கொ. கந்தசாமி, எடப்பாடி.
என் மகள்வழிப் பேத்தி கமலா +2 முடித்துவிட்டாள். பி.எஸ்.ஸி அக்ரி அல்லது சைக்காலஜி படிக்க வேண்டு மென்று விரும்புகிறாள். எது நல்லது?
கமலாவுக்கு திருவோண நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னம். 10-ஆம் இடம் சிம்மத்தை சுக்கிரன் பார்க்கிறார். (4-ல் இருந்து பார்க்கிறார்). பி.எஸ்.ஸி., அக்ரி படிக்கலாம். அரசு உத்தியோகத்திற்கு வாய்ப்புண்டு.
பவித்திரா, அருப்புக்கோட்டை.
என் தங்கை மகள் மீனு எம்.எஸ்.ஸி., முடித்து பி.எட்., படிக்கிறாள். வேலை வாய்ப்பு உள்ளதா? திருமணம் செய்யலாமா?
மீனுவுக்கு 24 வயது ஆரம்பம். நாகதோஷம் இருப்பதால் 25 வயதில்தான் திருமணம் செய்யவேண்டும். அதற்கு முன்னதாக வேலைவாய்ப்பு அமைந்துவிடும். வெளியூர் மாப்பிள்ளை- அந்நிய சம்பந்தம் அமையும்.
சிவசூரிய பிரகாசம், அருப்புக்கோட்டை.
எங்கள் மகன் சிவமுருகனுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று கூறியிருந்தீர்கள். அதன்படி 10-4-2020 காலை 8.45 மணிக்கு பேரன் பிறந்தான். விசாக நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். ந. சிவகுரு ஆதித் என்று பெயர் வைக்கலாமா?
ந. நஐஒயஆஏமதம ஆஉஒப என்று பெயர் வைக்கலாம். கூட்டு எண் 46 வருகிறது, இதுவே உத்தமமான பெயர். ஒரு வயது முடிந்து ஜாதகம் எழுதவும். ஓராண்டு பூர்த்தியில் பேரன் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுஷ் ஹோமம் செய்யவும்.
ந.ப. பாண்டியன் திருச்சி.
எனது பெண் செல்வி ஸ்ரீநிதி பிறந்த தேதி 20-7-1999. 21 வயது முடிந்த நிலையில் வரன்கள் வருகின்றன. எப்போது திருமணம் முடியும்? வேலைவாய்ப்பு எப்படி உள்ளது?
கன்னி லக்னம், கன்னி ராசி. 8-ல் குரு, சனி நிற்க, அவற்றை செவ்வாய் 2-ல் நின்று பார்க்கிறார். 24 வயதில் திருமணம் நடந்தால் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம். முன்னதாக நடந்தால் அவர் இஷ்டப்படி முடியும் விரும்பிய திருமணம். 2021-ல் வேலைவாய்ப்பு தனியார் துறையில் அமையும்.
முத்துகிருஷ்ணன், மதுரை.
எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. பல வருடங்களாக முதுகுத்தண்டு வடம், மூளை நரம்புவரை பாதிப்புடன் இருக்கிறேன். 2019-ல் இதயம் பாதித்து ஆன்ஜியோ செய்துகொண்டேன். இந்த நிலையில் என் மனைவி சித்திரை மாதம் இறந்துவிட்டார். பெரிய மகனுக்கு விருச்சிக ராசி, கேது இசை; இளைய மகனுக்கு மிதுன ராசி, சனிதசை நடக்கிறது. என் உடல்நிலை, ஆயுள்பலம் எப்படி உள்ளது? பெரிய மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? சினிமாவுக்குக் கதை, வசனம் எழுத முடியுமா?
மீன ராசி, தனுசு லக்னம். ராகு திசை நடப்பு. 57 வயது முடிந்துவிட்டது. இனிமேல் சினிமா உலகத்தில் போய் கதைகளைக் கொடுத்தால் அவர்கள் அவற்றை தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறதல்லவா? அதற்கு சம்மதப் பட்டால் திரையுலகம் சென்று முயற்சியுங்கள். 2021-ல் பெரிய மகளுக்குத் திருமணம் முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் அக்கறை செலுத்துங்கள்.
இந்து, மதுரை.
எனது உடல்நிலையில் மருத்துவச் செலவுகள் வந்தபடி உள்ளது. என் ஜாதகப்படி எப்போது ஆரோக்கியம் ஏற்படும்?
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் சீக்கிரமாக எலும்புத் தேய்மானம் ஏற்படும். அதனால்தான் டாக்டர்கள் எல்லாம் கால்சியம் சத்துள்ள உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கச் சொல்லுகி றார்கள். காஞ்சிபுரம் அருகில் திருமாகறலூர் என்ற ஊரில் உடும்பீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. சோழன் வேட்டையாட வரும்போது பொன்மயமான உடும்பு ஒன்று அவனைப் பார்த்து பயந்து ஓடி பொந்துக்குள் ஒளிந்துவிட்டது. அதன் வால் மட்டும் வெளியில் சிலையாகிவிட்டது. எலும்பு சம்பந்தப்பட்ட எல்லா நோய்க்கும் அந்த எல்லைக்குப்போய் வரலாம். அல்லது "வீங்குவினை கழனி' என்ற திருமுறைப் பதிகத்தைப் பாராயணம் செய்யலாம்.
என். லட்சுமணன், அருப்புக்கோட்டை
எங்கள் குடும்பச் சூழ்நிலை, எதிர் காலம் எப்படியிருக்கும்? சீனிவாசன் குடும்பச் சூழ்நிலை விவரம் என்ன?
லட்சுமணன் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், துலா லக்னம். தசாநாதன் சனி மீனத்திலும், புக்திநாதன் சூரியன் சிம்மத்திலும் இருப்பதால் சஷ்டாஷ்டகம். அதனால் கடன், காரிய தாமதம். தொழில் சிக்கல், தாய் பகை, உறவினர் கவலை காணப்படும். அடுத்து சந்திர புக்தி நன்றாக இருக் கும். லீலாவதிக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம், துலா லக்னம். ராகு 5-ல் இருப்பது புத்திர சம்பந்தமான கவலை. 5-க்குடைய சனி நீசம். புத்திரகாரகன் குருவும் லக்னத்துக்கு 12-ல் மறைவு. புத்திரதோஷம் உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு. சீனிவாசன் மிருக சீரிட நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னம். ஜாதகருக்கு வெளிநாட்டு வேலை. ஆளுக் கொரு திசையில் பிரிந்து வாழும் நிலை. சந்தோஷமற்ற வாழ்க்கை.
மேத்யூ, வேலூர்.
நீங்கள் எழுதும் ராசிபலன் உண்மை யாகவே எங்கள் வாழ்க்கையில் நடந்து வருகிறது. என் ஒரே மகன் ஜான் சுரேஷ் குமார் எம்.பி.ஏ முடித்தும் சரியான வேலை அமையவில்லை. எப்போது திருமணம் நடக்கும்?
திருவோண நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னம். வெளிநாட்டு வேலை அமையும். சனி, செவ்வாய் பார்வை இருப்ப தால் 30 வயதுக்குமேல் திருமணம். அன்னிய சம்பந்தம். கலப்புத் திருமணமான அமையும்.
என் தங்கராஜ், மேட்டுப்பாளையம்.
"பாலஜோதிட'த்தில் தாங்கள் எழுதும் பலன்களையும், கேள்வி- பதில்களையும் படித்தே நானும் ஜோதிடம் கற்று- பார்த்து வருகிறேன். தங்களுக்கு குரு வணக்கம் சொல்லிவிட்டுதான் பலன் கூறுவேன். எனது நண்பர் கோவிந்தராஜ் 30 வருடமாக வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமுமில்லாமல் கஷ்டப்படுகி றார். கடன் தொல்லைக்கு எப்போது நிவர்த்தி கிடைக்கும்?
கோவிந்தராஜ் சுவாதி நட்சத்திரம், துலா ராசி, துலா லக்னம். கடன், வட்டி நட்டம், கஷ்டம் இருப்பதால் ஆயுள் நீடிக்கும். ராகு புக்தியில் பூமி விற்பனை செய்து கடனை அடைக்கலாம். சனி சாந்தி ஹோமம் செய்தால் பூமி விலைபோகும். அத்துடன் ஆஞ்நேயருக்கு ஒரு சனிக்கிழமை அபிஷேகம் செய்யவும்.
பி. ராகவன், திருப்பூர்.
நான் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். இடை நேரங்களில் ஜோதிடம் பார்க்கிறேன். இதுவரை போர்டு போட்டு ஜோதிடம் பார்க்கவில்லை. தனியாக இடம்பிடித்து ஜோதிடத் தொழில் செய்யலாமா? என் மனைவி தேன்மொழிக்கு வலது கண் சிகிச்சை செய்யலாமா? என் மகள் சுமதிக்கு எப்போது திருமணம் நடக்கும்? மகன் பூபதி டிப்ளமோ படிக்கிறான். மேற்கொண்டு படிக்கலாமா?
ராகவனுக்கு விருச்சிக லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். ஜோதிடத் தொழிலை பகுதி நேரமாகச் செய்யலாம். கேது புக்தி வரும்போது தனி இடம் பிடித்து ஜோதிடம் பார்க்கலாம். தேன்மொழிக்கு அட்டமச் சனியில் சந்திர தசை சந்திப்பு; சரியல்ல. ஆபரே ஷன், வைத்தியச் செலவு வரத்தான் செய்யும், ஒருமுறை அவிநாசி சிவபெருமானுக்கு ஸ்ரீருத்ர ஹோமம் வளர்த்து, ருத்ராபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் அட்டமச் சனி முடியும்வரை திங்கட்கிழமைதோறும் அருகிலுள்ள சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்கு பால் வாங்கிக் கொடுக்கவும். மகள் சுமதிக்கு 5-ல் சனி, 7-ல் ராகு. அதற்கு சனி, செவ்வாய் பார்வை. 27 வயதுக்குள் திருமணம் நடந்தால் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணமாக முடியும். பெற்றோர் நிர்ணயிக்கும் திருமணம் என்றால் 30 வயதாகும். மகன் பூபதிக்கு ராகு தசை. அது முடிவதற்குள் பட்டப்படிப்பு, உத்தியோகம் அமைந்துவிடும். பிறகு மனைவி, மக்கள் யோகம், சொந்த வீடு யோகம் அமையும்.
வி.பி. வெங்கடேசன், திருவான்மியூர்.
என் எதிர்காலம் எப்படியிருக்கும்? எனக் கும் என் மகளுக்கும் பெயர் எண்கள் சரியா?
வெங்கடேசன் பூச நட்சத்திரம், கடக ராசி, கன்னியா லக்னம். போராட்டம், கடன், எதிர்நீச்சல் இருக்கும். சுக்கிர தசை யோகமான தசை. வி.பி. வெங்கடேசன் என்ற பெயர் 51 வருகிறது. பொருத்தமானதுதான். மகளுக்கு குரு தசை பாக்கியாதிபதி தசை யோக தசையாக இருக்கும்.