"வெளிச்சத்திற்கு வாங்க' என்னும் இந்தத் தொடரில் அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டுகிறீர்கள்; ஔவையார் பாடலை சுட்டிக் காட்டுகிறீர்கள். பண்டைத்தமிழை அடிக்கோடிட்டுக் கருத்து சொல்கிறீர் கள். தமிழுக்கும் ஜோதிடத்திற்கும் அப்படி ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம் என்று சிலர் கேட்கிறார் கள். அவர்களுக்காகதான் இந்த வார சிந்தனை.
"நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்னும் பாடலைத் தந்தவர் கணியன் பூங்குன்றனார் என்பதைப் பலரும் தெரிந்திருக்கலாம். இதில் கணியன் என்னும் சொல், ஜோதிடத் தைக் கணிப்பதால் அவரை கணியன் என்று குறிப்பிடுவதாகச் சொல்வார் கள். டாக்டர் பெயருக்குமுன் "உழ்.' என்று போட்டுக் கொள்வதுபோல, பொறியாளர் 'ஊழ்' என போட்டுக் கொள்வதுபோல, ஆடிட்டர் 'ஈ.ஆ.' என்று போட்டுக்கொள்வதுபோல, ஜோதிடர் களுக்கும் கௌரவமாக இருந்த அந்தக் காலத் தில், எதிர்காலத்தில் வருவதை முன்பே கணித் துச் சொல்வதால், "கணியன்' என்று பெயரடை (ஆக்த்ங்ஸ்ரீற்ண்ஸ்ங்) சேர்த்துச் சொல்வார்கள்.
இப்படி தமிழ் ஜோதிடர்களை தமிழ் போற்றியிருக்கிறதே- அப்போது தமிழை விட்டுவிடவா முடியுமென்று நினைக் கிறீர்கள்? "தமிழில்லாத பாரதம் தலையில்லாத உருவம்போல' என்று சொல்லியா தெரியவேண்டும்?
சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம். அதில் "பிள்ளை பாதி புராணம் பாதி' என்று சொல்வதுபோல, அதிகமான பகுதிகளைக்கொண்டது திருஞானசம்பந்தர் புராணம். அதில் சம்பந்தர் பெருமான் அவதாரத்தைச் சொல்லவரும் பாடலைத் தருகிறேன்; சுவைத்துதான் பாருங்களேன்.
"அருக்கன்முதல் கோளனைத்தும்
அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன்நிற்கப்
பேணியா நல் ஓரைத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமும் தழைத்தோங்க.'
இந்தப் பாடலில், அருக்கன் (சூரியன்) முதல் அனைத்து கோள்களும் நல்ல பலனைத் தரக்கூடிய உச்சத்தில் இருக்க, திருவாதிரை நட்சத்திரத்தில், நல்ல ஓரையில் என்னும் சோதிடக் குறிப்பைக் காணமுடிகிறதல்லவா?
"சில மணிநேரம் கழித்துப் பிறந் தால், பிறக்கும் குழந்தை அரசாளும்' என்னும் ஜோதிடக் குறிப்பைக் கேட்டு, கமலவதியார், கோச்செங்கட் சோழனைப் பெற்றெடுத்த செய்தியையும் காணமுடியுமே.
திருக்குறளில் ஜோதிட சிந்தனை உள்ளதா என்றுதானே அடுத்து உங்களுக்குக் கேட்கத் தோன்றும்?
"புறம்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து.'
இந்தக் குறளில் எங்கே ஜோதிடம் இருக்கிறதென்று இயல்பாகப் படிப்பவர்கள் கேட்கலாம். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தியுங்கள். மூக்கு என்பது குருவைக் குறிக்கும். கரி என்பது சனியைக் குறிக்கும். குருவில் சனி இருந்தால்? இதற்கு விளக்கம் சொல்லித் தான் ஆகவேண்டியதில்லை.
"மூக்கில் கரி; குருவில் சனி' என்பதாக சிந்தித்துப் பாருங்கள். ஜோதிடக் கருத்தைத் திருக்குறள் சொல்லியிருக்கிறது என்பது புரியும். இதேபோல-
"உடம்பாடி லாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று'
என்னும் குறளில், குடமென்பது கும்ப ராசியையும், பாம்பென்பது சர்ப்ப கிரகமான ராகுவையும் குறிக்கும். கும்ப ராசியில் ராகு வந்தால் பலன் எப்படியிருக்கும் என்பதையே குறளின் பொருளாக வைத்து சிந்தித்துப் பாருங்கள். ஜோதிட சிந்தனைகள் திருக்குறளில் உள்ளதென்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
இவை உதாரணத்திற்காக சொல்லப் பட்டவைதான். இதுபோல ஜோதிட சிந்தனைகளைச் சொல்லும் பல குறட் பாக்களை எடுத்துக்காட்டமுடியும்.
"காய்சின வெய்யோன் சேயோன்
முன்செலக் கதிர்கால் வெள்ளித்
தேசிகன் பின்பு சென்று நடக்குமிச்
செயலான் முந்நீர்த் தூசின வுலகிற்
பன்னீ ராண்டுவான் சுருங்கு
மென்றுபேசின நூல்கள் மாரி
பெய்விப்போற் சென்று கேண்மின்' (1195)
என்னும் திருவிளையாடல் புராணத்தை எடுத்துக்கொண்டால், சூரியனும் செவ்வாயும் முன்னே செல்ல, சுக்கிரன் பின்னே தொடரும்போது, பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யாது என்னும் ஜோதிடக் குறிப்பைச் சொல்கிறது என அறியும்போது வியப்பாக உள்ளதல்லவா?
"அலங்கன்ம- வானவரும் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதம்
கலங்க எழு கடுவிடமுண்டு இருண்டமணி
கண்டத்தோன் கருதும்கோயில்
விலங்கல் அமர் புயன்மறந்து மீன்சனிபுக்கு
ஊன்சலிக்கும் காலத்தானும்
கலங்கலிலா மனப்பெருவண்
கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே'
என்பது திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறை. மழை வேட்டல் பதிகம் என்று சைவப் பெருமக்களால் உயர்வாகப் போற்றப் படும் இந்தப் பதிகத்தில், மகரத்தில் சனி புகும் காலத்தால் ஏற்படும் சிக்கலை கழுமலம் என்று சொல்லும். சீர்காழிப் பெருமானை வழிபாடு செய்ய அதுதீரும் என்பதாக ஜோதிடக் குறிப்பினைப் பதியவைத்துள்ளது வியப்பாக உள்ளதல்லவா?
"எங்கும் நல்நிமித்தம் செல்ல இருநிலம் மகிழ்ச்சி கூர
பங்குனி நிறைந்த திங்கள் ஆதவன் பயிலும் நாளில்
வெம்குனி வரிவில் வாகை விசயனும் பிறந்தான் என்றி
பங்குனன் என்னும் நாமம் பகுதியால் படைத்திட்டானே'
என்பது வில்லிபுத்தூராழ்வார் அருளிய பாசுரம். இந்தப் பாடலில், பங்குனி மாதம் உத்திர நாளில், அர்ச்சுனன் பிறந்தான் என்னும் ஜோதி டக் குறிப்பை சேர்த்தே பதிவுசெய்திருப்பது நம்மை இன்னமும் வியக்கவைக்கிறதல்லவா?
இப்படிதான் புராணங்கள், சங்க இலக் கியங்கள் என அனைத்திலும் ஆங்காங்கே ஜோதிடக் குறிப்புகள் இருக்கின்றன.
ஜோதிடக் கண்கொண்டு இந்தப் பாடல்களைப் படிக்கும்போது, நம்மையறியாமலே வியப்பு உண்டாவதில் ஆச்சரியமில்லை.
அதனால், ஜோதிடம் "முன்தோன்றி மூத்தகுடி' என்று சொல்லும் தமிழில்தான் உள்ளதென்பதைப் புரிந்துகொண்டு, தமிழைத் தொடாமல் ஜோதிடம் சொல்லமுடியாதென்ற நம்பிக்கையுடன் அணுகுங்கள்.
நல்லதே நடக்கும்; நம்பிக்கையுடன் இருங்கள்.
(தொடரும்)
செல்: 94443 27172