பி. செல்லம்மாள், திண்டுக்கல்.
எனக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். கணவர் குடும்பத்துடன் இல்லை. பிரிந்திருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உயிர்ச்சேதமோ பெரும் பாதிப்போ ஏற்படுமா? எனது மூன்றாவது மகன் திருமணத்தை என்னால் நடத்திவைக்க முடியுமா? இரண்டு மகன்கள், ஒரு மகள் திருமணத்தை நானே நடத்திவைத்தேன். இரண்டு மருமகள்களுக்கும் ராகு தசை நடக்கிறது. 2-ஆவது மகனும் மருமகளும், 8-ஆம் தேதி வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் ஆவணி 8-ல் திருமணம் செய்துகொண்டனர். அதற்குப் பரிகாரம் உண்டா?
உங்களுக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி என்பது தெரியவில்லை. மகனுக்கு ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் சந்திர தசை. இது பத்து வருடம். ஏழரைச்சனியும் சந்திர தசையும் சந்திப்பதால் உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படலாம் என்பது பொதுவிதி. உங்கள் கணவர் (அவருக்குத் தகப்பனார்) பிரிந்திருப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. என்றாலும் உடல்நலக்குறைவு இருக்கும். சனிக்கிழமைதோறும் 72 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில் நெய்விளக்கில் மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவேண்டும். இதை நீங்களே செய்யலாம். பாதிப்புகள் விலகும். தமிழ்த் தேதி ஆவணி 8 என்பது குற்றமில்லை. ஆங்கிலத் தேதிக்குதான் 4, 5, 7, 8 கூடாது. ஆங்கிலத் தேதி 6 என்பதால் பெரும் பாதிப்பு வராது. பொருளாதாரப் போராட்டம் இருக்கும். 108 நாள் தொடர்ந்து விநாயகருக்கு நெய்தீபமேற்றி அறுகம்புல் மாலை சாற்றவேண்டும். அதன் பிறகு ஞாயிறுதோறும் வாராவாரம் விநாயகரை வழிபடவும்.
ப் எஸ். சதாசிவம், மதுரை.
"ஜோதிடம் உண்மை; ஜோதிடர்கள் பொய்' என்று எண்ணியிருந்ததற்கு மத்தியில், தங்களைப் போன்ற தெளிவான, உண்மையான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதை "பாலஜோதிடம்' படித்தபிறகு தெரிந்துகொண்டேன். எத்தனையோ ஜோதிடப் புத்தகங்களை வாங்கிப் படித்தும் திருப்தியில்லை. நீங்கள் விதிவிலக்கு. உங்களை என் கண்ணுக்குக் காட்டிய மீனாட்சிக்கு நன்றி. எனக்கு ஜோதிடம் வருமா? தங்கைக்கு திருமண முயற்சி தடைப்படுகிறது. எப்போது நடக்கும்? தம்பியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jothidamanswers_13.jpg)
நீங்கள் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னம். 2-ஆமிடத்தை குரு பார்க்க, 4-ல் சூரியன், புதன் சேர்க்கை என்பதால் ஜோதிட ஞானம் சித்திக்கும். வாக்குப்பலிலிதமும் வரும். மேலும் புதன் தசை நடப்பதும் ஜோதிடம் பயில நல்வாய்ப்பு. தங்கை ரேவதி நட்சத்திரம், மீன ராசி. 37 வயதுவரை சுக்கிர தசை. மீன ராசி, மீன லக்னத்துக்கு சுக்கிரன் நல்லது செய்யாது. தற்போது சுக்கிர தசை, ராகு புக்தி. 27 வயது நடக்கிறது. அதன்பிறகுதான் திருமண யோகம். தங்கையின் ஜென்ம நட்சத்திரத்தை அனுசரித்து காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, அவருக்கு கலச அபிஷேகம் செய்யவும். திருமணத்தடையும் விலகும். நல்ல கணவரும் அமைவார். திருப்தியான மணவாழ்க்கையும் வாரிசு யோகமும் உண்டாகும். தம்பிக்கு 16 வயதுமுதல் சனி தசை. 3-ஆவது தசை பாதிப்பு வராது. கல்விமந்தம் அல்லது ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். அடுத்த சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு சரியாகும்.
ப் ஆர். கேசவன், திருவள்ளூர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு குறைந்த ரூபாய் மட்டும் பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு ஒரே மகள். அவள் திருமணத்தை எனது சகோதரி எல்லா செலவும் செய்து நடத்தி வைப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது தன்னால் இயலாது என்கிறாள். மகள் எதிர்காலம் என்னவாகும்?
மகள் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னம். சுக்கிர தசை நடக்கிறது. 2022 சனிப்யெர்ச்சிக்குப் பிறகுதான் அவருக் குத் திருமண யோகம் வருகிறது. அந்த சமயம் உங்கள் சகோதரியோ அல்லது அதற்கு பதிலாக வேறு யாரோ ஒருவரோ வந்து மகள் திருமணத்தை நடத்தி வைக்க ஆண்டவன் அருள்புரிவார். நம்பிக்கையோடு பொறுமை யாக இருங்கள்.
ப் வி. மணி, திண்டிவனம்.
என் தந்தை சிறந்த முருக பக்தர். 78 வயது நடக்கிறது. 35 வருடமாக நிலம் சம்பந்தமான வழக்கு நடக்கிறது. உயர்நீதிமன்றம்வரை அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தும் அந்த நிலத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. வழக்கு எப்போது சாதகமாகும்? பொசிஷன் எப்போது கிடைக்கும்?
தந்தையின் பிறந்தநாளன்று பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று (திருச்சி- பொன்னமராவதி பாதை) பூமிநாதேஸ்வரருக்கு 108 சங்கு வைத்து ருத்ர ஹோமம் வளர்த்து, பூமிநாதருக்கும் ஆரணவல்லியம்பாளுக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்து, தகப்பனார்- தாயாருக்கு கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். இதைச் செய்தால் பூமியும் கைவசம் கிடைக்கும். அனுபவிக்க ஆயுள் நீடிக்கும். ஆரோக்கியமும் உண்டாகும்.
ப் என். சுப்பிரமணியன், திருச்சி.
கடன் தொல்லை காரணமாக அரசுப் பணியிலிருந்து வி.ஆர்.எஸ். கொடுத்து கடன்களை அடைத்தும், இன்னும் கொஞ்சம் கடன் பாக்கி இருக்கிறது. எப்போது அடைபடும்?
கும்பகோணத்திலிருந்து குடவாசல் பாதையில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும். 11 வாரம் திங்கட்கிழமை அர்ச்சனைக்குப் பணம் கட்டலாம். ஏதாவது வழிபிறக்கும்.
ப் என், சுரேஷ், பொள்ளாச்சி.
2022 ஜனவரியில் கேது தசையில் சனி புக்தி ஆரம்பம். அதனால் பாதிப்பு ஏற்படுமா? சனி சாந்தி ஹோமம் செய்தேன்.
முன்னதாகவே ஹோமம் செய்துவிட்டதால் தடுப் பூசி போட்டுக் கொண்டது போல பாதிப்பு ஏற்படாது. 77 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, காலபைரவர் சந்நிதியில், சனி புக்தி முடியும்வரை சனிக் கிழமைதோறும் நெய்யில் மிளகுப்பொட்ட லத்தை நனைத்து தீபமேற்றவும். இது தற்காப்பு.
ப் ஆர். ஸ்ரீதரன், செங்கல்பட்டு.
நான் எப்போது சொந்தமாக கார் வாங்கித் தொழில் செய்யலாம்?
தனுசு லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத்திரம். ராகு தசை முடிந்ததும் குருதசையில் உங்கள் திட்டம் செயல்படும்.
ப் எம். ராஜாமணி, வேலூர்.
என் மகனுக்கு 31 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்?
ஜாதகத்தில் தோஷமிருப்பதால் திருமணம் தாமதமாகும். முன்னதாக வெளிநாட்டு வேலை யோகம் வந்தால் யோசிக்காமல் அனுப்பிவைக்கலாம். 2021-ல் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ப் வி. கமலா, ஆம்பூர்.
என் மகன் மிகவும் கஷ்டப்பட்டு கல்வி கற்று தனியார் துறையில் நல்ல பணியில் இருக்கிறார். அவருக்கு வெளி நாட்டு வேலை அமையுமா? அல்லது இருப்பிடத்திலேயே பதவி உயர்வு கிடைக்குமா? சொந்த வீடு அமையுமா?
ரிஷப லக்னம். 7-ல் சனி. குரு 12-ல் மறைவு. சிம்மச் செவ்வாய் விருச்சிகச் சனியைப் பார்ப்பது தோஷம். திருமணத்தில் குழப்பம், பிரச்சினை உண்டு. மார்ச்சில் வெளிநாட்டு வேலை அமையும். அதன்பிறகு சொந்த வீடு அமையும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/jothidamanswers-t_0.jpg)