"2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 12 வரை அதிகிரக கூட்டணி அமையவுள்ளது.
துலா ராசியில் சூரியன், சுக்கிரன், புதன், கேது என நான்கு கிரகங்களும் சேர்கின்றன. இதில் சூரியன் நீசமடைந்தாலும், சுக்கிரனின் சேர்க்கையால் நீசபங்கம் அடைவார். இந்த கிரகங்களை ராகு தனது ஏழாம் பார்வை யால் இறுகக் கட்டிப்போடுவார். சனி தனது 10-ஆம் பார்வை யால் பலமான தடையை உண்டாக்குவார். இதன் பொருட்டு உலகியல் வாழ்வில், மனிதர்கள் அங்குமிங்கும் நகரமுடியாத ஒரு சூழ்நிலை உண்டாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/planets_21.jpg)
அரசியல்வாதிகள் எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறுவர். எந்த செயல், எவ்வித பின்விளைவை உண்டாக்கும் என தெரியாத நிலையில் தவிப்பர். திருமணங் களை சற்று தள்ளி வைத்துக்கொள்ளலாம் எனும் முடிவை நோக்கிச் செலுத்தும். மருத்துவ சிகிச்சைகளை யாரிடம், எப்போது மேற்கொள்ளலாம் என தடுமாற்றம் உண்டா கும். அரசு வேலைக்குப் பணம் கொடுத்துவிட்டு, கிடைக் குமா- கிடைக்காதா என தவிக்கும் நிலையில் பலர் தள்ளப் படுவர்.
குழந்தைகளின் கல்வி பின்னடைவை சந்திக்கும். தகப்பனார் வயதில் உள்ளவர்கள் சற்று அல்லாட நேரிடும். திருமணம், சொத்து சம்பந்தமான வழக்குகள் நிறையும். இதில் முக்கியமான விஷயம், இந்த புதன், கேது சேர்க்கை காதல் விஷயங் களைப் பெருக்க, அதன்மூலம் வில்லங்கள் ஏற்படும். துலா ராசி மர்ம உறுப்பைக் குறிக்கும்.
சற்று ஒழுக்கமாக இருப்பது நலம். துலாம் காற்று ராசி. புயல், சுழல் காற்று, மழை போன்றவை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
இதில் 25-10-2022 அன்று சூரிய கிரகணமும் உண்டு. மக்கள் கொஞ்சம் பத்திரமாக இருந்து கொள்ளவும்.
பயணங்களில் பாதுகாப்பு அவசியம். முக்கியமாக கூடிய மட்டும் விமானப் பயணத் தேதிகளை சற்று கவனித்துப் பதிவு செய்யவும். கிரகண நாள் மட்டுமாவது அதிக கவனமாக இருக்கவும். அன்று துலா ராசியில் ஐந்து கிரகக் கூட்டணி அமையும். நோய்த் தொற்று விஷயமாக கவனம் தேவை.
இவ்வித கிரக யுத்தம் ஏற்படும் போது, காஞ்சி மகாப் பெரியவர் கூறியபடி, கோளறு பதிகம் பராயணம் நன்று. மேலும் பட்டீஸ்வரம் துர்க்கை, சமயபுரம் மாரியம்மனையும் வணங்கவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/planets-t.jpg)