"படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே'.
-திருமூலர்
(பொருள்: மனிதர்களின் உள்ளத்தில் இறைவன் குடிகொண்டுள்ளான். எனவே மனிதர்களே, இறைவனின் நடமாடும் கோவில்கள்).
சிதம்பரம் கோவிலிலுள்ள ஒன்பது வாயில்களும், மனிதர்களின் உடலிலுள்ள, ஒன்பது துவாரங்கள். கோவிலின் விமானத் தின் பொன் கூரை 21,600 ஓடுகளைக் கொண் டது. இந்த ஓடுகள், மூச்சுக்காற்றைக் குறிக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vasthu_23.jpg)
அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 72,000 தங்க ஆணிகளும், மனித உடலிலுள்ள நாடி களைக் குறிக்கும். இறைவன் நடனம் புரியும், சித் சபைக்கு செல்லும் ஐந்து படிகள், மெய், வாய், கண், மூக்கு, செவியெனும், ஐந்து அங்கங் களைக் குறிக்கின்றன. மனித வாழ்க்கையை நடத்தும் தொண்ணூற்றாறு தத்துவங்கள், தொண்ணூற்றாறு ஜன்னல்களின் வடிவத்தில் உள்ளன. இறைவன், தாண்டவம் புரியும் சிற்சபையே மனம். மனமே இரகசியங்களின் சுரங்கம். நம் உடலே, நாம் வசிக்கும் வீடு, இறைவனை, மனதில் குடியமர்த்தினால், அது கோவிலாகுமென்பதே சிதம்பர இரகசியம்.
நம் வேத புராணங்களின் தத்துவமும், ஆகம விதிகளும், ஆலய நிர்மாண சிற்ப இரகசியமும், நம் மூச்சு, உடல், மனம் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் என்பதை உணர்ந்தால்தான், ஜோதிடத்தை முழுமையாக அறியமுடியும்.வலதுபுறம் ஓடும் மூச்சுக்கு, நாதம் என்ற பெயர் உண்டு. இடதுபுறம் ஓடும் மூச்சுக்கு, விந்து என்ற பெயர் உண்டு. இதுவே நாத விந்து. (நாத விந்து கலாதீ நமோநம).
"சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே'
இது, நம் பாரம்பரிய ஜோதிடத்தின் பழமொழி. பஞ்சபூத சக்திகள் அனைத்தும் சரகலையில் (மூச்சு ஜோதிடம்) தேர்ச்சி பெற்றவனின் உடல், மனம், வாக்கு மூன்றிலும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும். சர ஜோதிடமும், பஞ்ச பட்சி சாஸ்திரமும், அடிப்படையில் ஒன்றே. சர ஜோதிடம் எனும் மூச்சு ஜோதிடத்தில், உயிர் பறவையே மூச்சு, உடலென்பது, பறவையின் கூடு. உயிர் பறவை, பறந்துவிட்டால், கூடு தேவையற்றதாகிவிடும். பஞ்ச பட்சி சாஸ்திரம் தெரிந்தவரே, சர ஜோதிடத்தை அறியமுடியும். சூரியகலை, சந்திர கலையிலும், மூச்சு, ஐந்து பிரிவுகளாக ஓடுகின்றன. சூரிய கலையின் ஐந்து பிரிவுகளும், பகல்- நேர பஞ்ச பட்சிகள். சந்திர கலையின் ஐந்து பிரிவுகளும், இரவு- நேர பஞ்ச பட்சிகள். இதன் சூட்சமம், சர ஜோதிடத்தில், இரவு, பகலென்பது, இவ்வுலகில், நிகழும் இரவு, பகலுடன் தொடர்பில்லாதவை. ஒவ்வொறு மனிதனின் மனதிலும், இரவு, பகல் பொழுதும், அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளும் மாறி, மாறி நிகழ்கின்றன என்பதே உண்மை. வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில், எனும் பஞ்ச பட்சிகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் தொட்டு நிற்பவையாகும். பட்சி சாஸ்திரத்தையும், சர ஜோதிடத்தையும் கொண்டு, ஒருவனின் தலையெழுத்தையே மாற்றமுடியும். ஜோதிடம் எனும் கோட்டைக்கு, பாவ- கிரக ஜோதிடம், அங்க லட்சணம், ஹஸ்த ரேகை சாத்திரம், சர ஜோதிடம், பஞ்ச பட்சி சாத்திரம், சகுனம், நிமித்தம் போன்ற பல வாயில்கள் உள்ளன. மரபு ஜோதிடம் அண்டத்திலுள்ள கிரக சஞ்சாரங்களைக்கொண்டு பலன் உறைப்பது. சர ஜோதிடம், அங்க வித்யா, அங்க லட்சணம், ஹஸ்த ரேகை, எனும் முறைகள், ஸ்தூல உடலாகிய பிண்டத்தைக் கொண்டு கணிக்கப்படுவது.
(தொடரும்)
செல்: 63819 58636
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/vasthu-t_2.jpg)