ஒரு சமுதாயத்தில் ஆசிரியர் (குரு) எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நெசவாளியும் (சுக்கிரன்), வணிகரும் (புதன்), விவசாயியும் (சந்திரன்), அரசு அதிகாரியும் (சூரியன்), காவலாளியும் (செவ்வாய்), துப்புரவுத் தொழிலாளியும் (சனி) அவசியம். அதேபோல், தனிமனித வாழ்விலும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு கிரகம் முதன்மையாகிறது. அந்த கிரகத்தின் வலிமையைப் பொருத்தே வெற்றியும் தோல்வியும் அமையுமென்பதை உறுதியாக நம்பினார் கிருஷ்ணன் நம்பூதிரி. அந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்த வந்துசேர்ந்தது ஒரு பிரசன்னம்.
வயோதிகர்போல் வந்தார் ஒரு வாலிபர். தன்னுடைய ஜாதகத்தில் குரு பலமுள்ளதாக ஜோதிடர்கள் தெரிவித்தாலும், முப்பத்தைந்து வயதாகியும் தனக்குத் திருமணமாகவில்லையென்று கூறி வருத்தப்பட்டார். மங்கலதேவியை மனதார வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KJ.jpg)
பிரசன்ன லக்னமும் சோழி லக்னமும் கடக ராசியிலமைந்தது. கடக லக்னத் திற்கு மந்தனாகிய சனி ஆட்சிசெய்யும் மகரவீடு ஏழாம் வீடாக இருப்பதால் திருமணம் தாமதமாக நடக்கும். பிரசன்ன ஜாதகத்தில் சந்திரனும் அனுஷத்திலிருந்தது. சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்தது. கடகத்தில் குருபகவான் உச்சம் பெற்றிருந்தார். களத்திர காரகனாகிய சுக்கிரன் நீசத்திலிருந்ததால், திருமணத்தடையின் காரணம் புரிந்தது. குருபகவான் மட்டுமே திருமண பாக்கியத்தைத் தந்துவிடமுடியாது என்ற உண்மை உரைக்கப் பட்டது. களத்திர காரகனாகிய சுக்கிரனும் நடப்பு தசாபுக்தியுமே திருமணத்திற்கான முக்கிய காரணிகள் என்பதும் தெளிவாக்கப்பட்டது. திருமணஞ்சேரி- கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதமிருந்தால் திருமணத்தடை நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்ததால் திருமணம் கைகூடி பிரசன்னம் பார்க்க வந்தவர் மணமகனானார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒரு அலுவலகத்தில் அதிகாரியும் அவருடைய உதவியாளர்களும் சேர்ந்தே ஒரு பணியை முடிப்பதுபோல், ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெறும் எல்லா பலன்களுக்கும் கிரகங்களும் உபகிரகங்களும் சேர்ந்தே காரணமாக அமைகின்றன. உபகிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துல்லிய மான பலன்களைக் காண்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. சூரியனுக்கு ஜ்வாலா முகமும், சந்திரனுக்கு பரிவேடமும், சுக்கிரனுக்கு இந்திர தனுசுவும், செவ்வாய்க்கு தூமனும், புதனுக்கு அர்த்தபிரகணனும், குருவுக்கு எமகண்டகனும், சனிக்கு குளிகனும் உபகிரகங்களாக அமைகின்றன. எல்லா உப கிரகங்களிலும் குளிகனே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனா லேயே குளிகைக் காலமும் முக்கியத்துவம் பெறுகிறது. நஷ்ட ஜாதகத்தைக் காணும் போது பிரசன்ன ஆரூடத்தில் மாந்தி உதயமாகும் பாகையே அடிப்படையானது என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KJ1.jpg)
உயர் கல்வியில் வெற்றி கிடைக்குமா?
கேள்வி: நான் உயர் கல்வியில் ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டம்பெற விரும்புகிறேன். அதில் எனக்கு வெற்றி கிடைக்குமா?
-தியாகராஜன், செய்யாறு.
(எண்- 14; ரோகிணி- 2; நட்சத் திராதிபதி- சந்திரன்; ராசியாதிபதி- சுக்கிரன்.)
* சோழி லக்னத்தின் திரி கோணத்தில் பிரசன்ன காலத்து லக்னம் அமைந்திருப்பது சிறப்பு.
* ஐந்தாம் வீட்டில் கல்விகாரகன் புதன் ஆட்சி, உச்சம்பெற்று பலமாக இருப்பதால், கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.
* ஒன்பதாம் பாவம் வலிமை பெற்றதால் உயர்கல்வியில் முனைவர் பட்டம் வாங்க வாய்ப்புள்ளவர்.
* சோழி லக்னத்தின் நட்சத் திராதிபதியாகிய சந்திரனும், வித்யா காரகனாகிய புதன் வீட்டிலிருப்பதும் கல்வியில் மேன்மை தரும்.
* குருபகவானின் பார்வை ஐந்தாம் வீட்டில் பதிவதும் கூடுதல் வெற்றிதரும்.
* ஆறாம் வீட்டில் கேது அமர்வதால் கல்வி உதவித்தொகை கிடைக்க வாய்புண்டு.
* குருபகவான் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் முனைவர் பட்டம் பெறலாம்.
பரிகாரம்
காஞ்சிபுரம்- செட்டிபுன்னியம்- தேவநாத சாமி கோவிலில் அருள்புரியும் ஸ்ரீ யோக ஹயக்கிரீவரை வழிபட்டால் உயர்கல்வியில் வெற்றிபெறலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/KJ-t.jpg)