ஒருவர் காவல்துறையில் சேர்ந்து புகழ்பெற, அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி, 5, 9-க்கு அதிபதிகள் செவ்வாயுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்புகொள்ளவேண்டும். அல்லது செவ்வாய் நல்ல நிலைமையிலிலிருந்து, அதை குரு, சூரியன் பார்க்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி 5-ல், 5-க்கு அதிபதியுடன் இருந்து, அதை செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால், அந்த ஜாதகர் காவல் துறையில் பெரிய பதவி வகிப்பார்.
சூரியன், செவ்வாய் லக்னம் அல்லது 5, 9-ல் இருந்தால், அவருக்கு காவல்துறையில் பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
லக்னாதிபதியான செவ்வாய், லக்னத்திலிலிருந்தால், ஜாதருக்கு ருசக யோகம் உண்டாகும். அதனால் அந்த ஜாதகர் காவல் துறையில் புகழுடன் இருப்பார்.
லக்னத்திலுள்ள செவ்வாயை 5 அல்லது 9-ல் இருக்கும் குரு பகவான் பார்த்தால், அந்த ஜாதகர் காவல்துறையில் நல்ல பதவியில் இருப்பார்.
சந்திரன், சூரியன், செவ்வாய் 3, 5, 9-ல் இருக்க, அதை குரு பார்த்தால், அந்த ஜாதகர் காவல்துறையில் பலரும் பாராட்டும் நிலையில் இருப்பார்.
5-ல் குரு, சூரியன், செவ்வாய் இருந்தால், அவர் காவல் துறையில் உயர்பதவி வகிப்பார். ஆனால் பலர் வேளைகளில் அவருக்கு அங்கு பிரச்சினைகள் உண்டாகும். எனினும், அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார்.
லக்னத்தில் சூரியன், புதன், 5-ல் குரு, 9-ல் சந்திரன் இருந்தால், அவர் காவல் துறையில் புலன்விசாரணை இலாகாவில் உயர்பதவியில் இருப்பார்.
3-ஆவது வீட்டில் சூரியன், புதன், செவ்வாய்; 5-ல் சந்திரன்; 10-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு காவல்துறையில் பணி யாற்றும் வாய்ப்பிருக்கிறது.
லக்னத்தில் சந்திரன், 5-ல் குரு, செவ்வாய் இருந்தால், அவர் ஐ.பி.எஸ். தேர்வாகி காவல் துறையில் உயர்பதவி வகிப்பார்.
5-ல் செவ்வாய், புதன், சூரியன்; 11-ல் குரு இருந்தால், அவர் காவல்துறையில் நல்ல புகழுடன் பெரியபதவி வகிப்பார்.
9-ல் சூரியன், புதன், செவ்வாய்; 11-ல் சந்திரன், 3-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் காவல்துறையில் நல்ல பெயர் பெறுவார். அவருக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும்.
லக்னத்தில் சந்திரன், 4-ல் சனி, 6-ல் சூரியன் இருந்தால், அவருக்கு காவல்துறையில் நல்ல வாய்ப்பு கிட்டும். 6-ல் இருக்கும் சூரியன் அவருடைய விரோதிகளை அழிக்கும்.
5-ல் சனி, 9-ல் செவ்வாய், குரு, லக்னத்தில் சூரியன் இருந்தாலும்; லக்னத்தில் சூரியன், புதன், செவ்வாய்; 5-ல் குரு இருந்தாலும், அந்த ஜாதகர் காவல்துறையில் உயர்நிலைப் பதவியில் இருப்பார்.
4-ல் சூரியன், 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், 7-ல் சனி, சந்திரன் இருந்தால், அவர் காவல்துறையில் உன்னதப் பதவியில் இருப்பார்.
லக்னத்தில் சூரியன், 5-ல் குரு, 9-ல் சந்திரன், செவ்வாய், ராகு இருந்தாலும்; லக்னத்தில் செவ்வாய், சந்திரன், புதன், 9-ல் குரு இருந்தாலும், அந்த ஜாதகர் காவல்துறையில் உயர் பதவியில் இருப்பார்.
சூரியன், ராகு லக்னத்தில் இருக்க, 10-ல் செவ்வாய், குரு இருந்தால், அவர் காவல்துறையில் நல்ல பதவியில் இருப்பார். அரசியல்வாதியாவதற்கும் வாய்ப்புண்டு.
லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 5-ல் செவ்வாய், குரு, சனி இருந்தாலும்; 5-ல் செவ்வாய், புதன், சூரியன், 9-ல் குரு, 11-ல் சுக்கிரன் இருந்தாலும், அந்த ஜாதகர் காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருப்பார்.
பரிகாரங்கள்
காவல்துறையில் நுழைவதற்கும், பணியாற்றுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தடைகள், பிரச்சினைகள் இருந்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள் இவை...
தினமும் ஆஞ்சனேயரை நான்கு முறை சுற்றிவரவேண்டும்.
செவ்வாய்க்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் துர்க்கை அல்லது காளி ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி, சிவப் புநிற மலரை வைத்துப் பூஜைசெய்ய வேண்டும்.
தினமும் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யவேண்டும்.
வீட்டின் வடகிழக்கில் குப்பை களைச் சேர்த்து வைக்கக்கூடாது.
மேற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும்.
தன் லக்னாதிபதி, 5-க்கு அதிபதி யின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டின் தென்மேற்கில் கிணறு, ஆழ்துளைக் கிணறு இருக்கக்கூடாது.
வீட்டின் தென்கிழக்கில் நீர் பிடித்து வைத்தல் கூடாது. நீர்த் தொட்டியும் கூடாது.
வீட்டில் மாருதி எந்திரத்தை வைத் துப் பூஜை செய்வது நற்பலன் தரும்.
செல்: 98401 11534