சகுனி கரணம்
காரியங்களை கைகூடச் செய்யும் காரணத்தின் சூட்சமங் களைக் கண்டுவருகின்றோம்.
அந்த வரிசையில் 11 கரணங்களில் எட்டாவதாக அமைந்துள்ளது சகுனி என்கின்ற இந்த கரணம்.
சகுனி என்னும் வார்த்தைக்கு ஆந்தை என்னும் பொருள் உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karankal.jpg)
பெயருக்கு ஏற்றாற்போலவே எல்லாவித சூழ்ச்சியையும் மகா பாரதத்தில் நிகழ்த்துகின்ற எட்டாவ தாகப் பிறந்த சகுனியின் குணத் தோடு இணைந்தே இந்த கரணத்தின் மனோநிலையும் அமைந்துள்ளது.
இது கரணங்களில் அசுப கரணமாக உள்ளது.
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாகவும், அமைதியான புத்திசாலித்தனத்தோடும், சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர்.
சகுனி கரணம் நீதி மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் குறிக்கிறது.
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் ஆய்வாளர்களாகவும், நீதித்துறை யில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர்களாகவும், சனி பகவா னின் தன்மை அமையப்பெற்றவர் களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு உள்ளுணர்வு சற்று அதிகமாக இருக்கும். எந்த பிரச்சினையாக இருந் தாலும் அதனை அதிநுட்ப மாகக் கையாளும் திறன் பெற்றவர்கள். மிகவும் பக்குவம் அடைந்த மனிதர்கள் இவர்கள்.
ஜாதகத்தில் மிக நுட்பமான நிலையான திதி சூனியம் என்கின்ற அமைப்பு இந்த கரணத்தில் பிறந்தவர்களிடம் அதிக மாக செயல்பட்டு அதன் சாதகத்தையும், பாதகத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக் கிறது.
இவர்களில் பலர் தவறுக்கு தண்டனையளிக்கும் சூழலான சிறைச்சாலைப் பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் எடிட்டிங், ப்ரூப் ரீடிங் போன்ற சீர்திருத்தம், பிழையகற்றும் துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி மிளிர்கின்றனர்.
இவர்களின் வாழ்வியல் பயணத்தில் தனக்குகீழ் வேலை செய்யும் வேலையாட் களாக இருந்தாலும் சரி; மேலதிகாரிகளாக இருந்தாலும் சரி- இவர்களுடன் ஒத்து வருவதே கிடையாது என்பது பலவிதத்தில் புலனாகின்றது.
விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்தாலும் பெரிதாகத் தன்னை வெளிப்படுத்தும் தன்மை இவர்களுக்கு இருக்காது.
மனரீதியாக ஒருவர் செய்யும் தவறை வஞ்சம் வைத்துப் பழிதீர்க்கும் கரணமாக இது அமைந்துள்ளது.
சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் கலகம் செய்வதில் முதலாவதாக இடம்பெறுகின்ற னர். மேலும் முடிவுபெறாத பஞ்சாயத்து, வழக்கு போன்றவற்றை இவர்களின் துணையோடு அணுகினால் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதே உண்மை.
இந்த கரணத்தில் பிறந்தவர்களின் வம்சாவளியில், ஒரு அடிமைப்பட்ட தொழிலாளிக்கு தீங்கிழைக்கப்பட்டிருக்கும்.
அவ்வளவு எளிதில் இவர்கள் யாரையும் நம்புவதில்லை. அது மட்டுமல்லாமல் பகிர்வு, பகிர்ந்து உண்ணுதல் என்கின்ற மிகப்பெரிய நற்குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
தனக்குப் பிடித்தவரை தன்னுடன் இணக்கமாக வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்கு முரண்பட்டவர்களை ஒரு வழி செய்துவிடுவார்கள்.
இந்த கரணநாதன் வழிபாடென்பது கரணநாதன் கோவிலுக்குச் சென்று திரும்பியதும் அருளை வாரிவழங்கிவிடும் என்னும் எண்ணம் வேண்டாம். இவற்றுக்குள் பொதித்து வைக்கப்பட்டுள்ள அதிசூட்சுமம் வாய்ந்த தூபம், பாத்திரம், நைவேத்தியம், உருவப்படம், மலர்கள் போன்றவற்றை அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும்பொழுதுதான் பல இன்னல் களும், கடினமான சூழலும் நம்மைவிட்டு விலகும்.
தனிப்பட்ட ஜாதகத்தில் கரணநாதன் பலமாக இருந்துவிட்டால் சிறப்பு. ஆனால் பலவீனப்பட்டுவிட்டால் அதாவது 6, 8, 12-ல் அமர்வது, நீசமாவது போன்றவை நிகழ்ந்திருந்தால் கரணநாதன் வழிபாட்டை மிக சிரத்தையாக மேற்கொள்வதன்மூலமே சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை மனதில் நிறுத்துவது சிறப்பு.
அதிதேவதை- மகாவிஷ்ணு
மிருகம்- காக்கை
மலர்- நீல சங்குப்பூ அல்லது செண்பகப்பூ
நைவேத்தியம்- வெல்லம்
தூபம்- அகில்
பாத்திரம்- கல்லாலான பாத்திரம்
தெய்வம்- திருநள்ளாறு சனீஸ்வரர்
இவர்கள் தினமும் காகத்திற்கு உணவிடுவது பிரச்சினையிலிருந்து இவர்களை விடுவிக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் நீலநிற சங்குப் பூவை கொதிக்கவைத்து அதில் சிறிது நாட்டுச் சர்க்கரையும் சில சொட்டுகள் எலுமிச்சை சாறையும் கலந்து தினமும் அருந்திவர மனரீதியான முடிவுகள் சிறப்பாகக் கைகொள்ள முடியும்.
வீட்டில் வழிபடும் தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு கல்லாலான பாத்திரத்தில் வெல்லம் வைத்து வழிபடுவது சிறப்பு.
இவர்களின் கைபேசியில் ஒரு காக்கையின் உருவப்படத்தை ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்வது சிறப்பை நல்கும்.
மேலும் வீட்டில் அகில் கொண்டு தூபம் போடுவது மிகுந்த சுபிட்சத்தை அளிக்கும்.
இவர்களுக்கு திருநள்ளாறு தர்ப்பாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சனிக்கிழமை அல்லது சகுனி கரணம் வரும் நாளில் பாக்கு மட்டைத் தட்டில் 11 கமலா ஆரஞ்சு, 11 வெற்றிலை, 11 பாக்கு மற்றும் தட்சணைகளுடன் வழிபட்டுவர எல்லா சிறப்புகளும் வந்தடையும்.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/karankal-t.jpg)