க்னத்தில், குருவின் மீன ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். பிறரை ஈர்ப்பார். மென்மையாகப் பேசுவார். பெயர், புகழ் இருக்கும். இனிமையாகப் பேசுவார். அமைதி யான குணம் உள்ளவராக இருப்பார். பணம் சம்பாதிப்பார். அனைவருடனும் நன்றாகப் பழகுவார். நல்ல மனிதராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். குழந்தை பாக்கியம் இருக்கும். மனைவி அழகாக இருப்பாள்.

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் பணம் சம்பாதிப்பார். பூர்வீக சொத்து கிடைக்கும். பிள்ளைகளால் சில சிறிய பிரச்சினைகள் உண்டாகும். படிப்பு நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடைகிறது. உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகருக்கு பிள்ளைகளின் ஆதரவிருக்கும். ஜாதகர் நல்ல பேச்சாற்றல் உள்ளவராக இருப்பார். அதைவைத்து அவர் பணம் சம்பாதிப்பார். சில நேரங்களில் அதிகமாகப் பேசுவார். சிலர் அவருடன் பழகுவதைத் தவிர்ப்பார்கள்.

Advertisment

ff

4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சந்திரன் இருந்தால் அன்னையால் சந்தோஷம் இருக்கும். பூமி, வீடு, வாகனம் வாங்கலாம். குழந்தை பாக்கியம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சந்தோஷம் தரக்கூடிய பொருட்கள் இருக்கும். தன் அறிவால் ஜாதகர் பெயர், புகழ் பெறுவார். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் இருக்கும். பல நல்ல வேலைகளைச் செய்து, சிறப்பான பெயரைப் பெறுவார்.

5-ஆம் பாவத்தில் திரிகோணத்தில் தன் சுயராசியான கடக ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல படிப்பிருக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியுண்டாகும். ஜாதகர் தன் சிறப்பான பேச்சாற்றலால் பிறரை ஈர்ப்பார். ஆழமாக சிந்திப்பவராக அவர் இருப்பார். கம்பீரமான தோற்றத்தைக்கொண்டிருப்பார். தன் அறிவை கொண்டு பெரிய அளவில் பணம் சம்பாதிப்பார். எனினும், மனதில் அமைதி இருக்காது.

6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் பகைவர்களால் பல சிக்கல்கள் உண்டாகும். அதனால், மனதில் அமைதியற்ற நிலை உண்டாகும். எனினும், தன் மனபலத்தைக் கொண்டு ஜாதகர் எதிரிகளை வெல்வார். சிலருக்கு வாரிசுகளால் பிரச்சினை உண்டாகும். படிப்பு விஷயத்தில் பல தடங்கல்கள் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சந்திரன் இருந்தால் மனைவி அறிவாளியாக இருப்பாள். அழகான தோற்றத்தைக்கொண்டிருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். படிப்பு விஷயத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். அதைவைத்து பிறரை ஈர்ப்பார்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். பிள்ளைகளால் கஷ்டம் இருக்கும். மனதில் ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டே யிருக்கும். ஜாதகர் பல வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பார். அவருக்கு இளம் வயதில் சீதளநோய் இருக்கும்.

9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால் வாழ்க்கையில் பல தடங்கல்கள் இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்காது. பிள்ளைகளால் சிக்கல்கள் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை ஏற்படும். மனதில் எப்போதும் சிந்தனை இருந்தவண்ணம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். தைரியசாலியாக இருப்பார். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார்.

10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சந்திரன் இருந்தால் தந்தையின் ஆதரவிருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஜாதகர் சட்டத்தை மதிப்பவராக இருப்பார்.

சுயமரியாதை உள்ளவராகவும் அறிவாளி யாகவும் இருப்பார். வாரிசுகளுடன் சேர்ந்து வாழ்வார். பணக்காரராகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்.

11-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சந்திரன் இருந்தால், மனபலம் இருக்கும். தைரியம் இருக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். எனினும், மனதில் கவலை இருக்கும். சிலருக்கு தாமதமாக வாரிசு உருவாகும். படிப்பு காலத் தில் பல தடங்கல்களைக் கடக்கவேண்டிய திருக்கும். தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் ஜாதகர் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். சுயநலவாதியாக இருப்பார். நன்கு பேசி, பணம் சம்பாதிப்பார்.

12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சந்திரன் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். வாரிசுகளால் பிரச்சினை இருக்கும். படிப்பில் சிக்கல்கள் இருக்கும். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும். சுய அறிவை, சாதுர்ய குணத்தைப் பயன் படுத்தி ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். சண்டை, சச்சரவுகளில் வெற்றி கிடைக்கும்.

செல்: 98401 11534