எஸ். கோவிந்தராஜன், சேலம்- 2.

என்னுடைய கடைசிக்காலம் எப்பொழுது, எப்படி முடியும்? சுய உழைப்பில் வாழ்கிறேன். மனைவி மரணத்துக்கு நிகரான கஷ்டத்தைக் கொடுத்துவருகி றாள். அவளுடன் பேசி சுமார் பத்து ஆண்டுகள் ஆகின்றன. என் நிலைமை எப்படி அமையும்?

உங்களுக்கு புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னம். 67 வயது நடக்கிறது. 71 வயது வரை சுக்கிர தசை- 6-க்குடைய தசை- கடனாளி யாக்கும் தசை 5-ல் சூரியன் உச்சம். பிள்ளைகள் படிப்பு, வேலை, சம்பாத்தியம் எல்லாம் உச்சம்! ஆனால் 8-ல் உள்ள சனி 5-க்கும், 5-ல் உள்ள சூரியனுக்கும் பார்வை! அதனால் பிள்ளைகள் வகையில் நிம்மதிக்குறைவு. 8-க்குடைய சந்திரன் 7-ல்- மனைவி ஆயுள் தீர்க்கம். ஆனால் மனைவி யாலும் நிம்மதிக் குறைவு. மனைவி ஸ்தானாதி பதி புதனும் நீசம். அன்யோன்யமாக இருந்தால் மனைவிக்கு ஆயுள் குற்றம் ஏற்பட்டிருக்கும். களஸ்திரகாரகன் சுக்கிரன் உச்சம் என்பதால் அவர் ஆயுள் தீர்க்கமாக இருந்து உங்களை அணுஅணுவாகக் கொல்கிறார். மனைவிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னம். 41 வயது முதல் 61 வயது வரை சுக்கிர தசை. (நடப்பு 58 வயது). இருவருக்கும் சம தசைக் குற்றம்! கடைசிவரை நீங்கள் தனிமரம்தான்! லக்னாதிபதி குரு மறைவு- ராசியாதிபதி புதன் நீசம்! யாரையும் நம்பாதீர்கள். இறைபணியில் நிம்மதி தேடுங்கள்.

hh

Advertisment

ப் கே. சுப்பிரமணியம், ஈரோடு.

என்னுடன் பிறந்தவர்கள் மிகவும் வசதியோடும் அந்தஸ்தோடும் வீடு, வாசல், நல்ல தொழிலுடன் வாழ்கிறார்கள். எனக்கு மட்டும் அப்படிப்பட்ட யோகமில்லையே- ஏன்? ஒரு சிறு ஏஜென்ஸி எடுத்துச் செய்கிறேன். அத்துடன் ஜோதி டத் தொழிலையும் செய்யலாமா?

67 வயது நடக்கிறது. இனிமேல் ஜோதிடம் சொல்லி பிரபலமாகி சம்பாத்தியம் செய்வது நடைமுறைக்கு ஒவ்வாத செயல். ஏஜென்ஸியுடன் ஜோதிடத்தை உபதொழிலாக- பற்றாக்குறையை சரிக்கட்ட வைத்துக்கொள்ளவும். உங்கள் உடன்பிறப்பு கள் உங்களைவிட யோகமாக இருக்கிறார்கள் என்றால், அது அவர்கள் பிறந்த நேரம்- யோகம்! அவர்களைவிட நீங்கள் சிரமப் படுகிறீர்கள் என்றால் அது நீங்கள் பிறந்த நேரம்! ஒரே மண்ணில் அடுத்தடுத்து விதைக் கப்பட்ட செடியில் ஒன்று பூக்கிறது- ஒன்று பட்டுப்போகிறது. இதற்கு என்ன சொல்லமுடியும்? தனுசு லக்னம். லக்னாதி பதி குரு 12-ல் மறைவு. அட்டமாதிபதி சந்திரன் ஜென்மத்தில்! 7, 10-க்குடைய புதன் 4-ல் நீசம். 5-க்குடைய செவ்வாய் 5-க்கு 12-ல் மறைவு. 9-க்குடைய சூரியன் 9-க்கு 8-ல் மறைவு. ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் ராசியாதிபதியும் பலமாக இருக்கவேண்டும். 5, 9-க்குடைய திரிகோணாதிபதிகளும் பலம்பெற வேண்டும். இந்த பலம் என்பதற்கு அர்த்தம் லக்னம்- ராசிக்கும், அதேபோல தமது வீட்டுக்கும், அதேபோல லக்னாதி பதிக்கும் ராசியாதிபதிக்கும் பலமாக இருக்கவேண்டும். உங்களுக்கு லக்னாதிபதி- ராசியாதிபதியான குருவுக்கு திரிகோணம் என்பதால் வாழ்க்கையில் வறுமை, தரித்திரம் வராது. ஆனால் நித்தியகண்டம், பூரண ஆயுசாக வண்டி ஓடும்.

ப் வி.ஆர். பாண்டியன் கடலூர்.

என் மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பெயர் J. SHIVA SANKAR என்று வைத்துள்ளோம். எண் கணிதப்படி சரியா? எதிர்காலம் எப்படியிருக்கும்?

தேதி எண் 7, கூட்டு எண்-. விதி எண் 5. இதற்கு 1-ல் பெயர் வைப்பது நல்லது.

J. S H I V A S H A N G A R

1 3 5 1 6 1 3 5 1 5 3 1 2= 37

உத்தமம். உங்களுக்கு அட்டமச்சனி நடப்பதால் இடப்பெயர்ச்சி, விரயம், செலவு, வைத்தியச் செலவுகள் வந்து விலகும். கால பைரவருக்கு 19 சனிக்கிழமை மிளகு தீபமேற்றி வழிபடவேண்டும்.

உமா, சென்னை. 18

எனக்கு சனி தசை ஆரம்பம். சுய புக்தியை நினைத்து பயப்படுகிறேன். 19 வருட தசை என்ன செய்யும்? மகன்- மகள் திருமண வயதில் உள்ளனர். ஏதேனும் பிரச்சினை வருமா? என் ஜாதகப்படி சுமங்கலியாக மரணமடைவேனா?

சனி தசை 6-ஆவது தசை. ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி தசை. அதனால் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் எந்த ஒரு தசையிலும் சுயபுக்தி யோகம் செய்யாது. அப்படி யோகம் செய்தாலும் மற்ற எட்டு புக்திகளும் அந்த யோகத் தைக் கெடுத்துவிடும். சனி சாந்தி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். அத்துடன் தொடர்ந்து 60 மிளகை ஒரு சிவப்புதுணியில் பொட்டலமாகக் கட்டி 60 சனிக்கிழமை தொடர்ந்து மண்விளக்கில் நெய்நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும். சனி பகவானின் குருநாதர் கால பைரவர். சனிக்கு எப்போதும் எள் தீபம் ஏற்றக்கூடாது. சாஸ்திர விரோதம். அதே போல துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கும் ஏற்றக்கூடாது. எலுமிச்சம்பழம் ராஜகனி. அது கருகக்கூடாது. 5-ல் கேது நிற்பது குற்றம். அதனால் பிள்ளைகள் வகையில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். 5-ஆம் இடத்தை 5-க்குடைய குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தி! 19 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் நந்தி சந்நிதியில் நெய்விளக்கேற்றி, பிள்ளைகளுக்கு நல்லது நடக்க வேண்டுமென்று பிரார்த்தி யுங்கள்; பலனுண்டு. நந்தி துதி சொல்ல லாம். சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.

எஸ். வைத்தியநாதன், திருச்சி.

என் தங்கை எப்போது திருமணம் நடக்கும்?

அர்ச்சனாவுக்கு 27 வயது முடிந்து 28 ஆரம்பம். ரிஷப ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய். குரு கடக லக்னத்துக்கு 8-ல் மறைவு. அதனால் 29 அல்லது 30 வயதில் திருமணம் நடக்கும். பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்தால் முன்னதாகத் திருமணம் நடக்கலாம்.

எம். கார்த்திகேயன், கரூர்.

என் திருமணம் எப்போது நடக்கும்? எந்தத் தொழில் செய்யலாம்? கடன் தொல்லை எப்போது தீரும்?

திருமணத் தடை நீங்கவும் தொழில் மேன்மை அடையவும் கும்பகோணம்- குட வாசல்வழி- சேங்காலிபுரம் சென்று வழி படவும். கடன்நிவர்த்திக்கு, கும்பகோணம்- நாச்சியார் கோவில் அடுத்த திருச்சேறை சென்று, சாரபரமேஸ்வரரை வணங்கவும்.

எம். சுந்தரம், விழுப்புரம்.

ஒற்றுமை இல்லாத மனைவி- உடல் நலம் சரியில்லை. தொடர்ந்து மருத்துவச் செலவு. மனைவிக்குமுன் நான் சென்று விடமுடியுமா?

எல்லாப் பெண்களும் கணவருக்குமுன் சுமங்கலியாகப் போக ஆசைப்படுவார்கள். நீங்கள் வித்தியாசமாக, மனைவிக்குமுன் போகவேண்டுமென்று விரும்புகிறீர்கள். அது ஆண்டவன் விருப்பம்தான். அன்றைக்கே ஔவையார், "மனைவி சரியில்லையென்றால் சந்நியாசயாகப் போய்விடு' என்று சொல்லியிருக்கிறார்.

மு. ஞானதேவி, லண்டன்.

நான் ஒரு வயோதிகத் தாய். எனது இளைய மகன் சித்தபிரமையுடையவராக இருக்கிறார். அவரோடு நாங்கள் படும் கஷ்டம் கொஞ்சமல்ல. அவரோ எல்.எல்.பி. பட்டதாரி. வேலை ஒன்றும் செய்வ தில்லை. 20 வயது வரை நன்றாகத்தான் இருந்தார். பிறகு ஒரு நாளைக்கு நல்லபடி பேசுவார்; மறுநாள் நிலைமை தலை கீழாக மாறும். என்ன பரிகாரம்?

ஏழரைச் சனி நடக்கிறது. இது முடிய வேண்டும். அதுவரை அவருக்கு முழுமையான குணம் எதிர்பார்க்க முடியாது. கும்பகோணம் அருகில் சேங்காலிபுரம் என்ற குக்கிரமத்தில் தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. உங்கள் மகன் பெயர், நட்சத்திரத்துக்கு சங்கல்பம் செய்து ஹோமம் செய்யும்படி ஏற்பாடு செய்யுங்கள்.