ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2-ஆவது ராசிகளில், ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் விகிதம், இந்த மூன்று ராசிகளிலும் சனிபகவான் ஏழரை வருடங்கள் இருந்து பலன் தருவார். இதனையே ஏழரைக்சனிக் காலம் எனக் கூறுவார்கள்.
இந்த ஏழரை வருடங்களிலும், அந்த ஜாதகர் பலவிதமான தீமை, கஷ்டங்களை அனுபவிப்பார் என்று வேதமுறைக் கணித ஜோதிடர்கள் பலன்களைக்கூறியும், எழுதியும் வருகிறார்கள். உண்மையில், இந்த ஏழரைச்சனி நடப்பில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தீமையான பலன்களை அனுப விக்கிறார்களா என்றால், இல்லை என்பதே உண்மை.
கணித ஜோதிட முறையில், ஒருவரின் பிறப்பு நட்சத்திரத்தையும், பிறந்த ராசியையும் முதன்மையாக வைத்து, கோட்சார நிலையில் குரு, சனி, ராகு, கேது, கிரகங்கள் ராசி மாறும் போது, கிரகப் பெயர்ச்சிப் பலன்களை எழுதுகிறார்கள். பிறப்பு ஜாதகத்திலுள்ள மற்ற கிரங்களின் நிலையைப் பார்த்துப் பலன் கூறுவதில்லை. நடப்பு தசை, புக்தி நன்றாக இருந்தால் அதிகம் பாதிக்காது எனக் கூறிவிடுவார்கள்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பு ஜாதகம் ஒன்றுபோல் இல்லை. கிரகங்கள் பிறப்பு ராசியில் வெவ்வேறாகத்தான் அமைந்திருக்கும் ஒரே ராசியில் பிறந்தவர்கள் உலகில் பலகோடிபேர் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும், ஒரேசமயத்தில்தான் ஏழரைச் சனி ஆரம்பித்து நடக்கும். ஒரே ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான கஷ்டப் பலன்களை அனுபவிக் கமாட்டார்கள். ஏழரைச்சனிக் காலத்தில் வாழ்க்கையில் உயர்வை அடைந்தவர்கள் பலபேர் உண்டு.
தமிழ்முறை ஜோதிடத்தில் குரு, சனி, ராகு, கேது கிரகங்கள் கோட்சாரச் சுழற்சியில் ராசி பெயர்ச்சியாகித் தரும் பலன்களை அவரவர் பிறப்பு ஜாதகத்திலுள்ள மற்ற கிரகங்களின் சாதக, பாதக நிலையறிந்தே கூறியுள்ளார்கள் சைவத் தமிழ்ச் சித்தர்ப் பெருமக்கள்.
இந்த வருடம் 15-12-2020 கார்த்திகை மாதம், 30-ஆம் தேதியன்று சனி கிரகம் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மகர ராசிக்குச் செல்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு 2-ஆமிடத்து சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு 12-ஆமிட விரயச்சனியாகவும், மிதுனராசிக்காரர்களுக்கு எட்டாமிட (அஷ்டம) சனியாகவும் இருந்து பலன்தரப் போகிறது. இந்த ஏழரைச்சனி யாருக்கு வாழ்வில் உயர்வையும், யாருக்கு சிரமம், கஷ்டம் தரும் என்பதை அறிவோம்.
ஒவ்வொருவர் பிறக்கும்போது எழுதிவைக்கப்பட்ட பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆமிட ராசிகளில் சனிக்கு நட்பு கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் இருந்தால், அவர்களை ஏழரைச்சனிக் காலம் பாதிக்காது. வாழ்வில் நன்மைகளையும் உயர்வையும் தந்துவிடும்.
இந்த ஜாதகத்தில் ஏழரைச்சனிக் காலத்தைக் குறிப்பிடும் சந்திரன் இருக்கும் ராசிக்கும் 12-ல் குரு, 2-ல் சனி அமைந்துள்ளன. இவையனைத்தும் சனிக்கு நட்பு கிரகங்கள். இதுபோன்ற அமைப் புள்ள ஜாதகர்கள் தங்கள் ஆயுள்வரை ஏழரைச்சனியால் பாதிப்படையமாட் டார்கள். வாழ்வில் உயர்வுகளை அடைந்துகொண்டே செல்வார்கள்.
பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் குரு இருந்தால், உத்தியோகம், தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் அமைந்துவிடும். உத்தியோகத்தில் உயர்வுண்டாகும். அதனால், மதிப்பு, மரியாதை கூடும். உயரதிகாரிகள், பெரிய மனிதர்களின் அன்பு, ஆதரவு கிட்டும். எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.
வாழ்வில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். குடும்பச் சூழ்நிலைகள் சுமுகமானதாக இருக்கும். மூன்றாம் மனிதர் ஆதரவு கிடைக்கும்.
ஜாதகத்தில் 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தால் கோட்சார சனி சுக்கிரனுடன் சேரும் காலத்தில் பணவருவாய், வீடு, வாகனம், ஆபரணம், வாங்கும் சூழ்நிலை உண்டாகும். திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியால், மனைவிவழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். பெண்களுக்குத் தொழில், உத்தியோகம் அமையும். கலைத்துறையில் உள்ளவர்கள் தொழிலில் உயர்வு பெறுவார்கள்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் புதன் இருந்தால், கல்வி சம்பந்தமான காரியம், செயல்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். விடுபட்ட கல்வியைப் படிக்கலாம், கூட்டுத் தொழில், வியாபாரம், வாணிபம் நன்மை, உயர்வு தரும். காடு, தோட்டம், கட்டியவீடு கடைகள் வாங்கும் நிலை அமையும். ஆண்கள், பெண்களுக்கு புதிய நண்பர்கள் அமைவார்கள்.
மக்கள் தொடர்பு சம்பந்தமான தொழில், செயல்களில் வெற்றி,, புகழ் கிடைக்கும்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 12-வது ராசிகளில் சனி கிரகம் இருந்தால்- பிறப்பு ஜாதகத்திலுள்ள சனியுடன் கோட்சார சனி இணையும்போது வாழ்க்கையிலும், பொருளா தரத்திலும் மாற்றங்கள் உண்டாகும். இதுவரை ஏழையாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு வாழ்ந்தவர்கள் வாழ்வில் உயார்வடைய வழிபிறக்கும். சனி நன்மைகளைக் கொடுக்கத்தொடங்கிவிடுவார். இதுவரை வசதியாக செல்வ நிலையில் வாழ்ந்தவர்கள் செல்வச் சிறப்பை இழந்து எதிர்காலத்தில் வாழ்வில் சிரமம் அடையும் சூழ்நிலை உருவாகும். இதனையே "முப்பது வருடம் நன்கு வாழ்ந்தவர்களுமில்லை, முப்பது வருடம் கஷ்டம் அடைபவர்களுமில்லை' எனக் கூறுவார்கள்.
ஜென்ம ராசியில் சந்திரன் உள்ள நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில், சந்திரனுடன் சனி இணைந்து, சஞ்சாரம்செய்யும் காலத்தில் மட்டும் தொழில், உத்தியோகம், வீடு, கடை, இடமாற்றம் உண்டாகலாம். வீண்பழி, பணவிரயம் உண்டாகும். தாய், மாமியார், மூத்த சகோதரர், கணவன்வழி உறவுப்பெண்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தீய பெண்கள் சிநேகிதம், அவமானம், தாய்க்கு நோய்த் தாக்கம், ஜாதகருக்கு கண், வயிறு, கபம் சம்பந்தமான நோய்த் தாக்கம் உண்டாகலாம். மேலும், மனக் குழப்பம், அலைச்சல் உண்டாகும்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், சட்டத்திற்குப் புறம்பான தொழில், வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தல், பிறரை ஏமாற்றிப் பணம், பொருளை அபகரித்தல், அரசு, அதிகாரங்களில் நேர்மையாக செயல்படாமல், சூழ்ச்சிசெய்து பதவியை அடைதல், மந்திரம், மாயம், கடவுள், மடம் எனக் கூறி மக்களை ஏமாற்றிப் பணம் பறித்தல், போலி குருமார்கள், மடாதிபதிகள், போலி ஆன்மிக வாதிகள் மக்கள் மத்தியில் பிரபலமடை வார்கள். உறவுகளில் மரணம், தீயோர் நட்பு, வம்சத்தில் பாதிக்கப்பட்டு இறந்துபோன ஆத்மாக்களின் பாதிப்பு, ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் உண்டாகும். விபத்துகள் உண்டாகும். கெட்டவர்கள் நன்மை அடைவாட்;கள் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு நன்மை தரும் 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் புதன், குரு, சுக்கிரன், சனி இருந்து, கோட்சார சுழற்சி நிலையில் சந்திரன், செவ்வாய், சூரியன், கேது ஆகியவை நல்ல கிரகங்களுடன் இணையும் நாட்களில் நல்ல பலன்கள் குறைவாகும்.
ஜாதகத்தில் 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் சூரியன், சந்திரன், செவ்வாய், கிரகங்கள் இருந்தாலும், 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் கேது இருந்தாலும் அந்த ஜாதகர் ஏழரைச்சனிக் காலத்தில் நன்மைகளை அடையமுடியாமல், அதிக சிரமங்களை அனுபவிப்பார். இவர்கள் ஏழரைச்சனியால் பாதிப்பு அடைப வர்கள்.
சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாமிட (அஷ்டம)த்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், அந்த எட்டாமிடத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் புதன், குரு, சுக்கிரன், சனி இருந்தால், எட்டாமிடத்து சனி சிரமம், கஷ்டம் தராது. நல்ல பலன்களையே தரும்.
எட்டாமிட சனிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது இருந்தால், அஷ்டமச் சனி சிரமம் தரும். ஏழரைச்சனி எல்லாரையும் பாதிக்காது என்பதே சித்தர்கள் கூறும் நடைமுறை உண்மை. ஏழரைச்சனியை நினைத்து எல்லாரும் பயப்படவேண்டாம்.
அடுத்த இதழில், தமிழ்முறை ஜோதிடத்தில் ராகு- கேது பெயர்ச்சியினால் ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பு ஜாதகப்படி என்னென்ன பலன்களை அனுபவிப்பார்கள் என சித்தர்கள் கூறியுள்ளதை அறிவோம்.
செல்: 99441 13267