடை, காலதாமதத்தை உண்டாக்கும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் ஜாதகியைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். செவ்வாய் கணவனைக் குறிக்கும் உதாரண கிரகமாகும்.

கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும், ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்குமிடையில் சந்திரன் இருப்பதால் அந்தப் பெண் தன் முற்பிறவியில், தன் மாமியாருக்கும் கணவனின் மூத்த சகோதரிக்கும் செய்த பாவத்தால் உண்டான பெண் சாபம், இப் பிறவியில் திருமணத் தடையை உண்டாக்கும். திருமணம் நடந்திருந்தாலும் மாமியாரி டம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் புதன் இருந்தால், இவரின் முற்பிறவியில் தாய்மாமன், இளைய சகோதர- சகோதரிகளுக்கு, தான் விரும்பிப் பழகிய காதலன் என இவர்களுக்குச் செய்த துரோகத்தால் உண்டான சாபம், இதுபோன்ற உறவுகளால் திருமணத்தடையை உருவாக்கும்.

சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு இடையில் ராகு இருந்தால், முற்பிறவியில் உடல் ஊனமுற்ற உறவுகள், வயது முதிர்ந்த உறவுகள் என இவர்களுக்குச் செய்த கொடுமையால், அவர்களால் உண்டான சாபம் இப்பிறவியில் திருமணத் தடையை உண்டுசெய்யும்.

பொதுவாக ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் குருவுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் சனி, ராகு, கேது, சந்திரன், புதன் இருந்தாலும் அல்லது சுக்கிரனுக்கும் குருவுக்கும் இடையில் இந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த கிரகங்கள் குறிப்பிடும் உறவுகளால் திருமணம் தடை, தாமதமாகும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய்க்கும் சுக்கிரனுக்கும் இடையில் சனி, ராகு, கேது, சந்திரன், புதன் இருந்தாலும் அல்லது செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் இடையில் இந்த கிரகங்கள் இருந்தாலும், இந்த கிரகங்கள் குறிப்பிடும் உறவுகள் மூலம் முற்பிறவி சாபத்தாக்கம் செயல்பட்டு, திருமணம் தடை, தாமதமாகும்.

செல்: 99441 13267