சமீப காலத்திய செய்தித் தாள்களிலும், செய்தி ஊடகங்களிலும் ஹார்ட் அட்டாக் மரணங்கள் குறித்து நிறையவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
காவல் நிலையத்தில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் மரணம், உறக் கத்தில் இருந்தவர் மரணம், பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த ட்ரைவர் மரணம் என்ற ரீதியில் நாள்தோறும் செய்திகள்.
மனித சமூகத்திற்கு ஹார்ட் அட்டாக் என்பது பெரும் சோதனையாக மாறியுள்ளது.
இதய நோயால் இன்றைய தலைமுறை யினர் பலர் சிறு வயதிலேயே பாதிக்கப் பட்டு வருகிறார்கள். அதற்குக் காரணங் கள் என்னவென்று பார்த்தால், மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களின் மாற்றங்கள் ஒரு பக்கம். அடுத்து, உணவு முறைகள்.
எல்லாருடைய வாழ்க்கையும் இயந்திரங்கள்போல் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சம்பாத்தி யம்... சம்பாத்தியம் என்ற இடத்திற்கு எல்லாரும் வந்துவிட்டதால் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குக்கூட நேரமில்லாமல் உழைப்பு... உழைப்பு என்று மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு விடுகின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, சந்தோஷமாக சிரித்து மகிழ்ச்சியாகப் பேசி பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதென்பது இன்றைய காலகட்டத்தில் அறவே இல்லாமல் போய்விட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/heart_4.jpg)
ஆண்- பெண் இருவருமே குடும்பத் திற்காக பொருளாதாரத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவருடன் ஒருவர் மனம்விட்டுப் பேசுவதென்பது இப்போது இல்லாமலேயே போய் விட்டது.
இதனால் இன்றைய காலத்தில் பெரும்பாலோர் மன அழுத்தத்திற்கும், மனச்சோர்விற்கும், விரக்தி நிலைக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதில், பெண்களைவிட அதிக அளவில் ஆண்களே பாதிக்கப்படு கின்றனர் என்றும் சொல்லலாம். காரணம், ஒட்டுமொத்த குடும்பத்தின் சுமைகளையும் தாங்கும் குடும்பத் தலைவராக இருப்பதால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பல பெண்கள் அவர்களின் சுமையைக் குறைக்க உதவி செய்கிறார்கள். அத்துடன் தங்களுடைய மன வேதனைகளையும் கஷ்டங்களையும் மற்றவரிடம் எளிதில் பகிர்ந்துகொள்கிறார்கள் பெண்கள்.
அவர்களுடைய வேதனைகளை கண்ணீரின்மூலம் வெளிப்படுத்தி மன பாரத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் யாரிடமும் எளிதில் பகிர்ந்து கொள்ளுவதில்லை. மனதுக்குள் எல்லாவற்றையும் வைத்து வேதனைப் படுவதால் அதிக அளவில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆண்கள் கவலையை மறந்திருக்க வேண்டு மென்று ஒருசில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். மேலும் உடல்நிலையை சீரழித்துக் கொள்கிறார்கள் அதனால் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆண்கள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். இளம்வயதிலேயே சிலருக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. ஜாதகரீதியாக இதய நோயால் அதிகம் பாதிக்கப்படும் ராசிகள் என்று பார்த்தால் கடகம், சிம்மம், தனுசு ராசியினர் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இதயத்தைக் குறிக்கக்கூடிய பாவங்கள் என்று சொன்னால் நான்காம் பாவம், ஐந்தாம் பாவம் ஆகும்.
இதயம் தொடர்பான பிரச்சினைகளைக் குறிக்கக்கூடிய கிரகங்கள் சூரியன், சந்திரன், சனி ஆகும். நடுத்தர வயதைக் கடந்த எழுபது சதவிகிதத்தினர் இந்த நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இந்த நோய் தாக்குவதற்கு சனி ஒரு முக்கிய காரண கிரகம் ஆகும்.
கிரகங்களில் செயல்பாடுகள்
சூரியன் இதயத்தின் காரகர் ஆவார். சந்திரன் ரத்த ஓட்டத்தையும், இதயத்துக்கு வந்து போகும் ரத்தத்தையும் குறிக்கும் காரக கிரகம் ஆவார். புதனும் கேதுவும் இதய வால்வுகளைக் குறிக்கும். சனிபகவான் இதய அடைப்புகளைச் சொல்லும். குரு இதய தசைகளைக் குறிக்கும் கிரகம். இந்த உறுப்புகளைக் குறிக் கும் கிரகங்கள் ஆறாம் அதிபதியுடன் தொடர்பு பெற்று நான்காம் பாவத்தில் இருக்கும்போதும் இதய நோயால் பாதிக்கப்படுகி றார்கள்.
கிரகச் சேர்க்கைகள்
நான்காம் இடத்தில் சந்திரன் இருப்பதும், நான்காம் பாவத்தை சந்திரன் பார்ப்பதும்; கடகத்தில் சனி இருப்பதும், கடகத்தை சனி பார்ப்பதும்; சந்திரன், சனி, குரு, சூரியன் இந்த நான்கு கிரகங்களில் இரண்டு கிரகங்களுக்கு மேல் நான்காம் இடத்தில் அல்லது கடகத்தில் அல்லது சிம்மத்தில் இருப்பதும் பாதிப்பைத் தருகிறது சனி, சூரியன், செவ்வாய்வுடன் ராகு தொடர்பு ஏற்பட்டாலும், சூரியன் 6, 8, 12 பாவங் களில் மறைந்தாலும். பாதிப்பு ஏற்படுகிறது
தசாபுக்தி
ஆறு, நான்கு இந்த இரண்டு பாவங் களிலும் ஒரு கிரகம் என்று தசாபுக்தி நடத்தும்பொழுதும், ஆறாம் அதிபதியும் லக்னாதிபதியும் தொடர்பு பெற்று தசாபுக்தி நடத்தும்பொழுதும். எட்டாம் அதிபதி, 12-ஆம் அதிபதியுடன் நோய் காரக கிரகங்கள் இணையும்போது நோயின் தன்மை அதிகமாகிறது. ஜாதகருக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற கிரகச் சேர்க்கைகளும் தசாபுக்திகளும் இருக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
பரிகாரம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருநின்ற வூரில் இதய லிங்கேஸ்வரர் (இருதயாலீஸ்வரர்) ஆலயம் உள்ளது அங்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
செல்: 90802 73877
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/heart-t.jpg)