விழித்த கண்களில் எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வந்திருந்தவரைப் பார்த்ததுமே கிருஷ்ணன் நம்புதிரிக்குப் புரிந்துவிட்டது. பேராசையே மனித உருவில் நின்றிருந்ததைப் பார்த்த ஜோதிடர் அவருக்கு இருக்கையளித்தார். பிரசன்னம் பார்க்க வந்தவர் தான் ஒரு நிலம் வாங்கத் தீர்மாணித்திருப் பதாகவும் அந்த நிலத்தில் புதையல் இருப்பதாக ஒரு சேதி நிலவுவதாகவும் தெரிவித்தார். அந்த செய்தி உண்மையா? என்பதை அறியவிரும்புவதாக தன் வருகையைப் பதிவுசெய்தார்.
நல்லவர்- கெட்டவர் என்பதை ஆராயாமல் வைத்தியம் செய்யும் மருத்துவர்போல் ஜோதிடர் தன் கடமையைத் தொடங்கினார். வாலைக் குமரியைத் தொழுதபின் பிரசன்னத்தை ஆராய்ந்தார். சோழிப் பிரசன்ன லக்னம் கன்னியாக அமைந்தது. மூன்று, எட்டாமிடத்து அதிபதியாகிய செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபலம் பெற்றிருந்தார். செவ்வாய் அஸ்வினி முதல் பாதத்தில் அமர்ந்து நவாம்சத்தில் வர்கோத்த மாகியது. மூன்று, எட்டாமிடத்துத் தொடர்பு வதந்தி, பொய்யான செய்தியைக் குறிப்பதால் புதையலில்லை என்ற முடிவுக்கு வந்தார். நிலத்தினை நல்ல விலைக்கு விற்பதற்காக நடந்த சூழ்ச்சி என்பதையும் தெரிவித்தார். வந்தவர், வருத்தத்துடன் வீடு திரும்பி னார். சிலகாலம் கழித்து புதை யலைப்பற்றிய தகவல் பொய் என்ற உண்மையை அறிந்தார். தன்னைக் காப்பாற்றிய பிரசன்ன ஜோதிட ரைத் தொழுதார். பொய்யும், புரட்டும் ஆட்சிசெய்யும் உலகில் பிரசன்ன ஜோதிடமே ஒளிவிளக்கு என்பதை உணர்ந்தார்.
தேவ கேரளத்திலும், சந்திரகலா நாடியிலும் விதிப்புள்ளியாகக் குறிக்கப் படும். பிருகு பிந்துவே கேரள ஜோதிடத் தில் முதன்மையாக ஆராயப்படுகிறது. ஒவ்வொருவர் ஜாதகத்திலும், முன்ஜென்ம விதியைக்காட்டித் தரும் ராகுவுக்கும், மனோகரகனாகிய சந்திரனுக்கும் இடைப்பட்ட புள்ளியே பிருகு பிந்து. இந்த விதிப்புள்ளியை, குரு, சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள், கோட்சாரத்தில் கடக்கும் காலத்தில், வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் நடந்தேறும்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு ப்கேரள ஜோதிடத்தில் சுப முகூர்த்தங் களைக் குறிக்கும்போது புஷ்கராம்சத்தைக் கண்டறிவதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திரன் அல்லது லக்னாதி பதி புஷ்கராம்சத்தில் இருக்க, அந்த நேரத்தில் சுபகாரியங்களைச் செய்வது மிகுந்த அனுகூலமான நேரமாகும்...
புஷ்கராம்சப் பாகைகள் மேஷம், மீனம் முறையே- 210- 140- 180- 80- 190- 90- 240- 110- 230- 140-190- 90 ஆகும்.
ப் 3, 6, 10, 11-ஆம் வீடுகள் உபஜெய வீடுகளாகும். இவையே, வெற்றிக்கு உறு துணையாக உள்ள வீடு களாகும். உபஜெய ஸ்தானங் களின் வலிமையைக் கொண்டே ஒரு செயல் வெற்றிபெறுமா? வெற்றி பெறாதா என்பதைக் கணித்துச் சொல்லும் முறை கேரள ஜோதிடத்தில் கையாளப்படுகிறது.
ப் கேரள ஜோதிடத்தின் சிறப்பம்சம், பிரசன்ன லக்னத்தையும் கடிகா லக்னத் தையும் இணைத்தே பலன் கூறும் முறையாகும். சூரியன் நின்ற ராசியிலிருந்து பிரசன்ன நேரத்து நாழிகைவரை கணக்கிடுவதே கடிகா லக்னம். கடிகை என்பது 24 நிமிடத்தைக் குறிக்கும். மகள் வீடு திரும்புவாளா?
கேள்வி: என் மகள் சென்ற மாதம் தனக்குப் பிரியமானவருடன், வீட்டிற்குச் சொல்லாமல், எங்கோ காணாமல் போய்விட்டார். அதனால், எங்கள் குடும்பத்தினர் மனவேதனையில் அவதி யுறுகிறோம். சட்டப்படி திருமண வயதை அடைந்தவர் என்பதால், வேறு நடவடிக்கைகள் பயனளிக்காது. அவள் மனம்திருந்தி வீடு திரும்புவாளா என்பதையும், அதற்கான பரிகாரத் தையும் பிரசன்ன ஆரூடத்தின்மூலம் கண்டறிந்து கூறமுடியுமா?
-பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்-39; மகம்- 3-ஆம் பாதம்).
● சோழி லக்னம் சிம்மம், ஏழாம் அதிபதி சனி- தகுதி குறைவான வாழ்க்கைத்துணையைக் காட்டுகிறது.
● சோழி லக்னத்திற்கு ஏழில் சூரியன் அமர்வது, மணமகனின் தவறான நடத்தையைக் குறிக்கிறது.
● சிம்மத்திற்கு பாதக ஸ்தானாதிபதியாகிய செவ்வாய் நவாம்சத்தில் சிம்மத்திற்கு ஆறாம் வீடாகிய மகரத்தில் கேதுவோடு அமர்வது, விவாகத்தில் பிரச்சினையைக் காட்டும்.
● ராசி சக்கரத்தில் ஏழாம் அதிபதி ரிஷபத்தில் ஆறாம் பாவத்திலமர்வது திருமண முறிவைக் காட்டுகிறது.
● மாந்தி கன்னியில் வர் கோத்தமம் ஆவதும், சோழி லக்னத் தின் இரண்டாம் பாவத்தில் இருப்பதும் குடும்பத்தில் வருத்தம் தரும் நிகழ்வைச் சுட்டிக்காட்டும்.
● சோழி லக்னத்தின் எட்டாம் பாவத்தில் சந்திரன்- மனக்கஷ்டத் தைத் தெளிவுபடுத்துகிறது.
● சந்திரனும், அஷ்டமாதி பதியான குருவும் பரிவர்த்தனையாகி, கால புருஷனின் எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவங் களைக் காட்டுவதும், கும்ப லக்னத்திற்கு சந்திரன் மகா பாதகாதிபதியாவதும், ஏழாம் பாவத்திற்கு இரண்டில் அமைவதும் மேற்கூறியவற்றுக்கு வலுசேர்க்கும்.
● பிரசன்னம் காணும் நேரத்தில், எங்கிருந்தோ வந்த நோயுற்ற பூனை பிரசன்னம் பார்க்குமிடத்தில் வந்து விழுந்தது. இந்த நிமித்தம் மிகவும் முக்கியமான ஒன்று.
● ஆபத்தை மாந்தியைக்கொண்டு காணவேண்டும். ஏற்கெனவே காணப்பட்ட ஜோதிடக் குறிப்புடன் இந்த நிமித்தம் ஒத்துப்போகிறது.
● கன்னியில் இருக்கும் மாந்திக்கு பதினோராம் பாவத்தில் ராகுவும் குருவும் சேர்வது எதிர்பாராத எதிர்காலத்து நிகழ்வைக் காட்டும்.
● உபய ராசியாகிய கன்னியில் மாந்தி இருப்பதால், யாரோ ஒருவரின் தூண்டுதலாலும் தவறான வழிகாட்டு தலாலும் இவர்கள் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் தெரிகிறது.
● குருவும் சந்திரனும் பெண் ராசிகளில் பரிவர்த்தனை ஆவதும், எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவங்கள் தொடர்புகொள்வதும், மணமகனுககு வேறொரு பெண் ணோடு தவறான தொடர்பு ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. அந்த விரும்பத்தகாத உறவால் ஆபத்து நிகழும் என்றும் தெரிகிறது. இந்த நிகழ்வு சனி திருவோணம் நான்காம் பாதத்தைச் சேரும்போது, சர்ப்ப திரேக்காணத்தில் நடக்கும்.
● இந்த நிகழ்வு நடந்து முடிந்த பின், பெற்றோரைக் கலக்கத்தில் விட்டுச்சென்ற பெண் மனம் திருந்தி வீடு திரும்புவாள்.
பரிகாரம்
● மணமகனுக்கு நிகழவிருக்கும் ஆபத்தைத்தடுக்க பரிகாரம் இல்லை. பெண்ணின் மனம் திருந்தி வீடு திரும்ப, திருச்செந்தூர் முருகனை சஷ்டியில் பிரார்த்தனை செய்தால் நலமுடன் வீடு திரும்புவாள்.
வெள்ளிக்கிழமை, சப்தகன்னி பூஜை செய்வதால் ஓரளவுக்கு நன்மை உண்டாகும்.