ஜோதிட சாஸ்திரம் எதற்காக ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றதென்றால், அத்தகைய தோஷங்கள் ஜாதகத்தில் இருப்பதை உணர்ந்து அவற்றுக்கான பரிகார விதிமுறைகளைத் தவறாது செய்து கொள்வதால் தோஷங்கள் விலகி ஜாத க ருக்கு நன்மை ஏற்படும் என்பதனாலேயா கும்.
ஜோதிட நூல்கள் கூறும் தோஷங் களில் மக்களை அச்சமூட்டுகிற கடுமை யான தோஷமே களத்திர தோஷம் எனப் படும். களத்திர தோஷமென்பது- மணம் முடித்தபின் விவாகரத்து ஏற் படுவது, மீண்டும் மறுமணம் அமைவது, தம்பதிகள் ஒற்றுமையின்றி வாழ்வது, தம்பதிகள் பிரிந்துவாழ்வது, எத்தனை மணம் முடித்தாலும் மண வாழ்க்கை கேள்விக் குறியாவது, இரண்டு மணம், மூன்று மணம்- ஏன் திருமணமே நடக்காமலிருப் பது போன்றவையாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kal_2.jpg)
எடுத்துக்காட்டாக, ஏழாம் வீட்டுக்குடையவன் மற்றும் எட்டாம் வீட்டுக்குடையவன் இவர்களோடு பாவர்கள் இணைந்திருப்பது; ஏழாம் வீட்டில் அல்லது எட்டாம் வீட்டில் ஒன்றுக்கதிகமான பாவ கிரகங்கள் இருப்பது; ஏழாம் வீட்டில் ஒரு பாவ கிரகம் இருந்து, அந்த பாவ கிரகத்தை மற்றொரு பாவ கிரகம் பார்ப்பது, ஏழாம் வீட்டில் பாவகிரகம் வர்க்கச் சக்கரங்களிலே பாவ கிரகங் களின் வர்க்க சக்கரத்தில் அமர்வது; நீசம்பெற்ற குருபகவான், ஏழாம் வீட்டில் அமர்வது; விருச்சிகம் ஏழாம் வீடாக, அங்கே சுக்கிரன் அமர்வது; மீனம் ஏழாம் வீடாக சனி பகவான் அங்கே அமர்வது; ரிஷபம் ஏழாம் வீடாக புதன் அங்கே அமர்வது; ஏழாம் வீட்டில் குளிகன் நின்ற வீட்டோன் அமர்வது; பாவ கிரகமாகிய ஐந்தாம் வீட்டோன் 7-ல் அமர்வது; எட்டாம் வீட்டோன் 7-ல்அமர்வது; மீனம் லக்னமாக, ஏழில் சந்திரனும் குருவும் அமர, நான்காம் வீட்டில் பாவகிரகம் இருப்பது- இப்படி பலவித தோஷம் காணப்படுகிறது. ஜாதக அலங்காரப் பாடல்-
"சப்தம அட்டமாதி தன்னுடன் பாவரேனும்
ஒத்துடன் அந்த தானம் ஊழ் பெரும்
பாவரேனும் சித்தமாய் வியத்தில்
மன்னன் சேயுடன் கூடினாலும்
ஒத்த நல்விவாக மிரண்டாம்
உறுமணம் புரிவானன்றோ'
எனக் கூறுகின்றது. அதுபோன்று வடமொழி நூல், ஏழாம் வீட்டோன் 8 -லும், எட்டாம் வீட்டோன் ஏழிலும் அமர பாவகிரக சேர்க்கை, பார்வையைப் பெற்றபோது இளம்வயதிலேயே கணவனைப் பிரிகின்ற நிலை ஏற்படுமென கூறுகிறது.
அதுபோன்று ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு அதிகமாக கோள்கள் இருப்பது, லக்னம் ,சந்திரன் மற்றும் ஏழாம் வீட்டோன் உபய ராசியில் அமர, 11-ஆம் வீட்டில் இரு கிரகங்கள் அமர்வது போன்றவையெல் லாம்கூட மீண்டும் மணம் முடிக்கின்ற அமைப்பைப் பெற்ற ஜாதகங்களாகும்.
இவ்விதமாக பலவிதமான தார தோஷங்களைத் தருகின்ற ஜாதக கிரக அமைப்புகள் இருக்கின்றன. ஒரு பெண்ணு டைய ஜாதகத்தில் இத்தகைய அமைப்பு காணப்பட்டால், இதோ களத்திர தோஷம் இருக்கிறது- இதோ தாரதோஷம் இருக் கிறது என்றெல்லாம் சோர்ந்துவிடாமல், ஜாதகப்பலன் கேட்பவரை அச்சமடை யச் செய்யாமல், அவர்கள் அந்த தோஷங் களிலிருந்து விடுபடுவதற்காக உபாயம் ஒன்றை முகூர்த்த சிந்தாமணி என்ற நூல் கூறுகின்றது.
எந்தப் பெண்ணுடைய ஜாதகத்தில் இத்தகைய களத்திர தோஷம் அமைந்து காணப்படுகிறதோ, அந்தப் பெண்மணி தந்தையுடன் தனியாக சாவித்திரி விரதம் கடைப்பிடிப்பதன் மூலமாகவும், மற்றும் அரசமர விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும், அல்லது நல்ல சிறந்த தீமையற்ற முகூர்த்தத் தில் முகூர்த்த லக்னத்தை அமைத்து, அந்த பெண்மணியை விஷ்ணு பிரதிமை அல்லது அரசமரம் அல்லது சாஸ்திரங்களில் சொல்லப்" பட்ட நெறிமுறைகளுக்கிணங்க திருமணம் முடித்து வைப்பதன்மூலம் அந்தப் பெண் எல்லாவிதமான களத்திர தோஷம் மற்றும் தாரா தோஷம் விலகி தீர்க்கசுமங்கலியாக வாழ்வார் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
எனவே களத்திர தோஷம், தாரா தோஷ மென்று கூறிக்கொண்டு கலங்காமல், இங்கு கூறிய பரிகாரத்தைத் தக்க வேதவிற்பன்னர் மூலமாக செய்துகொண்டு நலமுடன் வாழுங்கள்.
மேலும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் மணவாழ்கைக்குத் தடையாக அமைந்தால் சுப்ரமண்ய கடவுளாகிய முருகனின் சிறு சிலையை தானம் செய்வதாலும், சனி ஏழாம் வீட்டிலமர்ந்திருக்க, வேட்டுவ வடிவம் கொண்ட சிவப் பரம்பொருளின் சிறிய சிலை ஒன்றையும் (கிராத சிவப்பிரதிமை), ராகு அமர்ந்திருக்க ஐந்து தலை நாகவடிவத்தின் சிரசில் ரத்தினக்கல் பதித்து அதனை தானம் செய்வதாலும், கேது விருக்க பிரேதப் பிரதிமையும் (மிர்த்யு பிரதிமை), சூரியனிருக்க சிவப் பிரதிமையும் தானமாகக் கொடுப்பதால் தோஷ சாந்தி ஏற்பட்டு மங்கல மான மணவாழ்வு கூடும் என்பதனை,
'தத்யாத் ஸப்தம தோஷ சாந்தி விதயே
ஸௌபாக்ய ஸௌக்யாப்தயே'
எனக் கூறுகிறது சசாங்க சாரதியம் என்னும் ஜோதிட நூல்.
செல்: 97913 67954
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/kal-t.jpg)