"என்னவோ சார்... நானுந்தான் வீடு வாங்கணும்னு பார்க்கறேன்... ஒண்ணும் சரியா அமையல. இப்போ வங்கியில நிறைய கடன் தர்றாங்க. வட்டியையும் எதிர் பாராத அளவுல குறைச்சு தர்றாங்க. ப்ராசசிங் கட்டணம் கிடையாதுன்னு ஆஃபர் வேற இருக்கு...'' என்று புலம்பு பவர்கள் பலர் உள்ளனர். ஏதாவதொரு குறையுடன்தான் அநேகமாக நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் இருக்கிறார் கள்.

ஆனால் பாருங்கள்; இவர்களுடைய பிரச்சினை எல்லாவற்றுக்கும் அடிப் படையாக இருப்பது ஒன்றுதான். அது தான் பணம்!

"பணத்தை எங்கே தேடுவேன்..?' என்று என்.எஸ். கிருஷ்ணன் பாடிய பழைய சினிமா பாடல் உங்கள் நினைவுக்கு வரலாம். "அதுசரி; அந்தப் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்று கேட்பது காதில் விழுகிறது.

hh

Advertisment

"ஆமாம்' என்று சொன்னால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். கொஞ்சம் கூடவே வாருங்கள். பணம் சம்பாதிப்பதுபற்றி தெரிந்துகொள்ளலாம்.

பணம் சம்பாதிப்பது என்றதும் பலரும் கைகாட்டுவது பங்குச் சந்தையைதான். சிலர் மியுச்சுவல் ஃபண்டு என்று அந்தப் பக்கம் திரும்பி நிற்பார்கள். நிலம் ரியாட் என்று இன்னொரு பக்கம்; விவசாயம், வியாபாரம் என்று இன்னொரு பக்கம்.

இதைவிட, காலையில் பங்குச் சந்தை, மாலையில் கமாடிட்டி சந்தை, இரவில் கரன்சி சந்தை என ஒரு நாளில் இருபத்துநான்கு மணிநேரமும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பு நமக்கிருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்குதானே ஜோதிடம் உங்களை அடையாளம் காட்டித் தருகிறது.

Advertisment

உதாரணமாக, குறைந்த விலைக்கு வாங்கிய ஒரு பங்கின் விலை உயர்கிறதென்றால் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே லாபம் பெற்றுத்தரும். எந்தப் பங்கை வாங்குவது- எப்போது விற்பது என்பதில் சிலருக்கு சிக்கல், பொறுமையில்லாத தன்மை, அவசரம், பேராசை என பல கூறுகள்! இதில் எங்கே சம்பாதிப்பது? சில நூறுகளை சம்பாதித்துவிட்டு பல ஆயிரங்களை இழக்கும் புத்திசாலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

"சரி; இதற்கு என்ன செய்ய?' என்பதுதானே உங்கள் கேள்வி? கொஞ்சம் இந்தப் பக்கம் வாருங்கள்... ஜோதிடத்திலுள்ள சில நுணுக் கங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் பணப்பெட்டி நிரம்புவதற்கான சூட்சுமங்கள் புலப்படும்.

"இன்று இந்தப் பங்கை வாங்குங்கள்' என்று ஜோதிடரீதியில் குறிப்பு சொன்னால், அந்த பங்கிற்கு சந்தை நன்றாக உள்ளதென அதை வாங்கி நஷ்டமடையும் பலரையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

கிரகங்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் நகர்ந்து வரும். இந்த அமைப்பைக்கொண்டே கோட்சாரப் பலன்கள் சொல்லப்படுகின்றன என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த கோட்சாரம், நமது பிறப்பு ஜாதகத்துடன் இணைத்து கிரக இணைவுகளைப் படிக்கும்போது, அன்றைய பங்குச் சந்தை லாபம் தருமா என்று சொல்ல முடியும்.

இன்றைய பங்குச் சந்தையில் "இன்ட்ரா டே'யில் (ஒய்ற்ழ்ஹ க்ஹஹ்) எப்போது வாங்கலாம் என்பதுமுதல், இன்று எந்த செக்மென்டில் (நங்ஞ்ம்ங்ய்ற்) விளையாடவேண்டும் என்பதுவரை சொல்லமுடியும்.

"ஆஹா.. அப்படியா!' என்று கேட்கிறீர் களா? முதலில் இந்த அடிப்படையினைப் புரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் எந்தத் தொழிலாக இருந்தாலும் மூன்று பிரிவுகளில் அடக்கிவிடலாம். அதாவது, உற்பத்திசெய்து தருதல், வாங்கி விற்கும் வியாபாரச் சந்தை, மூன்றாவதாக சேவைத் தொழில்கள். இந்த அடிப்படையில் கிரகரீதியாக பிரித்துக் கொண்டுவிட்டால் மற்றவை சுலபம்.

இரும்பு என்றால் சனி, தங்கம் என்றால் குரு, வெள்ளி என்றால் சுக்கிரன் என்கிறோம்.

இதுமட்டுமல்ல. ராகுவும் புதனும் சந்திரனும் அன்றைய சந்தை நிலவரத்தை நமக்கு அடை யாளம் காட்டும்.

இதில் 2, 9, 11-ஆம் பாவங்கள் பாவாதி பாவம். அதில் தொடர்புடைய கிரகங்கள் அன்றைய கோட்சாரம். இத்துடன் 6, 8 என வரிசையாக அடுக்கினால் லாபமோ லாபம் தான்.

அதனால்தான், சந்தை உயர்ந்து வரும்; ஆனால் சிலருக்கு லாபம் உயராது. இன்னும் சிலர் நஷ்டத்தை சந்திப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம்.

ஜோதிட அடிப்படையில் ஒருவருக்கு, "நாளை சந்தை நன்றாக இருக்கும்; ஆனால் நீங்கள் நாளைக்கு இந்த சந்தையில் விளை யாடாதீர்கள்' என்று சொன்னால், நமக்கு முன்னர் சரியென்று தலையாட்டிவிட்டு, மறு நாள் நஷ்டத்தோடு நம்மைவந்து பார்ப்பார் கள். "நமது வாழ்நாள் இருக்கும்வரை சந்தை யும் இருக்கும்; இன்றே சம்பாதிக்க வேண்டு மென்று அவசியமில்லை' என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள சிலர் தயங்குவார்கள். ஜோதிடத் தின் துணையுடன், தேவையும் ஆசையும் சமநிலைப்படும்போது, ஒருவர் பங்குச் சந்தையில் நஷ்டப்பட வேண்டிய தேவையோ அவசியமோ இருக்க வாய்ப்பு குறைவு.

தாரா பலன், சந்திர பலன் பார்க்கும் பலர் பங்குச் சந்தை கோணத்தில் அன்றைய நிலவரத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பங்குகளை வாங்கவோ, அல்லது அந்தந்த செக்மென்டில் விளையாடவோ செய்தால், பங்குச் சந்தை உயர்ந்தாலும் லாபமே- குறைந்தாலும் லாபமே என்பதில் சந்தேகம் வேண்டாம்.

இதை சரியாகப் புரிந்துகொண்டால் "பணம் சம்பாதிக்கத் தெரியுமா?' என்று நீங்கள் அடுத்தவர்களைக் கேட்கலாம்.

செல்: 94443 27172