சென்ற இதழ் தொடர்ச்சி...

சுய ஜாதகத்தில் சந்திரன் அசுபத் தன்மையுடன் இருந்து, அதன் தசாபுக்திக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் என்னவென்பதை 6-ஆம் பாவம் வரை கடந்த இதழில் கண்டோம். மற்ற பாவப்பலன்கள் இங்கே...

7-ஆமிடம்

ஜாதகத்தில், 7-ஆமிடத்தில் சந்திரன் சுபத்தன்மையின்றி, அசுபர் சேர்க்கை பெற்று அசுபத்தன்மையோடு இருந்தால், அதன் தசாக்காலத்தில் இவ்வகை ஜாத கர்கள் எல்லாருடனும் வாக்குவாதம் செய்வர்.

Advertisment

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவர்.

அர்த்தமில்லாமல் அளப்பர். நிறைய பொய் பேசுவர். இவ்விதம் இவர்கள் நடந்து கொள்ளக் காரணம், மனம், புத்தி, எண்ணக் காரகர் சோடை போவதுதான். சந்திரன் கெடுவதால் மனம் பேதலித்து, யாரிடம் என்ன பேசுகிறோம் என்றறியாமல் உளறிக் கொட்டுவர். இதனால் இல்லறம் கசப்பாகும். தொழில் இவர்களைவிட்டு ஓடிவிடும். சுற்றியுள்ளவர்கள் இவர்களைவிட்டு விலகி யோடுவர். இவர்கள் தன் குற்றமறியாமல் மிக மன நொய்மை அடைவர். மேலும் நிறைய வழக்குகளை சந்திக்கக்கூடும். இக்கால கட்டத்தில் இவர்கள் எப்போதும் கோப மாகவே கத்துவார்கள். இந்த கோப உணர்ச் சியை இவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.

ss

Advertisment

இவர்கள் திருவாரூர் மாவட்டம், திருத் துறைபூண்டி அருகே இடும்பவனம் எனும் இடத்தில் கோவில்கொண்டுள்ள ஸ்ரீசத்குண நாதரையும், ஸ்ரீமங்கள நாயகியையும் வழிபட்டுவரவும். உங்கள் ஊரிலுள்ள அம்பாளுக்கு நல்ல மலர்கள் சமர்ப்பித்து வணங்கவும்.

8-ஆமிடம்

8-ஆமிடம் என்பது ஏற்கெனவே திகிலான இடம். இதில் சந்திரன் பாவியாகியும், பாவர்களுடன் சேர்ந்தும் பலமற்று அமர்ந் திருப்பின் என்ன சொல்ல? இவ்வமைப் புக்குப் பலன் சொல்லும்போது, ஜாதகருக்கு பைத்தியம் பிடிக்கும் எனலாமா? சிறையில் வாடுவார் எனலாமா? விபரீத முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும் எனலாமா? மொத்தத் தில் ஜாதகர் மட்டும் துன்பம் அனுபவிக்க மாட்டார். அவர் குடும்பத்திலுள்ள அனைவரும் இவரால் வெகு கஷ்டப்பட்டுப் போவார்கள். எனவே இவ்வித ஜாதக அமைப் புள்ள தசாக்காலம் குடும்பத்தில் யாருக்காவது நடக்கப்போகும் முன்பே, அனைவரும் அதி ஜாக்கிரதையாக இருத்தல்வேண்டும்.

திங்கட்கிழமைதோறும் எலுமிச்சை பழம்கொண்டு துர்க்கையை வணங்க வேண்டும். உங்கள் ஊரைச் சுற்றி அல்லது அருகிலுள்ள பிரசித்தமான காளி, துர்க்கையை வணங்குங்கள். துர்க்கை சந்நிதியின் அர்ச்சகரிடம் கேட்டறிந்து தேவைக்கேற்ப பால், தயிர், இளநீர், சர்க்கரை வாங்கிக் கொடுக்கவும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை வணங்கவும்.

9-ஆமிடம்

9-ஆமிடம் என்பது தெய்வீகமான ஸ்தானம். இதில் சந்திரன் பலமற்று அமர்ந்தால், இவர்களின் யோசனை, இவர்களது அதிர்ஷ்டத்தை, யோக நிகழ்வுகளை அழித்துவிடும் சூழ்நிலை உண்டாகும். இதனால் இவர்கள் தங்கள்மீதே கோபம்கொண்டு, மிக மன நொய்மை பெறுவர். இந்த துரதிருஷ்ட நிகழ்வுகளால், பின்னர் இவர்கள் மனசாட்சியின்றி அதர்மமாக நடந்துகொள்வர். இறைவனை வழிபடுவதையும் நிறுத்திவிடுவர். இவர் களுக்குள் ஏற்படும் மன நொய்மை, வெளியில் இவர்களைப் பேராசைக்காரர்கள் என்றோ, மகா கெட்டவர் என்றோ, விளங்காதவர் என்றோ ஒரு பெயரை உண்டாக்கிவிடும். குலத்திற்கு எதிராகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவர்.

திருவிடைமருதூர் சென்று வணங்க வேண்டும்.

10-ஆமிடம்

10-ஆமிடம் என்பது தொழில், கௌரவ ஸ்தானம். இவ்விடத்தில் சந்திரன் பலமற்று அமர்ந்துவிட்டால் அந்த தசாக்காலம் மட்டுமல்ல; வாழ்க்கை முழுவதுமே இவர்கள் வாழ்வு ஓட்டுக்குள் முடங்கிய ஆமையாக, வெளியே தலைகாட்டவே தயங்கும் நிலையாகவே அமையும்.

இவ்வித அமைப்புள்ளவர்கள் தங்களின் மன நொய்மை குறைய, தினமும் அபிராமி அந்தாதியைப் படிக்கவேண்டும். முடிந்தால் திங்கட்கிழமைதோறும் ஒருபொழுது விரதம் இருக்கலாம். பௌர்ணமி விரதம் மிகச்சிறப்பு.

11-ஆமிடம்

ஜாதகத்தில் லக்னத்துக்கு 11-ல் நீசச் சந்திரன் அல்லது பாவருடன்கூடிய சந்திரன் இருப்பின், இவர்கள் என்ன நினைத்தாலும் எதிர்மாறாக நடக்கும். எதைத் தொட்டாலும் விளங்காது. பொன்னைத் தொட்டால் மண்ணாகிவிடும். இவ்வித நிகழ்வுகள் இவர்களுக்கு மிக மன நொய்மை தரும். ஆசைகள் நிராசைகளாகிவிடுவதால் மனம் சலிப்படைவர்.

இவர்கள் தங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, திருச்சி அருகே திருப்பட்டூர் சென்று, பிரம்மன் சந்நிதியில் ஜாதகத்தை வைத்துப் பூஜை செய்யவேண்டும்.

12-ஆமிடம்

இந்த ஸ்தானத்தில் பலமற்ற சந்திரன் இருப்பின், இவர்களுக்குத் தூக்கமே வராது. ஒரு மனிதன் தூங்காமலேயே இருந்தால், அவருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடும். மேலும் இவர்களது எண்ணங்கள் மிக விரயத்தைக் கொண்டுவரும். அதன் பின் விளைவுகள் வாழ்வின் அதிகபட்ச நெருக்கடி களைக் கொடுத்துவிடும். பிரச்சினைகளால் தூக்கமின்மையா அல்லது தூக்கமின்மையால் பிரச்சினைகளா என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு வாழ்வு விவகாரமாகிவிடும்.

இவர்கள் சென்னை- திருப்பதி இடை யிலுள்ள சுருட்டப்பள்ளி தலம் சென்று, அங்குள்ள சிவனையும் அம்பாளையும் மற்றும் தனிச்சந்நிதியில் மங்காளம்பிகை மடியில் சயனித்திருக்கும் ஈசனையும் கண்டிப் பாக வழிபடவேண்டும். 12-ஆமிட பலமற்ற சந்திரனின் பாதிப்பு நீங்கும்.

ஒரு ஜாதகத்தில், சந்திரனின் நிலை மிக முக்கியமானது. ஏனெனில் அவரே மனம், புத்திக் காரகர். மன உணர்ச்சிகளுக்கு அவரே காரணம். இத்தகைய முக்கியமான சந்திரன் சுபத்தன்மை குன்றும்போது ஜாதகர்கள் மிக பாதிப்படைகிறார்கள்.

அதனால்தான் ஒருவரது ராசிக்கட்டத்தில் முன்னும் பின்னும் சனி கோட்சாரத்தில் கடக்கும்போது, அது ஏழரைச்சனி என ஜாத கர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இதுவே சந்திரனிருக்கும் ராசிக் கட்டத்துக்கு எட்டாமிடத்தில் சனி கோட் சாரத்தில் நகரும்போது அஷ்டமச்சனி ஆட்டிப்படைக்கிறது என புலம்பு கிறார்கள்.

மேலும் சனி தசை, சந்திர புக்தியில் பொருள் இழப்பீடும், சமயங்களில் உயிர்ச் சேதமும் ஏற்படும் என அஞ்சுகிறார்கள்.

ராகு தசை, சந்திர புக்தியில் ஜாதகர்கள் மிக மனக்குழப்பம் அடைகின்றனர்.

பரிகாரங்கள்

எவ்வித அமைப்பு நிலையிலும் சந்திரன் நற்பலன்கள் கொடுக்க அபிராமி அந்தாதி பாராயணம் மிக நன்று.

அம்பாளுக்குரிய லலிதா சஹஸ்ரநாமம் தெரிந்தவர்கள் கூறலாம்.

"பத்மத்வாஜாய வித்மஹே

ஹேமருபாய தீமஹி

தந்நோ ஸோம ப்ரசோதயாத்.'

எனும் சந்திரனின் காயத்ரியைக் கூறலாம்:

சந்திரனின் திருத்தலமான திங்களூர் சென்று வழிபடலாம்.

திருப்பதி சென்று வணங்கவும்.

அரிசி, தேங்காய், ஈயப்பாத்திரம், வெள்ளை மலர் தானமும்; மீன்களுக்கு உணவளிப்பதும் நன்று.

அம்பாளின் ஸ்ரீசக்கரத்தைப் பூஜிப்பதும், கண்ணாரக் கண்டு வணங்குவதும் மிக நல்லது.

திங்கட்கிழமைதோறும் விரதமிருப்பது, மன நொய்மையை அறவே அகற்றும்.

பகவத் கீதை பாராயணம் நன்று. அர்ஜுனனின் மன நொய்மை தீர பகவான் கீதையை உபதேசித்தார். அதே பகவத் கீதையை நாமும் பக்தி சிரத்தையுடன் முடிந்த போதெல்லாம் முடிந்தளவு பாராயணம் செய்தல் தகும். பகவத் கீதை படித்தவுடன் புரியாது. படிக்கப் படிக்கத்தான் புரியும்.

சந்திரன் பாதிப்படைந்து, அவரின் தசா, புக்திக் காலத்தில் ஜாதகர் மிக கோபமாகக் கத்தி சண்டையிட்டாலும், அல்லது எதுவுமே பேசாமல் ஒடுங்கி, ஒதுங்கியிருந்தாலும், வேண்டிய பரிகாரங்களைச் செய்துவிட்டு, நல்ல மனநல மருத்துவரிடமும் கலந்தா லோசிக்கவும். "நோய்க்கும் பார்; பேய்க்கும் பார்' என்பது பழமொழி. எனவே ஜாதகர் நன்மைபெற, இறைவன் வழிகாட்டுதலோடு மருந்தும் அவசியம்.

செல்: 94449 61845