ஒருவரின் பிறப்பு ஜாகத் தில் சூரியன், சந்திரன், ராகு 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் இந்த ஜாதகரின் தந்தைக்கு அல்லது மகனுக்கு நீரில் கண்டம் அல்லது விபத்து ஏற்படும்.
சூரியனுக்கு 12-ஆவது ராசியில் சந்திரனும், 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தால் விபத்துகள் ஏற்படலாம்.
சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால் தாய்- தந்தைக்கு அல்லது ஜாதகரின் மகனுக்கு விபத்து உண்டாகலாம்.
ஒருவரின் பிறப்பு ஜாதகத் தில் சூரியன், செவ்வாய், ராகு ஆகியவை ஒன்றுக்கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகரின் தந்தைக்கோ அல்லது ஜாதக னின் மகனுக்கோ எதிர் பாராத விபத்து, மரணம் ஏற்படக்கூடும்.
சூரியன், செவ்வாய் ஒரே ராசியில் இருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தாலும்; சூரியனுக்கு 5-ஆவது ராசி யிலோ 9-ஆவது ராசியிலோ செவ்வாய் இருந்து, அந்த செவ்வாய் இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தாலும் ஜாதகனின் தந்தைக்கோ அல்லது அவள் சகோதரனுக்கோ விபத்து உண்டாகலாம்.
சூரியன், சனி, ராகு ஆகியவை ஒரே ராசியில் இருந்தால் ஜாதகரின் தந்தைக்கோ அல்லது மகனுக்கோ விபத்து உண்டாகலாம்.
சூரியன், சனி, ராகு ஆகியவை ஒன்றுக் கொன்று 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் தந்தைக்கோ மகனுக்கோ விபத்து உண்டாகும். பெற்றவர்களால் புறக்கணிக்கப்படுவான்.
சூரியன் இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் சனி, 2-ஆவது ராசியில் ராகு இருந்தால் ஜாதக னின் தந்தைக்கு அல்லது அவன் பெற்ற மகனுக்கு விபத்து உண்டாகும்.
சூரியன் இருக்கும் ராசிக்கு 5 அல்லது 9-ஆவது ராசியில் சனி இருந்து, அந்த சனிக்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால், ஜாதகரின் தந்தைக்கு அல்லது மகனுக்கு விபத்து உண்டாகலாம்.
சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் இருந்து, சூரியன் இருக்கும் நட்சத்திரத்திலோ அல்லது அதற்கு 2-ஆவது நட்சத்திரத்திலோ ராகு இருந்தால் ஜாதகனின் தந்தைக்கோ அல்லது மகனுக்கோ விபத்து உண்டாகலாம்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் இது போன்று கிரக அமைப்பிருந்தால் அவள் தந்தைக்கோ மகனுக்கோ விபத்து, மரணம் ஏற்படலாம்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய், ராகு 1, 5, 9-ஆவது ராசிகளில் இருந்தால் விபத்து, மரணம், அற்பாயுள் உண்டாகலாம். அல்லது வாழ்க்கையில் கஷ்டப்படுவாள்.v சந்திரன், செவ்வாய், ராகு ஒரே ராசியில் இருந்தால் தாய்க்கு சிரமம் காட்டும்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாய், 2-ஆவது ராசியில் ராகு இருந்தால், ஜாதகரின் தாய்க்கு அல்லது மூத்த சகோதரிக்கு விபத்து உண்டாகலாம்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு 5 அல்லது 9-ஆவது ராசியில் செவ்வாய் இருந்து, அந்த செவ்வாய் இருக்கும் ராசிக்கு 2-ல் ராகு இருந் தால் தாய்க்கு விபத்து அல்லது அற்பாயுள் உண்டாகலாம்.
சந்திரன், செவ்வாய் ஒரே ராசியி-ருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால், தாய்க்கு அற்பாயுள் அல்லது நோய்த்தாக்கம் அல்லது விபத்து, பிரிவு உண்டாகலாம்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இதுபோன்று கிரக அமைப்பிருந்தால் அவளது தாய்க்கு இது போன்ற பாதிப்பு, சிரமங்களை உண்டாக்கும்.
ஒருவருக்கு விபத்துகள், அதனால் உடலுறுப்புகள் இழப்பு, மரணம், கண்டங்கள் ஏற்படும் காலத்தையும், தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர்கள் கூறியுள்ளார்கள். விபத்தை உண்டாக்கும் கிரகங்கள் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் ராசிக்கு, மரணத்தை உண்டாக்கும் கிரகமான ராகு கோட்சார நிலையில் 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் பாதிப்பை உண்டாக்கும்.
சித்தர்களால் கூறப்பட்ட தமிழ் ஜோதிட முறையில் பலனறிய ராசி, லக்னம், தசை, புக்தி என எதையும் பார்க்கத் தேவை யில்லை. கிரகங்கள் மட்டும் குடும்ப உறவு களுக்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.
தென்புலத்து சித்தர் பெருமக்கள் தமிழ் மக்களுக்கு வகுத்துத் தந்த தமிழ் சித்தாந்த ஜோதிட முறையில், விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள் யார் என அவரவர் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்கள்மூலம் அறிந்தோம். இனி வடபுலத்தாரின் வேத ஜோதிடமுறையில், யாருக்கு விபத்து உண்டாகும் என்பதைப் பற்றி சுருக்கமாக அறிவோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan_108.jpg)
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியுடன், லக்னத்திற்கு 8-ஆவது ராசிக்குரிய கிரகமும் ராகுவும் சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த ஜாத கருக்கு விபத்தோ அல்லது மரணமோ உண்டாகலாம்.
லக்னாதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் 8-ஆவது ராசிக்குரிய கிரகமும் ராகுவும் இருந்தால் விபத்தில் காயம் அல்லது மரணம் உண்டாகலாம்.
லக்னத்திற்கு 3-ஆவது ராசிக்குடைய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாயும் ராகுவும் இருந்தால் ஜாதகருக்கு விபத்தில் காயமோ மரணமோ ஏற்படலாம்.
லக்னத்திற்கு 3-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால், ஜாதகரின் இளைய சகோதரனுக்கு விபத்து உண்டாகலாம்.
லக்னத்திற்கு 4-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால் தாய்க்கு விபத்து, மாரகம் உண்டாகலாம்.
லக்னத்திற்கு 4-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 4-ஆமதி பதி இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் ராகு வும் இருந்தால் தாய்க்கு விபத்து உண்டாக லாம்.
லக்னத்திற்கு 4-ஆமதிபதி கிரகம் இருக்கும் ராசியிலேயே, செவ்வாய், ராகு இணைந் திருந்தால் தாய்க்கு விபத்து ஏற்படலாம்.
லக்னத்திற்கு 5-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் அல்லது 5-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தாலும் அந்த ஜாதகரின் குழந்தைக்கு விபத்தினால் பாதிப்பு உண்டாகும்.
லக்னத்திற்கு 7-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால், ஜாதகரின் மனைவிக்கு விபத்து ஏற்படலாம்.
லக்னத்திற்கு 7-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 7-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தால் ஜாதகரின் மனைவிக்கு விபத்து உண்டாகலாம்.
லக்னத்திற்கு 7-ஆமதிபதி, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் சேர்ந்திருந்தால் ஜாதகனின் மனைவிக்கு விபத்து, பிரிவு, மாரகம் ஏற்படலாம்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய், ராகு இருந்தால், அந்தப் பெண்ணின் கணவனுக்கு விபத்து, மாரகம் ஏற்படலாம்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னதிற்கு 7-ஆமதிபதி இருக்கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் செவ்வாயும், 2-ஆவது ராசியில் ராகுவும் இருந்தால் அந்தப் பெண்ணின் கணவனுக்கு சிரமம் உண்டாகும்.
லக்னத்திற்கு 7-ஆமதிபதியும் செவ்வாயும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தால் அவளது கணவனுக்கு விபத்து ஏற்படலாம்.
பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆமதிபதி கிரகமும், செவ்வாயும் இணைந்து ஒரே ராசியில் இருந்து, அதற்கு 2-ஆவது ராசியில் ராகு இருந்தால் அவள் கணவனுக்கு விபத்து ஏற்படும்.
ஆண்- பெண் இருவருக்கும் திருமணம் செய்ய பொருத்தம் பார்க்கும்போது அவர் களின் ஜென்ம லக்னத்திற்கு 7-ஆவது ராசிக் குடைய கிரகத்திற்கு 1, 5, 9; 2, 6, 10-ஆவது ராசிகளில் ராகு, கேது, லக்னத்திற்கு 8-ஆமதி பதி இருந்தால், அவர்கள் திருமணத்திற் குப்பிறகு, ஆண் ஜாதகமானால் மனைவிக்கும், பெண் ஜாதகமானால் கணவனுக்கும் பாதிப்பைத் தந்துவிடும். எனவே, பொருத்தம் பார்க்கும்போது, லக்னத்திற்கு 7-ஆமதிபதி, ராகு- கேது பாதிப்பு உள்ளதா என கவனமாப் பார்த்து திருமணம் செய்யவேண்டும். லக்னத்திற்கு 7-ஆமிடத்தில் செவ்வாய், ராகு, கேது இருந்தாலும் பாதிப்பைத் தராது.
முற்பிறவி கர்மவினைப் பதிவுகளை பூஜை, யாகம், ஹோமம், விரதம், தானம் போன்ற பரிகாரச் செயல்களால் மாற்றிவிட முடியாது. முற்பிறவி கர்மவினைகளை அறிந்து, முறையான பாவ- சாப நிவர்த்திகளைச் செய்து தான் விதியைத் தடுத்துக்கொள்ளமுடியும்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/murugan-t.jpg)